ETV Bharat / state

TN School Holiday: பள்ளி மாணவர்களுக்கு நாளை முதல் சம்மர் லீவு.. மீண்டும் பள்ளிகள் திறப்பு எப்போது? - Tamil Nadu Govt

தமிழ்நாட்டில் மாநில கல்வி திட்டத்தில் கல்வி பயிலும் 1 முதல் 9-ம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை(ஏப்ரல் 29) முதல் கோடை விடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது.

school education department announced summer vacation for students studying up to ninth standard from tomorrow
ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு நாளை முதல் கோடை விடுமுறை வழங்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை அறிவித்துள்ளது
author img

By

Published : Apr 28, 2023, 12:52 PM IST

சென்னை: பத்தாம் வகுப்பு, பதினோராம் வகுப்பு மற்றும் பன்னிரெண்டாம் வகுப்பு மாணவர்களுக்கு பொதுத்தேர்வு முடிவடைந்த நிலையில் விடுமுறை அளிக்கப்பட்டுள்ளது. தமிழ்நாடு முழுவதும் 6 முதல் 9-ஆம் ஒன்பதாம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு இம்மாதம் 24 ஆம் தேதி துவங்கி, மாத இறுதிவரை ஆண்டு இறுதி தேர்வுகளை நடத்த பள்ளிக்கல்வித்துறை ஏற்கனவே திட்டமிடப்பட்டிருந்தது. வெயில் காரணமாக தேர்வுகள் முன்கூட்டியே துவங்கப்பட்டது.

இந்த நிலையில் பள்ளி கல்வித்துறை ஆணையர் மற்றும் தொடக்க கல்வித்துறை இயக்குனர் இணைந்து வெளியிட்டிருந்த அறிவிப்பில், "1 முதல் 3-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு ஏப்ரல் 17 முதல் 21-ஆம் தேதிக்குள் ஆண்டு இறுதித்தேர்வை நடத்தி முடிக்க வேண்டும். 4 ஆம் வகுப்பு முதல் 9-ஆம் வகுப்பு வரை பயிலும் மாணவர்களுக்கு ஏப்ரல் 10-ஆம் தேதி முதல் 28-ஆம் தேதிக்குள் தேர்வை நடத்தி முடித்திருக்க வேண்டும் எனவும், தமிழகத்தில் பள்ளி கடைசி வேலை நாள் ஏப்ரல் 28-ஆம் தேதி" என அறிவித்திருந்தனர்.

ஏற்கனவே பள்ளிக்கல்வித்துறையில் நிரந்தர ஆசிரியர்கள் பணியில் இல்லாமல், தற்காலிகமாக நியமிக்கப்பட்ட ஆசிரியர்களுக்கு பள்ளி இறுதி வேலை நாள் வரை பணிக்கு அனுமதிக்க வேண்டும் எனவும் உத்தரவிட்டிருந்தனர். வெயில் தாக்கம் அதிகம் இருக்கும் பொழுது அது குறித்து பரிசீலித்து மாணவர்களின் நன்மை கருதி முன்கூட்டியே தேர்வு நடத்தி விடுமுறை அறிவிப்பது குறித்து ஆலோசிக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி ஏற்கனவே அறிவித்திருந்தார்.

இந்நிலையில் பள்ளிக் கல்வித் துறையால் வெளியிடப்பட்ட நாட்காட்டி அடிப்படையிலேயே ஆண்டு முழுவதும் 210 வேலை நாட்களுக்கு பள்ளி வகுப்புகள் நடத்தப்பட்டு கோடை விடுமுறை மாணவர்களுக்கு அறிவிக்கப்பட்டுள்ளது. மேலும் கோடை விடுமுறை காலத்தில் ஆசிரியர்கள் தங்களின் சொந்த ஊர்களுக்கு செல்லும் வகையில் விடுமுறை ஏற்கனவே வழங்கப்பட்டு வந்தது. அதனை மாற்றி ஆசிரியர்களுக்கான பணியிடை பயிற்சியை கோடை விடுமுறையில் வழங்கவும் மாநில கல்வியியல் ஆராய்ச்சி மற்றும் பயிற்சி நிறுவனம் முடிவு செய்துள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன.

இந்நிலையில் 9-ஆம் வகுப்பு வரையிலான மாணவர்களுக்கு நாளை (ஏப்ரல் 29) முதல் சுமார் ஒரு மாத காலத்திற்கு கோடை விடுமுறை அளிக்கப்படுவதாக பள்ளிக்கல்வித்துறை சார்பில் தெரிவிக்கப்பட்டு உள்ளது. பள்ளிக்கல்வித்துறையின் இந்த அறிவிப்பினால் மாணவர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர். மேலும் கோடை விடுமுறை முடிந்து 6 முதல் 12ம் வகுப்பு வரை ஜூன் 1-ஆம் தேதியும், 1 முதல் 5ம் வகுப்பு வரை ஜூன் 5ம் தேதி பள்ளிகள் திறக்கப்படும் என பள்ளி கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி அறிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: தமிழ்நாட்டில் கோதுமை தட்டுப்பாட்டை போக்க 15 ஆயிரம் மெட்ரிக் டன் கொள்முதல் - அமைச்சர் சக்கரபாணி

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.