ETV Bharat / state

தமிழ்நாடு கால்நடை மருத்தவ அறிவியல் பல்கலைக்கழகத்துக்கு ரூ.2.50 கோடி ஒதுக்கீடு - மருத்துவ அறிவியல்

தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுப்பிடிப்புகள் மற்றும் கருவி மயமாக்கல் மையத்தின் வசதிகள் ரூ.2 கோடியே 50 லட்சம் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும் என புதிய அறிவிப்பு வெளியாகியுள்ளது.

அனிதா ராதாகிருஷ்ணன்
அனிதா ராதாகிருஷ்ணன்
author img

By

Published : Aug 29, 2021, 1:58 AM IST

சென்னை : தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலைக்கழகத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவி மயமாக்கல் மையத்தின் வசதிகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படவுள்ளன.

இது தொடர்பாக கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 2021-2022ஆம் ஆண்டிற்கான 16 புதிய வெளியீடுகள் வருமாறு.

  1. கால்நடைகளில் நலனை பாதுகாக்க அனைத்து கிராம ஊராட்சிகளிலும் 7 கோடியே 76 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 7760 கால்நடை சுகாதார முகாம்கள் நடத்தப்படும்.
  2. தொலைதூர கிராமங்களில் வளர்க்கப்படும் கால்நடைகளுக்கு முதலுதவி, செயற்கை முறை கருவூட்டல் தடுப்பூசி, குடற்புழு நீக்கம் ஆகிய சேவைகளை வழங்க 2 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 50 புதிய கால்நடை கிளை நிலையங்கள் தோற்றுவிக்கப்படும்.
  3. கால்நடைகள் மற்றும் கோழி இனங்களில் உடல் நலத்தைப் பேணவும், மருத்துவ சிகிச்சை வழங்கவும், சிறந்த கால்நடை வளர்ப்பு முறைகளை கால்நடை வளர்ப்போர் அறிந்து கொள்ளவும் 3 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 25 கால்நடை கிளை நிலையங்கள் கால்நடை மருந்தகங்களாக தரம் உயர்த்தப்படும்.
  4. ஏழ்மை நிலையிலுள்ள கணவனை இழந்த கைவிடப்பட்ட மற்றும் ஆதரவற்ற 38 ஆயிரத்து 800 பெண்களுக்கு 75 கோடியே 63 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் பயனாளி ஒருவருக்கு தலா ஐந்து செம்மறி ஆடுகள் அல்லது வெள்ளாடுகள் வழங்கப்படும்.
  5. கால்நடை மருத்துவ நிலையங்களில் உள்கட்டமைப்பு வசதிகளை மேம்படுத்தும் விதமாக 85 கால்நடை மருத்துவ நிலையங்களுக்கு 54 கோடி ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
  6. அரியலூர், கன்னியாகுமரி, ராமநாதபுரம் மாவட்டங்களில் உள்ள கால்நடை நோய் புலனாய்வு பிரிவுக்கு 3 கோடியே 46 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் புதிய கட்டடங்கள் கட்டப்படும்.
  7. மாநிலத்தில் பசுந்தீவன இருப்பை அதிகரிப்பதற்காக 4 கோடியே 82 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் 18 தீவன வங்கிகள் நிறுவப்படும்.
  8. நாட்டுக்கோழி உற்பத்தியினை அதிகரிக்க நாட்டுக்கோழி இனப்பெருக்க பண்ணை மற்றும் கோழி குஞ்சு பொரிப்பகம் 9 கோடியே 42 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் திருநெல்வேலி மாவட்டம் அபிஷேகபட்டி மாவட்ட கால்நடை பண்ணையில் நிறுவப்படும்.
  9. விலங்குகளில் இருந்து மனிதர்களுக்கு பரவும் நோயை தடுப்பது மற்றும் கட்டுப்படுத்துவதற்காக வெறிநோய் தடுப்பூசி முகாம்கள் மற்றும் விழிப்புணர்வு பரப்புரை 77 லட்சத்து 36 ஆயிரம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நடத்தப்படும்.
  10. செல்லப்பிராணிகள் மருத்துவத்தில் உயர் ஆராய்ச்சி நவீன நோய் கண்டறிதல் மற்றும் சிகிச்சை முறைகளையும் மருத்துவ கல்வியையும் சர்வதேச தரத்தில் வழங்க செல்லப் பிராணிகளுக்கான பன்நோக்கு கால்நடை மருத்துவமனை (முதல் நிலை) மற்றும் ஆராய்ச்சி மையம் சென்னை நந்தனத்தில் 7 கோடியே 99 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் ஏற்படுத்தப்படும்.
  11. தமிழ்நாட்டின் வடமேற்கு மண்டலங்களில் நிலையான கால்நடை உற்பத்திக்காக தீவன விதை உற்பத்திப் பிரிவு 1 கோடியே 49 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.
  12. தர்மபுரி மாவட்டத்தில் திருச்சி கருப்பு செம்மறி ஆட்டின ஆராய்ச்சி நிலையம் ஒரு கோடியே 80 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் அமைக்கப்படும்.
  13. மாதவரம் கோழியின ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாட்டின் சிறுவிடை கோழியின வள மையம் 1 கோடியே 52 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.
  14. தஞ்சாவூர் மாவட்டம் ஒரத்தநாடு கால்நடை மருத்துவக் கல்லூரி மற்றும் ஆராய்ச்சி நிலையத்தில் தமிழ்நாட்டின் பட்டன செம்மறியாட்டின் வள மையம் ஒரு கோடியே 97 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.
  15. தமிழ்நாடு கால்நடை மருத்துவ அறிவியல் பல்கலை கழகத்தின் புதிய கண்டுபிடிப்புகள் மற்றும் கருவி மயமாக்கல் மையத்தின் வசதிகள் 2 கோடியே 50 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் மேம்படுத்தப்படும்.
  16. தமிழ்நாட்டின் தென்மாவட்டங்களுக்கு விலங்கு வழி பரவும் நோயறி ஆய்வகம் மற்றும் சுகாதார தளம், திருநெல்வேலி கால்நடை மருத்துவ கல்லூரி மற்றும் ஆராய்ச்சி மையத்தில் 1 கோடியே 61 லட்சம் ரூபாய் நிதி ஒதுக்கீட்டில் நிறுவப்படும்.

இவை கால்நடை பராமரிப்பு துறை அமைச்சர் அனிதா ராதாகிருஷ்ணனின் 2021-2022ஆம் ஆண்டிற்கான 16 புதிய வெளியீடுகள் ஆகும்.

இதையும் படிங்க : கால்நடை உதவி மருத்துவர்கள் போராட்டம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.