ETV Bharat / state

புலவர் நன்னன் : தமிழுக்கும், தமிழ் சமூகத்திற்கும் தொண்டாற்றிய தமிழறிஞர்!

புலவர் நன்னனின் படைப்புகள் இன்று நாட்டுடைமையாக்கப்பட்டுள்ள நிலையில், அவர் தமிழ் மொழிக்கும், தமிழ் சமூகத்திற்கும் ஆற்றிய பணிகள் குறித்தும், அவரது படைப்புகள் குறித்தும் இந்த செய்தித் தொகுப்பில் காண்போம்...

Tamil scholar
புலவர் நன்னன்
author img

By

Published : Aug 14, 2023, 10:42 PM IST

சென்னை: வாழ்நாள் முழுவதும் தமிழை தனது முழுமூச்சாகக் கொண்டு வாழ்ந்தவர் புலவரும் முதுபெரும் தமிழ் அறிஞருமான மா.நன்னன். இவர், கடலூர் மாவட்டம் விருத்தாசலத்தை அடுத்த சாத்துகுடல் என்னும் ஊரில், கடந்த 1924ஆம் ஆண்டு ஜூலை 30ஆம் தேதி பிறந்தார். இவரது இயற்பெயர் திருஞானசம்பந்தன். தமிழ் மீது கொண்ட பற்றால் தனது பெயரை நன்னன் என மாற்றிக் கொண்டார்.

தமிழை வடமொழி கலப்பு இல்லாமல் அடுத்த தலைமுறையிடம் கொண்டு செல்ல வேண்டும், எளிய முறையில் சாதாரண மக்களும் தமிழை புரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக அயராது பாடுபட்டவர். தொடக்கப்பள்ளி ஆசிரியராகப் பணியைத் தொடங்கிய இவர், ஆசிரியராகப் பணியாற்றிக் கொண்டே தமிழில் முதுகலை பட்டம் பெற்றார்.

பிறகு, சிதம்பரம் அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் புலவர் பட்டம் பெற்ற இவர், தொல்காப்பியம் பற்றி ஆய்வு செய்து, முனைவர் பட்டத்தையும் பெற்றார். பள்ளி ஆசிரியராகத் தொடங்கி, கல்லூரியில் பேராசிரியராக இருந்து, தமிழ்நாடு அரசின் தமிழ் வளர்ச்சித் துறை இயக்குநராக உயர்ந்தார். ஓய்வு பெற்ற பிறகு நேரடியாகவே தமிழ்த் தொண்டு ஆற்றினார்.

பொதிகைத் தொலைக்காட்சியில் "எண்ணும் எழுத்தும்" என்ற தலைப்பில் சுமார் 17 ஆண்டுகள், எளிய முறையில் சாமானிய மக்களுக்கும் தமிழையும், அதன் இலக்கணத்தையும் எடுத்துச் செல்லும் வகையில் கற்பித்தல் சேவையை செய்தார். எழுத்தறிவித்தலில் 'நன்னன் முறை' என்ற புதிய முறையையே உருவாக்கியவர்.

படைப்புகளும், கொள்கைகளும்: 1990ஆம் ஆண்டு முதல் 2000ஆம் ஆண்டு வரையிலான பத்து ஆண்டுகளில் மட்டுமே சுமார் 70 நூல்களை எழுதியுள்ளார். 'எல்லோருக்கும் தமிழ்', 'தவறின்றி தமிழ் எழுதுவோம்', 'தமிழ் எழுத்தறிவோம்', 'கல்விக்கழகு கசடற எழுதுதல்', 'உரைநடையா? குறைநடையா?' ஆகிய நூல்கள் அவரது படைப்புகளில் முக்கியமானவை.

பெரியார் மீதும் அவரது கொள்கைகள் மீது தீவிர பற்று கொண்டிருந்தவர் நன்னன். கடவுள் மறுப்பு, பகுத்தறிவு, கலப்பு திருமணம், எழுத்துச் சீர்திருத்தம் ஆகியவற்றை ஆதரித்தார். பெரியாரிய சிந்தனைகளை ஆதரித்த நன்னன், சமூகம் சார்ந்த நூல்களையும் எழுதியுள்ளார். அவற்றில், பெரியாரைக் கேளுங்கள் என்ற நூல், தமிழ் வளர்ச்சித் துறையின் 2009ஆம் ஆண்டுக்கான சிறந்த நூல்களில் சமூகவியல் பிரிவில் பரிசு பெற்றது. 'இவர்தாம் பெரியார்', 'பெரியார் கணினி' ஆகிய நூல்களை எழுதினார். மேலும், "பெரியாரியல்" என்ற பெயரில் மொழி, இலக்கியம், கல்வி உள்ளிட்ட பல தலைப்புகளில் புத்தகங்களை எழுதியுள்ளார்.

