ETV Bharat / state

ஸ்டாலின் பிறந்தநாள் - அணி திரளப்போகும் தேசிய தலைவர்கள்!

author img

By

Published : Feb 21, 2023, 12:53 PM IST

Updated : Feb 21, 2023, 5:02 PM IST

முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் பிறந்தநாளை ஒட்டி, சென்னை நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில் மார்ச் 1ஆம் தேதி மாபெரும் பொதுக்கூட்டம் நடைபெறும் என திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் அறிவித்துள்ளார்.

மு.க.ஸ்டாலின் பிறந்தநாளை முன்னிட்டு மார்ச் 1இல் மாபெரும் பொதுக்கூட்டம்!

சென்னை: இதுதொடர்பாக திமுக பொதுச் செயலாளர் துரைமுருகன் வெளியிட்டுள்ள அறிக்கையில், “திராவிட முன்னேற்றக் கழகத்தின் தலைவர், திராவிட மாடல் ஆட்சியின் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் மார்ச் 1ஆம் நாள், தனது 70வது ஆண்டில் அடியெடுத்து வைக்கிறார். இது திராவிட முன்னேற்றக் கழகத் தொண்டர்களுக்கு மட்டுமல்ல, தமிழ்நாட்டு மக்கள் அனைவருக்கும் கொண்டாட்ட நாளாக அமையப் போகிறது.

ஆட்சிக்கு வந்த 20 மாத காலத்துக்குள் ஈடு இணையற்ற சாதனைகளைச் செய்து, இந்தியாவில் தலைசிறந்த முதலமைச்சர்களில் தலைசிறந்தவராக மு.க.ஸ்டாலின் உயர்ந்து நிற்பதைப் பார்த்து நித்தமும் நான் வியந்து நிற்கிறேன். இளம்வயதில் 'முரசொலி' நாளிதழ் பணிகளைச் செய்து வந்தார்.

கோபாலபுரம் இளைஞர் திமுக என்ற அமைப்பை தானே உருவாக்கி, அதன் மூலமாக அந்த வட்டாரத்தில் சமூகப் பணிகளை ஆற்றினார். இயல்பிலேயே பிறந்த கலை ஆர்வத்தின் காரணமாக, நாடக மேடைகளில் தோன்றி நாடு முழுக்க பரப்புரை நாடகங்களை நடத்தினார். சென்னை மாவட்டக் கழகத்தின் தூணாக வளர்ந்தார்.

இளைஞரணியை உருவாக்கிய காலத்தில், அதன் ஏற்றமிகு செயலாளராக வளர்ந்தார். துணைபொதுச் செயலாளராக, பொருளாளராக, செயல் தலைவராக உயர்ந்து இன்று கட்சியின் தன்னிகரில்லா தலைவராகச் செயல்பட்டு வருகிறார். நிர்வாகப் பணிகளில், சென்னை மாநகரத்தின் வணக்கத்துக்குரிய மேயராக, சட்டமன்ற உறுப்பினராக, அமைச்சராக, துணை முதலமைச்சராக வளர்ந்து இன்று முதலமைச்சராக உயர்ந்து நிற்கிறார்.

ஆட்சிப்பணியாக இருந்தாலும், கட்சிப்பணியாக இருந்தாலும் உழைப்பை மட்டுமே மூலதனமாகக் கொண்டு இன்றைய உயர்வுகள் அனைத்தையும் பெற்றவர், ஸ்டாலின் என்பதற்கு கட்சியின் மூத்த முன்னோடிகள் அனைவருமே சாட்சியங்களாக இருக்கிறோம். பெரியாரின் கொள்கை உறுதியையும், அண்ணாவின் நடைமுறை அரவணைப்பையும், கருணாநிதியின் சலியாத போராட்டக் குணத்தையும், இனமானப் பேராசிரியரின் பொறுமை குணத்தையும் ஒருங்கே பெற்று, அவர்கள் நால்வரையும் தன்னுள் அடக்கிச் செயல்படும் ஆற்றலாளரான முதலமைச்சர் ஸ்டாலினின் 70வது பிறந்தநாளை ஏற்றத்துடனும் எழுச்சியுடனும் கொண்டாட திராவிட முன்னேற்றக் கழகம் முடிவெடுத்துள்ளது.

கட்சித்தலைமை சார்பில், மார்ச் 1 அன்று மாலை 5 மணியளவில் சென்னை, நந்தனம் ஒய்எம்சிஏ மைதானத்தில், மு.க.ஸ்டாலினின் 70வது பிறந்தநாள் விழா கொண்டாடப்பட இருக்கிறது. மு.க.ஸ்டாலினை வாழ்த்திப் பேசுவதற்காக அகில இந்தியக் காங்கிரசு கட்சித் தலைவரும், மாநிலங்களவை எதிர்கட்சித் தலைவருமான மல்லிகார்ஜூன கார்க்கே, ஜம்மு காஷ்மீர் தேசிய மாநாட்டுக் கட்சித் தலைவரும் காஷ்மீர் மாநில முன்னாள் முதலமைச்சருமான பரூக் அப்துல்லா, சமாஜ்வாதி கட்சித் தலைவரும் உத்தரப்பிரதேச மாநில முன்னாள் முதலமைச்சருமான அகிலேஷ் யாதவ், ராஷ்ட்ரீய ஜனதா தளம் கட்சித் தலைவரும் பீகார் மாநில துணை முதலமைச்சருமான தேஜஸ்வி யாதவ் ஆகியோர் வருகை தருகின்றனர்.

இதையும் படிங்க: "ஓட்டுக்கு ரூ.15,000 திட்டம்" ஈரோடு இடைத்தேர்தல் ரத்து செய்ய வாய்ப்பு?

Last Updated : Feb 21, 2023, 5:02 PM IST
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.