இது குறித்து அவர், 'தென்னக ரயில்வேயின் மேலாளர், இந்தியிலும் ஆங்கிலத்திலும் மட்டும்தான் அந்தத் துறை சார்ந்த தொடர்பு செய்தி இருக்க வேண்டும் என சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். தென்னக ரயில்வேக்கு தமிழ் மீதும், தமிழர்கள் மீதும் என்ன காழ்ப்புணர்ச்சி. மெதுவாக இந்தியை நுழைக்கின்ற மும்மொழிக் கொள்கைக்கு கடுமையான எதிர்ப்பை தமிழ்நாடு பதிவு செய்தது. அதனைத் தொடர்ந்து இதுபோன்று இந்தியை நுழைக்க முயற்சி செய்கிறார்கள்.
தமிழ்நாட்டில் இருந்துகொண்டு தமிழால் உங்களுக்கு தொலைதொடர்பில் என்ன குறை வந்துவிடப்போகிறது. இந்தியையும் ஆங்கிலத்தையும் மட்டும்தான் பயன்படுத்த வேண்டும் என்பது அநியாயமான விஷயம், இதை எதிர்த்து திமுக நிச்சயமாக குரல்கொடுக்கும்' என்றார்.
மேலும் அவர், மொழி என்பது வெறும் தொலைதொடர்புக்கான கருவி அல்ல, அது நம் பண்பாடோடு, உலவியலோடு தொடர்புடையது எனத் தெரிவித்தார். ஆகவே மத்திய அரசு இந்தப் போக்கை நிச்சயமாக கைவிட வேண்டும் எனக் கேட்டுக் கொண்டார். தமிழர்களின் உணர்வை மத்திய அரசு மதிக்க வேண்டும் எனக் குறிப்பிட்ட அவர், தமிழர்களாகிய நாம் மத்திய அரசாங்கத்தின் போக்குக்கு மிகக் கடுமையான எதிர்ப்பை பதிவுசெய்ய வேண்டிய நேரமிது என்றார்.
இதையடுத்து, எதிர்ப்புகள் வலுத்ததால் ரயில்வே நிர்வாகம் தான் அனுப்பிய சுற்றறிக்கையை திரும்பப் பெற்றுக்கொண்டது.