ஆங்கிலேயர்கள் காலத்தில் 'வெள்ளையனே வெளியேறு' போராட்டத்திலும், திராவிட இயக்க உணர்வு பெற்ற பிறகு, இந்தி திணிப்பு எதிர்ப்பு போராட்டங்களிலும் பங்கேற்றார். ரயில் நிலையங்களில் இருந்த பெயர்ப்பலகைகளில் இந்தி எழுத்துக்களை அழித்து போராடியபோது, கைதாகி சிறை சென்றார். சமூகம், அரசியல் உள்ளிட்டவை குறித்து பல மேடைகளில் பேசியுள்ளார்.

நாட்டுடைமையாக்கப்பட்ட நன்னன் நூல்கள்: பொதுவாக மக்களுக்கு விழிப்புணர்வு ஏற்படுத்தும் வகையிலும், சமுதாய வளர்ச்சிக்குப் பயன்படும் வகையிலான புத்தகங்கள் அரசால் நாட்டுடைமையாக்கப்படும். மேலும், மறைந்த புகழ் பெற்ற அறிஞர்களைப் போற்றும் வகையிலும், அவர்கள் எழுதிய நூல்கள் உலகமெங்கும் செல்ல வேண்டும் என்ற நோக்கத்திலும் நூல்கள் நாட்டுடைமையாக்கப்படும்.

அந்த வகையில், தமிழ் மொழி வளர்ச்சி, சமுதாய முன்னேற்றம் ஆகியவற்றை நோக்கமாகக் கொண்ட புலவர் நன்னனின் நூல்கள் மக்களைச் சென்றடையும் வகையிலும், அவரைப் போற்றிடும் வகையிலும் அவரது நூல்கள் தமிழ்நாடு அரசு சார்பில் நாட்டுடைமையாக்கப்படும் என முதலமைச்சர் ஸ்டாலின் அண்மையில் அறிவித்தார்.

பேராசிரியர் நன்னனின் நூற்றாண்டு நிறைவு விழாவில் இந்த அறிவிப்பை வெளியிட்டார். அதன்படி, இன்று(ஆகஸ்ட் 14) தமிழ் வளர்ச்சித் துறை சார்பில், பேராசிரியர் மா. நன்னனின் நூல்கள் அனைத்தும் நாட்டுடைமையாக்கப்பட்டு, நூலுரிமைக்கானத் தொகை அவரது துணைவியார் பார்வதி அம்மாளிடம் வழங்கப்பட்டுள்ளது.

எழுத்தால் மட்டுமல்ல பேச்சாலும் ஈர்த்தவர் : புலவர் நன்னன் பற்றி, அவருடன் நீண்ட கால பழக்கம் கொண்ட திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி கூறுகையில், "நன்னனுக்கும் எனக்கும் கிட்டத்தட்ட 50 ஆண்டுகள் பழக்கம். அவரது எழுத்தைக் காட்டிலும், அவரது பேச்சால் ஈர்க்கப்பட்டவர்களில் நானும் ஒருவன். ஒரு எழுத்தாளர் தன்னை எப்படி வெளிப்படுத்திக் கொள்ள வேண்டும் என்பதற்கு சிறந்த உதாரணம் நன்னன். பல இடங்களில் அவரின் பேச்சை கேட்டு வியந்துள்ளேன்.

குறிப்பாக நிகழ்ச்சிகளில் பேசும்போது பெண்களுக்கான உரிமையை எடுத்து கூறுவதிலும், அவர் சொல்கின்ற கருத்து எதிர் இருப்பவர் மறுத்து பேச முடியாத அளவிற்கு இருக்கும். புலவர் நன்னனோடு பயணித்தது தொடர்பாக ஏராளமான நினைவுகள் எனக்கு இருக்கின்றன. தமிழ் சமுகத்திற்கு பல நல்ல படைப்புகளை கொடுத்ததால் மட்டுமல்ல, தமிழ் நல்லுலகிற்கு தன்னையே கொடுத்து, தவிர்க்க முடியாத அடையாளமாகி போனவர் நன்னன்" என்று தெரிவித்தார்.

தமிழுக்காகவும், தமிழ் சமூகத்திற்காகவும் தொண்டாற்றிய தமிழ் அறிஞர் நன்னன், தமிழ் மொழி இருக்கும் வரை நிலைத்திருப்பார்...

இதையும் படிங்க: ‘நன்னன் புத்தகங்கள் நாட்டுடமை ஆக்கப்படும்’ - முதலமைச்சர் ஸ்டாலின் அறிவிப்பு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.