ETV Bharat / state

அதிமுகவா?...பாஜகவா?...கட்சி மாறும் முன்னாள் மேயர்!

சென்னை: காங்கிரஸ் கட்சியிலிருந்து இடை நீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன், அதிமுக, பாஜக ஆகிய ஏதேனும் ஒரு கட்சியில் இணையவுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

கராத்தே தியாகராஜன்
கராத்தே தியாகராஜன்
author img

By

Published : Jan 26, 2021, 10:23 PM IST

காங்கிரஸ் கட்சியிலிருந்து இடைநீக்கம் செய்யப்பட்ட கராத்தே தியாகராஜன், அடுத்த பத்து நாள்களில் புதிய கட்சியில் இணையவுள்ளதாக தெரிவித்துள்ளார். அதிமுக, பாஜக ஆகிய கட்சிகளுடன் தொடர்பில் உள்ளதாகவும் அவர் கூறியுள்ளார்.

இதுகுறித்து அவர் நேற்று கூறுகையில், "அதிமுக, பாஜக தலைவர்களுடன் தொடர்பில் உள்ளேன். அடுத்த பத்து நாள்களில் இந்த இரண்டில் ஏதேனும் ஒரு கட்சியில் சேருவது குறித்த முடிவை எடுப்பேன். முன்னாள் மத்திய அமைச்சர் சிதம்பரம், காங்கிரஸ் கட்சியில் மீண்டும் இணைய என்னை கேட்டு கொண்டார். ஆனால், நான் மறுத்துவிட்டேன்.

தமிழ்நாட்டில் நடைபெற்ற உட்கட்சி தேர்தலில் காங்கிரஸ் மோசடி செய்துள்ளது. அதுகுறித்து பேசியதால்தான், நான் இடைநீக்கம் செய்யப்பட்டுள்ளேன். ஆனால், கட்சியிலிருந்து இன்னும் நீக்கப்படவில்லை" என்றார்.

கடந்த நாடாளுமன்ற தேர்தலில் சிறுபான்மை சமூகத்தை சேர்ந்த ஒருவரை கூட வேட்பாளராக அறிவிக்காத காங்கிரஸ், சமூக நீதி பற்றி பேச உரிமையில்லை எனவும் முன்னாள் மேயர் கராத்தே தியாகராஜன் விமர்சித்துள்ளார். முன்னதாக, சென்னையில் உள்ள அவரது வீட்டில் ஆதரவாளர்களை சந்தித்த தியாகராஜன், எதிர்கால அரசியல் குறித்து ஆலோசனை நடத்தினார். கடந்த 2019ஆம் ஆண்டு, நாடாளுமன்ற தேர்தலின்போது, கட்சிக்கு எதிராக செயல்பட்டதாகக் கூறி சென்னை தெற்கு மாவட்ட செயலாளர் பதவியிலிருந்து அவர் நீக்கப்பட்டார்.

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.