2019-20ஆம் ஆண்டிற்கான நிதிநிலை அறிக்கை பிப்ரவரி மாதம் தாக்கல் செய்யப்பட்டநிலையில் சட்டப்பேரவைக் கூட்டத் தொடர் தேதி குறிப்பிடாமல் ஒத்திவைக்கப்பட்டது. இந்நிலையில், பேரவைக் கூட்டம் ஜூன் 28 ஆம் தேதி கூடவுள்ள நிலையில் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி தலைமையில் இன்று அமைச்சரவைக் கூட்டம் தொடங்கி நடைபெற்று வருகிறது.
சென்னை தலைமைச் செயலகத்தில் நடைபெறும் இக்கூட்டத்தில், மானியக் கோரிக்கைகள் மீதான விவாதம், தலைவிரித்தாடும் தண்ணீர் பஞ்சம், எதிர்க்கட்சிகள் எழுப்பும் பல்வேறு கேள்விகளை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என்பன உள்ளிட்டவை குறித்து விவாதிக்கப்படுவதாக தெரிகிறது.