ETV Bharat / state

மாணவர்கள் நெகிழிப் பொருட்கள் பயன்படுத்தத் தடை - பள்ளிக் கல்வித் துறை - ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக்

சென்னை: மாணவர்கள் ஒருமுறை உபயோகிக்கும் நெகிழிப் பொருட்களை பயன்படுத்த தடைவிதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.

plastic-products
author img

By

Published : Sep 11, 2019, 9:04 AM IST

தமிழ்நாட்டில் உள்ள பள்ளிகளில் ஒருமுறை உபயோகப்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவற்றை கைப்பற்றி தலைமை ஆசிரியர்கள் முறைப்படி அழிக்க வேண்டுமென பள்ளிக் கல்வித் துறை அறிவுறுத்தியுள்ளது.

இது தொடர்பாக பள்ளிக் கல்வித் துறை இயக்குநர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மைக் கல்வி அலுவலர்களுக்கு சுற்றறிக்கை அனுப்பியுள்ளார். அதில், "மத்திய அரசு மகாத்மா காந்தி பிறந்த நாளில் தொடர்ந்து ஒரு வாரம் பிரதமர் தலைமையில் தூய்மை இந்தியா திட்டத்தை 2017ஆம் ஆண்டு முதல் செயல்படுத்திவருகிறது. தூய்மை இந்தியா இயக்கத் திட்டத்தில் பொதுமக்கள், அரசியல் தலைவர்கள், அரசு அலுவலர்கள், விளையாட்டு வீரர்கள், திரையுலகினர், உள்ளாட்சித் துறையின் பிரதிநிதிகள், மாணவர்கள் உள்ளிட்டோர் கலந்துகொண்டு தூய்மை குறித்தும், கழிவறை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

கடந்த ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர், பயன்படுத்தப்பட்ட நெகிழிவுக் கழிவுகளை ஒழிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிக் கழிவுகள் மேலாண்மை குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தவும் அறிவுறுத்தியிருந்தார்.

students-are-banned-from-using-plastic-products-tn-education-dept
நெகிழிப் பொருட்களை பயன்படுத்தத் தடைவிதித்து பள்ளிக் கல்வித் துறை உத்தரவு

எனவே நாடு முழுவதும் செப்டம்பர் 11ஆம் தேதி ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அக்டோபர் 2, 3 ஆகிய தேதிகளில் பயன்படுத்தப்படும் நெகிழிக் கழிவுகளை பெறுவதுடன், அதனை மறுசுழற்சி செய்வது குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என தெரிவித்துள்ளது.

அந்தவகையில், பள்ளிகளிலும் மாணவர்கள் தங்களின் வீடுகளில் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்றும் குறிப்பிட்டுள்ளது. பள்ளிகளில் மாணவர்கள் ஒருமுறை பயன்படுத்தக்கூடிய நெகிழிப் பொருட்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற உபயோகித்தால் அவற்றைப் பெற்று முறைப்படி அழிக்க வேண்டும்" எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Intro:மாணவர்கள் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை

Body:மாணவர்கள் ஒருமுறை உபயோகிக்கும் பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்த தடை
சென்னை,
தமிழகத்தில் உள்ள பள்ளிகளில் ஒரு முறை உபயோகப்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை மாணவர்கள் பயன்படுத்தினால் அவற்றை பெற்ற தலைமை ஆசிரியர்கள் முறைப்படி அழிக்க வேண்டுமென பள்ளிக்கல்வித்துறை அறிவுறுத்தியுள்ளது.

பள்ளிக்கல்வித்துறை இயக்குனர் கண்ணப்பன் அனைத்து மாவட்ட முதன்மை கல்வி அலுவலர்களுக்கும் அனுப்பியுள்ள கடிதத்தில் கூறப்பட்டுள்ளதாவது, மத்திய அரசு காந்தி பிறந்த நாளில் தொடர்ந்து ஒரு வாரம் பிரதமர் தலைமையில் தூய்மை பார திட்டத்தினை 2017 ம் ஆண்டு முதல் செயல்படுத்தி வருகிறது. தூய்மை பாரத இயக்கத் திட்டத்தில் பொதுமக்கள் ,அரசியல் தலைவர்கள் ,அரசு அதிகாரிகள் ,விளையாட்டு வீரர்கள் ,நடிகர்கள் ,உள்ளாட்சித் துறையின் பிரதிநிதிகள் ,குழந்தைகள் உள்ளிட்டோர் கலந்து கொண்டு தூய்மை குறித்தும், , கழிவறை பயன்பாடு குறித்தும் விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகின்றனர்.

இந்நிலையில் ஆகஸ்ட் 15 சுதந்திர தினத்தன்று உரையாற்றிய பிரதமர், பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை ஒழிக்க வேண்டுமென அழைப்பு விடுத்துள்ளார். அதிலும் குறிப்பாக இந்த ஆண்டு ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் கழிவுகள் மேலாண்மை குறித்து விழிப்புணர்வுக்கு வேண்டுகோள் விடுத்துள்ளார்.
எனவே இந்தியா முழுவதும் செப்டம்பர் 11 ஆம் தேதி ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்கள் குறித்த விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தி உள்ளது. மேலும் அக்டோபர் 2,3ந் தேதி பயன்படுத்தப்பட்ட பிளாஸ்டிக் கழிவுகளை பெறுவதுடன், மறுசுழற்சி குறித்தும் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என கூறியுள்ளது.

எனவே பள்ளிகளிலும்,மாணவர்கள் தங்களின் வீடுகளில் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை பயன்படுத்துவதால் ஏற்படக்கூடிய பாதிப்பு குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். மேலும் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களுக்கு மாற்றுப் பொருள் மாணவர்களுக்கு அறிவுறுத்த வேண்டும்.
பள்ளிகளில் மாணவர்கள் ஒரு முறை பயன்படுத்தக்கூடிய பிளாஸ்டிக் பொருட்களை உபயோகிக்க அனுமதிக்கக் கூடாது. அதுபோன்ற உபயோகித்தால் அவற்றைப் பெற்று முறைப்படி அழிக்க வேண்டும் என அதில் கூறியுள்ளார்.

Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.