சென்னை, தாம்பரத்தை அடுத்த பெருங்களத்தூர், பீர்க்கன்காரணை, காமராஜர் நகர், அண்ணா தெருவைச் சேர்ந்தவர் கவுசல்யா (வயது 33). இவருக்கு இரண்டு குழந்தைகள் உள்ளனர்.
இந்நிலையில், வழக்கம்போல் வேலைக்குச் சென்றுவிட்டு நேற்று (நவ.23) இரவு கவுசல்யா தன் வீட்டுக்குத் திரும்பியுள்ளார். அப்போது மின் கம்பத்தில் இருந்து வீட்டுக்குச் செல்லும் மின் வயர், வீட்டின் இரும்புக் கதவில் பட்டு மின் கசிவு ஏற்பட்டிருந்ததாகக் கூறப்படுகிறது.
இந்நிலையில், இதனை அறியாத கவுசல்யா வீட்டின் கதவைத் திறக்கும்போது மின்சாரம் தாக்கியதில் தூக்கி வீசப்பட்டுள்ளார். இதில், சம்பவ இடத்திலயே அவர் பரிதாபமாக உயிரிழந்தார்.
தொடர்ந்து, தகவலின்பேரில் சம்பவ இடத்திற்கு விரைந்த பீர்க்கன்காரணை காவல் துறையினர், கவுசல்யாவின் உடலை மீட்டு உடற்கூராய்வுக்காக குரோம்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில், தொடர்ந்து விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகிறது.