ETV Bharat / state

ஜி20 விருந்தில் முதலமைச்சர் ஸ்டாலின்.. அமெரிக்க அதிபருடன் கலந்துரையாடல்!

MK Stalin Attend G20 Dinner : குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற அரசு விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். அமெரிக்க அதிபர் பைடனுடன் கைலுக்கி கலந்துரையாடும் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் தன் சமூகவலைதள பக்கத்தில் பகிர்ந்து உள்ளார்.

MK Stalin
MK Stalin
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 10, 2023, 9:52 AM IST

டெல்லி : குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் தமிழ்நாடு முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டார். ஜி20 உச்சி மாநாடு தலைநகர் டெல்லியில் நேற்று (செப். 9) தொடங்கியது. பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற இந்த விழாவில் அமெரிக்கா, பிரான்ஸ், பிரிட்டன், ஜெர்மனி, தென் ஆப்பிரிக்கா, ஜப்பான், சீனா, ரஷ்யா உள்ளிட்ட பல்வேறு நாடுகளின் தலைவர்கள், பிரதிநிதிகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.

பொருளாதாரம், புதுப்பிக்கத்தக்க எரிசக்தி, சர்வதேச உணவு சங்கிலி, உக்ரைன் ரஷ்யா இடையிலான போர் உள்ளிட்ட பல்வேறு முக்கிய பிரச்சினைகள் குறித்து தலைவர்கள் பேச்சுவார்த்தை நடத்தினர். இதைத் தொடர்ந்து குடியரசுத் தலைவர் மாளிகையில் விருந்தினருக்கு இரவு உணவு வழங்கப்பட்டது.

ஐடிசி, தாஜ் உள்ளிட்ட பிரபல உயர்தர ஹோட்டல்கள் மூலம் உணவுகள் தயாரிக்கப்பட்டு உலக தலைவர்களுக்கு பரிமாறப்பட்டது. இந்த விருந்தில் தமிழக முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்து கொண்டார். குடியரசுத் தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொண்டது தொடர்பான புகைப்படத்தை முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் தன் சமூக வலைதள பக்கத்தில் பதிவிட்டு உள்ளார்.

துணை குடியரசுத் தலைவர் ஜெகதீப் தன்கர், பிரதமர் மோடி, அமெரிக்க அதிபர் பைடனுடன் கைலுக்கும் புகைப்படத்தை முதலமைச்சர் ஸ்டாலின் பகிர்ந்து உள்ளார். அதேநேரம் இந்த இரவு விருந்தில் கலந்து கொள்ள பெருவாரியான எதிர்க்கட்சித் தலைவர்களுக்கு அழைப்பு விடுக்கப்படவில்லை எனக் கூறப்பட்டது.

அதேநேரம் மேற்கு வங்க முதலமைச்சர் மம்தா பானர்ஜி, பீகார் முதலமைச்சர் நிதிஷ் குமார் உள்ளிட்டோருக்கு அழைப்பு விடுக்கப்பட்டு இருந்தது. காங்கிரஸ் தேசியத் தலைவர் மல்லிகார்ஜூன கார்கேவுக்கு குடியரசு தலைவர் மாளிகையில் நடைபெற்ற விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுக்கப்படவில்லை. இது தொடர்பாக செய்தியாளர்களை சந்தித்த அவர், விருந்தில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்தால் மட்டுமே கலந்து கொள்ள முடியும் என்றார்.

மேலும் பேசிய அவர், பாஜக கீழ்தரமான வேலைகளில் ஈடுபட்டு வருவதாக தெரிவித்தார். இந்த மாதிரியான அரசியல் நல்லதல்ல என்றும் மத்திய அரசு இதுபோன்ற கீழ்த்தரமான அரசியலில் ஈடுபட்டிருக்கக் கூடாது என்றார். ஜி20 மாநாடு நல்லிணக்க கூட்டம் என்றும் நாட்டிலும் உலகிலும் நல்லிணக்கம் நிலவுவது நல்லது என்று மல்லிகார்ஜுன கார்கே தெரிவித்து உள்ளார்.

இதையும் படிங்க : G20 dinner : "விருந்துக்கு அழைத்தால் தானே போக முடியும்" - மல்லிகார்ஜூன கார்கே ஆவேசம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.