சென்னை: தமிழ்நாட்டின் முன்னாள் தலைமைச் செயலாளர் சண்முகம், கடந்த 2019-ஆம் ஆண்டு ஜூன் மாதம் 29-ஆம் தேதி நியமிக்கப்பட்டார். அவரது பதவிக் காலம், 2020 ஜூலை 31ஆம் தேதியுடன் முடிவடைந்தது. ஆனாலும் இருமுறை பதவி நீட்டிக்கப்பட்ட நிலையில், கடந்த ஐனவரி 31ஆம் தேதி ஓய்வு பெற்றார்.
இந்தநிலையில், அவர் தமிழ்நாடு அரசின் சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்த நிலையில், அதிமுக சட்டப்பேரவைத் தேர்தலில் தோல்வி அடைந்திருக்கும் சமயத்தில், அவர் தனது ராஜினாமா கடிதத்தைத் தலைமைச் செயலாளருக்குக் கடிதம் அனுப்பியுள்ளார். மேலும், அவர் கடந்த ஜனவரி மாதம் தமிழ்நாடு அரசின் தலைமைச் செயலாளராக, அவரது பதவி காலம் முடிந்த நிலையில் கடந்த நான்கு மாதங்களாக தமிழ்நாடு அரசின் சிறப்பு ஆலோசகராகப் பணியாற்றி வந்தார் என்பது குறிப்பிடத்தக்கது.