ETV Bharat / state

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப்: பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு - கஜகஸ்தான்

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்று சென்னை திரும்பிய தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது.

Tamil Nadu athletes won medals in Asian Indoor Athletics Championships warm welcome at the airport
ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு
author img

By

Published : Feb 14, 2023, 10:45 PM IST

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் பதக்கம் வென்ற தமிழக வீரர்களுக்கு விமான நிலையத்தில் உற்சாக வரவேற்பு

சென்னை: கஜகஸ்தான் நாட்டில் 10-வது ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் போட்டி நடந்தது. இந்த போட்டியில் இந்தியா சார்பில் பங்கேற்று வெள்ளி, வெண்கல பதக்கங்களை வென்ற தமிழக வீரர்கள் பிரவீன் சித்ரவெல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோசி மீனா பால்ராஜ், பவிதார் ஆகியோர் சென்னை திரும்பினார். அவர்களுடன் தடகள சங்கச் செயலாளர் லதா, திமுக எம்.பி. அப்துல்லா ஆகியோர் வந்தனர்.

சென்னை விமான நிலையத்தில் வீரர்களுக்கு தமிழ்நாடு விளையாட்டு மேம்பாட்டு ஆணையம் மற்றும் தடகள சங்கத்தினர் சார்பில் உற்சாகமாக வரவேற்பு அளிக்கப்பட்டது. பின்னர் தமிழ்நாடு தடகள சங்க செயலாளர் லதா கூறுகையில், ”ஆசிய உள்ளரங்க இந்தியா சார்பில் 25 பேர் பங்கேற்றனர். தமிழகத்தில் இருந்து 7 பேர் கலந்து கொண்டனர். இந்தியா 1 தங்கம், 6 வெள்ளி, 1 வெண்கலம் என 8 பதக்கங்களை பெற்றது. இதில் 3 வெள்ளி, 1 வெண்கலம் என 4 பதக்கங்களை தமிழ்நாடு வீரர்கள் பெற்று உள்ளனர். தமிழ்நாடு விளையாட்டுத் துறையில் மேம்பட்டு வருகிறது. இதற்காக தமிழ்நாடு அரசுக்கு நன்றியைத் தெரிவித்துக் கொள்கிறோம். இந்தியாவில் தடகள உள்ளரங்கம் கட்டமைப்பு இல்லை. தடகள உள்ளரங்க கட்டமைப்பை ஏற்படுத்தினால் சிறப்பாக இருக்கும்” என்றார்.

திமுக எம்.பி.அப்துல்லா பேசுகையில், “தமிழ்நாடு வீரர்கள் கஜகஸ்தான் சென்று பதக்கங்களை வென்று வந்து உள்ளனர். டெல்லியில் இருந்து வரவேற்று அழைத்து வந்தேன்” என்றார். வீரர்கள் பிரவின் சித்ரவேல், ஜெஸ்வின் ஆல்ட்ரின், ரோசி மீனா பால்ராஜ், பவிதார் ஆகியோர் கூறுகையில், ”உள்ளரங்கில் முதன்முறையாக விளையாடியதால் முழுத்திறனை வெளிகாட்ட முடியவில்லை. இருப்பினும் பதக்கங்களை வென்றது மகிழ்ச்சி.

ஆசிய உள்ளரங்க தடகள சாம்பியன்ஷிப் தொடர் என்பது வெறும் துவக்கம் மட்டும் தான். இதற்காக முழு அளவில் தயாராகவில்லை. வருகின்ற ஆசிய தடகள சாம்பியன்ஷிப் மற்றும் உலக தடகள சாம்பியன்ஷிப் போட்டியில் சிறப்பாக விளையாட பயிற்சிகள் மேற்கொள்ள உள்ளோம். ஒலிம்பிக் போட்டியில் பதக்கம் வெல்ல வேண்டும் என்பதே இலக்காக உள்ளது. இந்தியாவில் எந்த மாநிலத்திலும் தடகளப் போட்டிகளுக்கான உள்ளரங்கம் இல்லை. உள்ளரங்கில் விளையாடுவது என்பது முற்றிலும் வேறு ஒரு அனுபவமாக இருக்கிறது.

இந்தியாவிலும் தமிழகத்திலும் சர்வதேச அளவிலான பயிற்சி மையங்கள் அமைக்க அரசு நடவடிக்கை எடுத்தால் நன்றாக இருக்கும். ஏற்கனவே தேசிய அளவில் தமிழகத்திற்கு பதக்கங்களை வென்று இருந்தாலும் தற்போது வரை அரசு வேலைக்காக காத்து இருக்கிறோம். விரைவில் அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும்” எனக் கோரிக்கை வைத்தனர்.

இதையும் படிங்க: 'ஏங்க... ஒர்க் ஷாப் தொழிலுக்கு பெண்கள் வரக்கூடாதா..?' - வல்கனைசிங் வேலையில் அசத்தும் குட்டியம்மாள்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.