சென்னை: தமிழகத்தில் 16 ஐபிஎஸ் அதிகாரிகளை பணியிட மாற்றம் செய்து தமிழக அரசு ஆனை பிறப்பித்துள்ளது. அதன்படி, சிவில் சப்ளைஸ் சி.ஐ.டி டிஜிபியாக இருந்த வன்னியபெருமாள் ஐ.பி.எஸ், ஊர் காவல்படை மற்றும் கமாண்டன்ட் டி.ஜி.பியாக பணியிட மாற்றம் செய்யபட்டுள்ளார்.
-
DIPR IPS TRANSFERS & POSTINGS - DATE 11.10.2023#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/iCavnlxGMd
— TN DIPR (@TNDIPRNEWS) October 11, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data="
">DIPR IPS TRANSFERS & POSTINGS - DATE 11.10.2023#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/iCavnlxGMd
— TN DIPR (@TNDIPRNEWS) October 11, 2023DIPR IPS TRANSFERS & POSTINGS - DATE 11.10.2023#CMMKSTALIN | #TNDIPR |@CMOTamilnadu @mkstalin@mp_saminathan pic.twitter.com/iCavnlxGMd
— TN DIPR (@TNDIPRNEWS) October 11, 2023
மேலும், காவல் பயற்சியினுடைய கல்லூரியின் ஐ.ஜியாக இருந்த தமிழ்சந்திரன், சீருடை பணியாளர் தேர்வானையத்தின் ஐ.ஜியாக (உறுப்பினர் செயலர்) நியமிக்கபட்டுள்ளார். சீருடை பணியாளர் தேர்வானையத்தின் ஐ.ஜியாக இருந்த செந்தில் குமாரி தற்போது சென்னை காவல்துறையின் மத்திய குற்றபிரிவினுடைய கூடுதல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார். இந்த பொறுப்பில் ஏற்கனவே வகித்து வந்த மகேஷ்வரி தற்போது இடமாற்றம் செய்யபட்டு திருநெல்வேலி நகர காவல் ஆணையராக நியமிக்கபட்டுள்ளார்.
காவலர் பயிற்சி அகாடமியின் ஐ.ஜியாக இருந்த ஜோஷி நிர்மல் குமார், சிவில் சப்ளை சி.ஐ.டியின் ஐ.ஜியாக நியமிக்கபட்டுள்ளார். சென்னை வடக்கு மண்டல இனை ஆணையராக இருந்த அபிஷேக் தீக்ஷிட் இடமாற்றம் செய்யபட்டு, தற்போது சென்னை காவல்துறையின் வடக்கு மண்டல சட்ட ஒழுங்கு இணை ஆணையராகவும், சென்னை வடக்கு மண்டல இணை ஆணையராக இருந்த சாமுண்டிஸ்வரி தற்போது காவல்துறையின் தலைமையக டி.ஐ.ஜியாக நியமிக்கபட்டுள்ளார்.
திருவாரூர் மாவட்டத்தின் எஸ்.பி.சுரேஷ்குமார் இடமாற்றம் செய்யப்பட்டு தற்போது தென்காசி மாவட்டத்தின் எஸ்.பியாகவும், இதுவரை தென்காசி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சாம்சன் இடமாற்றம் செய்யபட்டு போதைப்பொருள் தடுப்பு நுண்ணறிவு பிரிவினுடைய மற்றும் புலனாய்வு பிரிவினுடைய காவல் கண்காணிப்பாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.
சிபிசிஐடியின் சிறப்பு புலனாய்வுக் குழுவின் எஸ்.பி.யாக இருந்த ஜெயக்குமார் தற்போது இடமாற்றம் செய்யபட்டு திருவாரூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பளராக நியமிக்கபட்டுள்ளார். நீலகிரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் பிரபாகர் இடமாற்றம் செய்யபட்டு கரூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளராகவும், கரூர் மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் சுந்தரவதனம் இடம் மாற்றம் செய்யப்பட்டு கன்னியகுமாரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பளராக நியமிக்கபட்டுள்ளார்.
கன்னியகுமரி மாவட்டத்தின் காவல் கண்காணிப்பாளர் ஹரி கிரன் பிரசாத் இடமாற்றம் செய்யபட்டு தற்போது ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்.பியாக நியமிக்கபட்டுள்ளார். ராமநாதபுரம் கடலோர பாதுகாப்பு குழுமத்தின் எஸ்.பியாக இருந்த சுந்தர வடிவேலு தற்போது இடமாற்றம் செய்யபட்டு நீலகிரி மாவட்டத்தின் எஸ்.பியாக நியமிக்கபட்டுள்ளார்.
குறிப்பாக சென்னை மண்டல இணை ஆணையாரக பதவி வகித்து வந்த திஷா மிட்டல் வள்ளுவர் கோட்டத்தில் பா.ஜ.க சார்பாக நடைபெற்ற போராட்டத்தை சரியாக கையாளவில்லை என்ற குற்றச்சாட்டு எழுந்ததையடுத்து காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்டார். அவர் தற்போது காவல்துறையினுடைய தொழில்நுட்ப பிரிவினுடைய டி.ஐ.ஜியாக நியமிக்கபட்டுள்ளார்.
சமீபத்தில் சென்னையில் நடைபெற்ற ஏ.ஆர்.ரகுமானுடைய இசை நிகழ்ச்சியில் உரிய பாதுகாப்பு வழங்கவில்லை என்ற காரணத்திற்காக காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றபட்ட ஐ.பி.எஸ்.தீபா சத்யன் தற்போது காவல்துறையின் தலைமையக நிர்வாக பிரிவின் ஏ.ஐ.ஜியாக நியமிக்கபட்டு உள்ளார்.
இதையும் படிங்க: குரூப் 4 தேர்வு விடைத்தாளை மனுதாரர்களிடம் ஒப்படைக்க TNPSC-க்கு நீதிமன்றம் ஆணை!