ETV Bharat / state

பாஜக யாத்திரை- அனுமதி கேட்டு டிஜிபியிடம் கடிதம்!

சென்னை: திருத்தணி முதல் திருச்செந்தூர் வரை யாத்திரை நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் சார்பில் டிஜிபியிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

துணை பொது செயலாளர் கரு. நாகராஜன்
துணை பொது செயலாளர் கரு. நாகராஜன்
author img

By

Published : Oct 15, 2020, 9:50 PM IST

யாத்திரை நடத்துவதற்கு அனுமதி கேட்டு தமிழ்நாடு பாஜக தலைவர் முருகன் சார்பில் டிஜிபியிடம் கடிதம் அளிக்கப்பட்டது.

பின்னர் செய்தியாளர்களை சந்தித்த பாஜகவின் துணை பொதுச் செயலாளர் கரு. நாகராஜன், “கரோனா தொற்று நோயினால் பாதிக்கப்பட்ட பொதுமக்கள் விரைவில் குணமடைய வேண்டி பாஜக தமிழ்நாடு மாநில தலைவர் எல்.முருகன் தலைமையில் நவம்பர் 6ஆம் தேதி திருத்தணியில் தொடங்கி டிசம்பர் 6ஆம் தேதி திருச்செந்தூர் வரை வெற்றிவேல் யாத்திரை நடத்த திட்டமிட்டுள்ளோம். அதற்காக அனுமதி கேட்டு டிஜிபி அலுவலகத்திற்கு வந்துள்ளோம்” என்றார்.

துணை பொது செயலாளர் கரு. நாகராஜன்

மேலும், “கரோனா தொற்றுக் காரணமாக அதற்கான விதிமுறைகளை பின்பற்றி சட்டப்படி யாத்திரை செல்ல திட்டமிடப்பட்டுள்ளது.” என்றார். இந்நிலையில், டிசம்பர் 6ஆம் தேதி பாபர் மசூதி இடிப்பு தினம் என்பதால் யாத்திரை நடக்கும் போது பிரச்னை நிலவ வாய்ப்புள்ளதா? என எழுப்பிய கேள்விக்கு, “திருச்செந்தூர் என்பதால் சஷ்டி தினத்தன்று கடைசிநாளாக இருந்தால் நன்றாக இருக்கும் என நினைத்து அந்த தினத்தை தேர்ந்தெடுத்தோம். யாத்திரை செல்லக்கூடிய இடங்களின் விவரங்களை டிஜிபியிடம் அளித்துள்ளோம். அந்தக் கடிதத்தை பரிசீலித்து பதிலளிப்பதாக தெரிவித்துள்ளார்” என கரு.நாகராஜன் கூறினார்.

இதையும் படிங்க: காற்று பலமாய் வீசினால் காலி இடம்தான் மிஞ்சும் - அடிப்படை வசதிகளின்றி தவிக்கும் மக்கள்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.