ETV Bharat / state

அம்பேத்கரை இன்னொரு ஜின்னாவாக மாற்ற முயன்ற பிரிட்டிசார் - ஆளுநர் ஆர்.என்.ரவி பேச்சு - ஆளுநர் ஆர்என்ரவி பேச்சு

ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் அரசியல் நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் எல்லை மீறல்கள் குறைந்துள்ளதாக தமிழ்நாடு ஆளுநர் ஆர்.என். ரவி தெரிவித்தார். மேலும் அவர் பிரிட்டிசார் அம்பேத்கரை இன்னொரு ஜின்னாவாக மாற்றமுயன்றனர், ஆனால் அதற்கு அவர் இடம்கொடுக்கவில்லை எனப் புகழாரம் சூட்டினார்.

ஆளுநர் ஆர்.என்.ரவி
ஆளுநர் ஆர்.என்.ரவி
author img

By

Published : Dec 6, 2022, 9:48 PM IST

Updated : Dec 7, 2022, 4:39 PM IST

சென்னை: சட்டமேதை அம்பேத்கரின் 66-வது நினைவு நாளை முன்னிட்டு சென்னை ராஜ் பவனில் உள்ள ஆளுநர் மாளிகையில் நிறுவப்பட்டுள்ள அம்பேத்கரின் சிலையை ஆளுநர் ஆர்.என்.ரவி திறந்து வைத்தார்.

நிகழ்ச்சியில் பேசிய மத்திய இணை அமைச்சர் எல்.முருகன், ஆளுநர் மாளிகையில் அம்பேத்கர் சிலை நிறுவப்பட்டது வரலாறு என்றும், அங்கீகாரத்திற்காக போராடிய அம்பேத்கருக்கு ஆளுநர் மாளிகையில் சிலை அமைக்கப்பட்டு அங்கீகாரம் வழங்கப்பட்டுள்ளதாகவும் தெரிவித்தார்.

அம்பேத்கரின் இந்திய அரசியலமைப்புச் சட்டம் தான் புனித நூல் என்று பதவியேற்றுக் கொண்டவர் பிரதமர் மோடி என்றும், 2015-ல் அம்பேத்கரின் பிறந்த நாளை ஆண்டு முழுவதும் கொண்டாடியதாகவும் தெரிவித்தார்.

அப்போது அம்பேத்கர் பிறந்த வீடு ஆக்கிரமிப்பில் இருந்ததாகவும், அவருக்கு டெல்லியில் நினைவிடம் அமைத்ததாகவும் மத்திய இணை அமைச்சர் எல். முருகன் கூறினார்.

டிஜிட்டல் பரிவர்த்தனை தொடங்கிய போது அம்பேத்கரின் நினைவாக 'பீம் செயலி' கொண்டு வரப்பட்டதாகவும், கல்வி ஒன்று தான் மாற்றத்தை ஏற்படுத்தும் என்ற அம்பேத்கரின் வாக்குப்படி கல்வியால் அடித்தட்டு மக்கள் பலர் வளர்ச்சி அடைந்துள்ளதாகவும் தெரிவித்தார்.

தொடர்ந்து பேசிய ஆளுநர் ஆர்.என்.ரவி, "அடக்குமுறைக்கும், ஒடுக்குமுறைக்கும், தீண்டாமைக்கும் எதிராக குரல் கொடுத்தவர் அம்பேத்கர். அவரது புத்தகங்களை சாதனையாளர்களே பாராட்டியுள்ளனர்.

19-ம் நூற்றாண்டின் சிறந்த தலைவர் அம்பேத்கர். எந்த சமூகத்தினராக இருந்தாலும் ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்ற கொள்கையைக் கொண்டவர் அம்பேத்கர். குறிப்பிட்ட சாதிக்காக அம்பேத்கர் குரல் கொடுத்தவர் அல்ல. மனித நேயமே நாட்டிற்கு முக்கியம் என்பதை கொண்டவர் அம்பேத்கர்.

அம்பேத்கரால் தான் ஆர்ட்டிகள் - 14 சாத்தியமானது, அதன் பயன்களை இப்போது பார்க்க முடிகிறது.1947ஆம் ஆண்டு சுதந்திரத்தின்போது, அம்பேத்கரை இன்னொரு ஜின்னாவாக மாற்ற பிரிட்டிசார் முயன்றனர். ஆனால், அது சாத்தியம் ஆகவில்லை. 1947-ம் ஆண்டிற்குப் பின்னான சுதந்திர இந்தியாவில், ஜம்மு காஷ்மீர் விவகாரத்தில் பிரதமர் மோடியின் ஆலோசனைகளால் மேற்கொள்ளப்பட்ட அரசியல் நடவடிக்கைகளால் பாகிஸ்தானின் நடவடிகைகள் குறைந்துள்ளன’ என்றார்.

நம் பிரச்னை என்னெவெனில் சிறந்த தலைவர்களின் செயல்களை, சிந்தனைகளை நாளடைவில் மறந்துவிடுவதாகவும், ஆங்கிலேயர் காலத்திற்குப் பின் பிரிந்திருந்த இந்தியாவை இணைத்ததில் அம்பேத்கருக்கு பெரும் பங்கு உள்ளதாகவும் கூறினார்.

இதையும் படிங்க: புலம்பெயர் தொழிலாளர்களுக்கு தரப்படும் உதவிகளை உறுதிசெய்க - மத்திய அரசுக்கு உத்தரவு

Last Updated : Dec 7, 2022, 4:39 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.