சென்னை: குமரிக் கடலில் நிலவிய வளிமண்டல கீழடுக்கு சுழற்சி காரணமாக திருநெல்வேலி, தூத்துக்குடி, கன்னியாகுமரி, தென்காசி ஆகிய 4 மாவட்டங்களில் 16ஆம் தேதி முதல் 18ஆம் தேதி வரை அதிகனமழை பெய்தது.
-
தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் தலைவாஸ் #கபடி player மாசானமுத்துவின் வீடு வெள்ளத்தில் இடிந்து விட்டது. பெற்றோருக்கு உதவ இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், விளையாட்டின் மூலம் அவர்களது வேதனையை குறைக்க உறுதி பூண்டுள்ளார். #நம்மோடஆட்டம் #நம்மமண்ணோடஆட்டம்
— T.N. Raghu (@tnrags) December 21, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
@StarSportsTamil pic.twitter.com/bL6KXZi19s
">தூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் தலைவாஸ் #கபடி player மாசானமுத்துவின் வீடு வெள்ளத்தில் இடிந்து விட்டது. பெற்றோருக்கு உதவ இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், விளையாட்டின் மூலம் அவர்களது வேதனையை குறைக்க உறுதி பூண்டுள்ளார். #நம்மோடஆட்டம் #நம்மமண்ணோடஆட்டம்
— T.N. Raghu (@tnrags) December 21, 2023
@StarSportsTamil pic.twitter.com/bL6KXZi19sதூத்துக்குடியைச் சேர்ந்த தமிழ் தலைவாஸ் #கபடி player மாசானமுத்துவின் வீடு வெள்ளத்தில் இடிந்து விட்டது. பெற்றோருக்கு உதவ இயலவில்லை என்ற வருத்தம் இருந்தாலும், விளையாட்டின் மூலம் அவர்களது வேதனையை குறைக்க உறுதி பூண்டுள்ளார். #நம்மோடஆட்டம் #நம்மமண்ணோடஆட்டம்
— T.N. Raghu (@tnrags) December 21, 2023
@StarSportsTamil pic.twitter.com/bL6KXZi19s
இந்த மழை காரணமாக, தாமிரபரணி மற்றும் அதன் கிளை ஆறுகளில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. இதனால் திருநெல்வேலி மற்றும் தூத்துக்குடி மாவட்டங்கள் கடுமையாக பாதிப்பட்டதால், மக்களின் இயல்பு வாழ்க்கை முற்றிலும் பாதிக்கப்பட்டது. அதேபோல் அப்பகுதி மக்கள் தங்களது வீடுகள் மற்றும் வாழ்வாதாரங்களை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்த நிலையில், இந்தியாவில் நடைபெற்று வரும் புரோ கபடி(Pro Kabaddi) தொடரின் தமிழ் தலைவாஸ் அணியின் வீரரும் தூத்துக்குடியை சேர்ந்தவருமான மாசானமுத்துவின் வீடும் கனமழையால் இடிந்து விழுந்துள்ளது. அவர்களது குடும்பத்தினர் பாதுகாப்பாக இருந்தாலும், அவர்கள் தங்களது வீட்டை இழந்து தவித்து வருகின்றனர்.
இந்நிலையில், கபடி வீரர் மாசானமுத்து, இப்படியான சூழலில், அங்கு இருந்து தன் பெற்றோருக்கு உதவ முடியவில்லை என வருத்தம் தெரிவித்துள்ளார். இது குறித்து அவர் அவர் பேசுகையில், "மழை வெள்ளத்தால் தூத்துக்குடி மக்கள் மிகவும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். மழை வெள்ளத்தில் ஏராளமான வீடுகள் இடிந்துவிட்டன. அதில் எங்கள் வீடு மட்டும் அதன் அருகில் இருந்த உறவினர்களின் வீடுகளும் இடிந்ததால் அதனால் அவர்கள் ஒரு பள்ளியில் உள்ள முகாமில் பாதுகாப்பாக தங்க வைக்கப்பட்டுள்ளனர்.
இது எனது முதல் சீசன். நான் கபடி விளையாடுவதை என் பெற்றோர் மற்றும் ஊர்மக்கள் பார்க்க வேண்டும் என்று ஆசைப்பட்டனர். ஆனால், மழை வெள்ளத்தால் அவர்களால் நான் விளையாடும் போட்டியை பார்க்க முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. இதை நினைக்கும் போது மிகவும் வருத்தமாக உள்ளது. அதோடு நான் அங்கு சென்று வீட்டின் நிலைமை சரி செய்ய வேண்டும் என்று நினைக்கிறேன்" என்று வேதனயோடு கூறியுள்ளார்.
புரோ கபடி லீக்: புரோ கபடி லீக்கின் 10ஆவது சீசன் அகமதாபாத்தில் டிசம்பர் 2ஆம் தேதி தொடங்கியது. இதில், தமிழ் தலைவாஸ், தெலுங்கு டைட்டன்ஸ், பெங்களூரு காளைகள், தபாங் டெல்லி, குஜராத் ஜெயிண்ட்ஸ், பாட்னா பைரேட்ஸ், யு மும்பா, யுபி யோதாஸ், புனேரி பால்தான், பெங்கால் வாரியர்ஸ், ஹரியானா ஸ்டீலர்ஸ், ஜெய்ப்பூர் பிங்க் பாந்தர்ஸ் உள்ளிட்ட 12 அணிகள் இடம் பெற்று விளையாடி வருகின்றன.
தமிழ் தலைவாஸ் அணியில் தமிழகத்தைச் சேர்ந்த தூத்துக்குடி வீரரான மாசானமுத்து லக்ஷ்மணன் என்ற வீரரும் இடம் பெற்று விளையாடி வருகிறார். இந்நிலையில், இன்று (டிச.22) வெள்ளிக்கிழமை சென்னை நேரு உள்விளையாட்டு அரங்கில், தமிழ் தலைவாஸ் மற்றும் பாட்னா பைரேட்ஸ் அணிகள் மோதும் போட்டி இரவு 8 மணிக்கு நடைபெறவுள்ளது குறிப்பிடத்தக்கது.
இதையும் படிங்க: இந்தியா - தென் ஆப்பிரிக்கா டெஸ்ட் தொடர்; தாயகம் திரும்பும் விராட் கோலி!