சென்னை: காங்கிரஸ் முன்னாள் தலைவர் ராகுல் காந்தி பிறந்தநாள் வரும் ஜூன் 19ஆம் தேதி வரவுள்ளது. இந்நிலையில் அவர் பிறந்தநாளை தொண்டர்கள் எவ்வாறு கொண்டாட வேண்டும் எனத் தமிழ்நாட்டு காங்கிரஸ் கட்சி தலைவர் கே.எஸ் அழகிரி, தனது ட்விட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.
அந்தப் பதிவில், இந்தியாவின் எதிர்காலத்தை நிர்ணயிக்கிற தலைவராக விளங்குகிற ராகுல் காந்தி பிறந்தநாளில், கரோனா தொற்றால் பாதிக்கப்பட்டவர்களுக்கு உதவி செய்கிற வகையில் செயல்படுவதே, அவருக்கு நாம் சொல்லும் பிறந்தநாள் வாழ்த்தாக இருக்க முடியும்.
எனவே, ராகுல் காந்தியின் பிறந்தநாளின் மூலம் கரோனா நிவாரணப் பணிகளை தமிழ்நாட்டில் மூலை முடுக்கெல்லாம் காங்கிரஸ் கட்சியினர் சென்று பாதிக்கப்பட்ட மக்களைச் சந்தித்து, அவர்களுக்கு ஆறுதல் கூறி, நலத்திட்ட உதவிகளை வழங்க வேண்டுமென தமிழ்நாடு காங்கிரஸ் சார்பில் கேட்டுக் கொள்கிறேன.
ராகுல்காந்தி பிறந்தநாளில் இத்தகைய பணிகளை மாவட்ட, வட்டார, நகர, பேரூர், கிராம காங்கிரஸ் கமிட்டிகளின் தலைவர்கள் முன்னின்று சிறப்பாகச் செய்து மக்களின் அன்பையும், ஆதரவையும் பெறவேண்டுமெனக் கேட்டுக் கொள்கிறேன் எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க: குழந்தைகளுக்கு நிதி வழங்கும் திட்டம் தொடங்கி வைப்பு!