ETV Bharat / state

வேளாண் விளைபொருட்கள் விற்பனைச்சட்டம் - ஓ.பி.எஸ் அறிக்கைக்கு எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் மறுப்பு!

author img

By

Published : May 31, 2022, 6:06 PM IST

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் 1987ஆம் ஆண்டு தொடர்பாக ஓ.பன்னீர்செல்வம் அறிக்கைக்கு வேளாண்மை உழவர்நலத்துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டன மறுப்பு அறிக்கை வெளியிடுள்ளார்.

தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை சட்டம்-ஓ.பி.எஸ் அறிக்கைக்கு எம்.ஆர்.கே மறுப்பு

சென்னை: தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனைச் சட்டம் 1987 தொடர்பாக, கடந்த 29ஆம் தேதியன்று அதிமுக ஒருங்கிணைப்பாளர் ஓ. பன்னீர்செல்வம் வெளியிட்ட அறிக்கைக்கு வேளாண் துறை அமைச்சர் எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டன மறுப்புத் தெரிவித்துள்ளார்.

இது குறித்து எம்.ஆர்.கே.பன்னீர்செல்வம் கண்டன மறுப்பு வெளியிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பது: ’தற்போது நடைமுறையில் உள்ள தமிழ்நாடு வேளாண் விளைபொருட்கள் விற்பனை முறைப்படுத்துதல் சட்டம் 1987, பிரிவு 24(1)ன்படி ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்திற்கு வெளியே நடைபெறும் வர்த்தகத்திற்கு சந்தைக் கட்டணம் வசூலிக்கப்படுகிறது. இச்சட்டம் 1987ஆம் ஆண்டு அதிமுக ஆட்சிக் காலத்தில் சட்டசபையில் நிறைவேற்றப்பட்ட சட்டம் ஆகும்.

தமிழ்நாட்டில் 27 விற்பனைக் குழுக்களின் கட்டுப்பாட்டில் 284 ஒழுங்குமுறை விற்பனைக்கூடங்கள் இயங்கிவருகின்றன. ஒவ்வொரு விற்பனைக்குழுவும் குறிப்பிட்ட அறிவிக்கை செய்யப்பட்ட விளைபொருட்களின் விற்பனையினை முறைப்படுத்தும் பணியினை மேற்கொண்டு வருகின்றது. இதனால், விவசாயிகளுக்கு லாபகரமான விலை கிடைக்காத சூழ்நிலை நிலவி வந்தது.

இதனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் உள்ள விவசாயிகளின் ஒட்டுமொத்த நலனைக் கருத்தில் கொண்டு, மாநிலம் முழுவதும் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வகையான வேளாண் விளைபொருட்களின் விற்பனையினை ஒரே சீரான முறையில் பரிவர்த்தனை செய்யும் வகையில், முன்னாள் தமிழ்நாடு முதலமைச்சர் கலைஞர் கருணாநிதி அவர்கள் 2008ஆம் ஆண்டிலேயே நடவடிக்கை எடுத்தார்கள்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

சந்தை வரி: மேலும் அவர், ’இந்த நடைமுறை தமிழ்நாட்டில் மட்டுமல்ல பிற மாநிலங்களிலும் சந்தை வரி வசூலிக்கப்படுகிறது. பஞ்சாபில் 8.5 விழுக்காடும், அரியானாவில் 6.5 விழுக்காடும், மஹாராஷ்டிராவில் 6 விழுக்காடும், ஆந்திரா, தெலங்கானாவில் ஒரு விழுக்காடும், சந்தை வரியாக வசூலிக்கப்பட்டு வருகிறது என குறிப்பிடப்பட்ட பன்னீர்செல்வம் இந்தச் சட்டத்தின் கீழ், 120 வேளாண் விளைபொருட்கள் அட்டவணையில் இருந்தாலும், தமிழ்நாட்டில் அதிகளவில் விளைவிக்கக்கூடிய 40 வேளாண் விளைபொருட்களுக்கு மட்டுமே, ஒரு விழுக்காடு சந்தை வரி வசூலிக்கப்பட்டு வந்த நடைமுறைதான் தற்பொழுது தொடர்ந்து வருகிறது. எந்த ஒரு விளைபொருளும் புதிதாக சேர்க்கப்படவில்லை. அனைத்து மாவட்டங்களிலும் இதனை சீரான அறிவிக்கை செய்வதன் மூலம் அனைத்து விவசாயிகளும், வியாபாரிகளும் பயனடைவர் என்று தெரிவித்துள்ளார்.மேலும் வியாபாரிகளிடமிருந்து வசூலிக்கப்படும் ஒரு விழுக்காடு சந்தைக் கட்டணம் விவசாயிகள் மற்றும் வியாபாரிகள் நலனுக்காக மட்டுமே பயன்படுத்தப்படுகிறது என்பது எதிர்க்கட்சி துணைத்தலைவருக்கு நன்கு தெரியும்.

ஓபிஎஸ்ஸின் அறிக்கை உண்மைக்கு புறம்பானது: இந்த சந்தைக்கட்டணம் மூலம், ஒழுங்குமுறை விற்பனைக் கூடங்களில் சேமிப்புக்கிடங்குகள், குளிர்பதனக் கிடங்குகள், உலர்களங்கள், பரிவர்த்தனைக் கூடங்கள், உழவர் சந்தைகள், முதன்மைப் பதப்படுத்தும் நிலையங்கள், விவசாயிகள் ஓய்வறை, வியாபாரிகள் ஓய்வறை மற்றும் விவசாயிகள், வியாபாரிகளுக்குத் தேவையான அடிப்படை வசதியான குடிநீர், கழிப்பறை வசதிகள் ஏற்படுத்தப்பட்டு விவசாயிகளும், வியாபாரிகளும் பயன்பெற்று வருகின்றனர் எனத்தெரிவித்த அமைச்சர் தற்போது, குறைந்த நீரில், குறைந்த நாளில் அதிக வருமானம் தரக்கூடிய பயிர்களை மாற்றுப் பயிர்களாக சாகுபடி செய்யும் நடைமுறையினை தமிழ்நாடு அரசு அனைத்து விவசாயிகளிடையே பிரபலப்படுத்தி வருகிறது.

மேலும், அதிமுக அரசு 2018ஆம் ஆண்டிலேயே அனைத்து வணிகர்களுக்கும் ஒற்றை உரிமம் என்ற நடைமுறையை அமல்படுத்தி, ஏறக்குறைய 3200க்கும் மேற்பட்ட வணிகர்களுக்கு ஒற்றை உரிமம் வழங்கப்பட்டுள்ளது. எனவே, அதிமுக அரசு செயல்படுத்திய ஒற்றை உரிமத்தின் பலன் முழுமையாக கிடைக்க வேண்டும் என்ற நோக்கத்தில் தான் ஒரே சீரான அறிவிக்கை அமல்படுத்தப்பட்டுள்ளது என்று இதன் மூலம் தெரிவித்துக் கொள்ளப்படுகிறது.

எனவே, அதிமுக ஒருங்கிணைப்பாளர் அவர்களின் கடந்த மே 29 ஆம் தேதி வெளியிடப்பட்ட அறிக்கை முற்றிலும் விவசாயிகளுக்கு எதிரான கருத்து என்பதுடன் உண்மைக்குப் புறம்பான கூற்றுகளாகும்’ என்று குறிப்பிட்டுள்ளார்.

இதையும் படிங்க:விதைச் சட்ட விதிமீறல்கள் 124 மெட்ரிக்டன் நெல் விதைகளுக்கு விற்பனைத் தடை

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.