ETV Bharat / state

3ஆவது மாடியிலிருந்து தவறி விழுந்த சிந்துவிற்கு சிகிச்சை தொடக்கம்

சென்னையில் மூன்றாவது மாடியில் இருந்து தவறி விழுந்து படுத்த படுக்கையாக உள்ள மாணவி சிந்துவிற்கு ஓமந்தூரார் பல்நோக்கு அரசு மருத்துவமனையில் சிகிச்சை தொடங்கப்பட்டுள்ளது.

முதலமைச்சர் உத்தரவின்படி மாணவி சிந்துவிற்கு தொடங்கியது மருத்துவ சிகிச்சை

author img

By

Published : May 20, 2022, 12:27 PM IST

சென்னை: கோடம்பாக்கத்தைச் சேர்ந்த சக்தியின் மகள் சிந்து. கடந்த 2020 டிசம்பர் மாதம் நண்பர் வீட்டின் மூன்றாவது மாடியில் சிந்து விளையாடினார். அப்போது, எதிர்பாராத விதமாக கீழே விழுந்ததில், அவருடைய இரண்டு கால்களின் எலும்புகளும் முறிந்தன. தாடையின் ஒரு பகுதி முழுவதும் சேதமைடைந்தது.

சென்னை ராஜிவ் காந்தி அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டு, 10-க்கும் மேற்பட்ட அறுவை சிகிச்சை அவருக்கு மேற்கொள்ளப்பட்டது. இதில், உயிர் தப்பிய சிந்து இரண்டு ஆண்டுகளாக படுத்த படுக்கையாக உள்ளார். இந்நிலையில் ஆசிரியர்கள் மற்றும் உறவினர்கள் உதவியுடன், வீட்டில் இருந்தப்படி படித்து 12 ஆம் வகுப்பு தேர்வு எழுதினார். இதுகுறித்து வெளியான செய்தியை தொடர்ந்து, மாணவி சிந்துவின் சிகிச்சைக்கு உதவுவதாக முதலமைச்சர் ஸ்டாலின் அறிவித்தார்.

சிந்துவிற்கு சிகிச்சை தொடக்கம்

அதைத் தொடர்ந்து சென்னை ஓமந்தூரார் அரசு பல்நோக்கு மருத்துவமனையில் சிந்து நேற்று (மே.19) அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்து மருத்துவர்கள் கூறியதாவது, "சிந்துவுக்கு இரண்டு கால்களில் எலும்பு முறிவு ஏற்பட்டுள்ளது. கிருமி தொற்று ஏற்படுவதற்கான வாய்ப்பும் உள்ளது. முதலமைச்சர் ஸ்டாலின் மற்றும் அமைச்சர் சுப்பிரமணியன் ஆகியோர் தொடர்ந்து, நிபுணத்துவம் வாய்ந்த அரசு மருத்துவர்களைக் கொண்டு சிகிச்சை அளிக்க உத்தரவிட்டுள்ளனர்.

இதையடுத்து பல்துறை அடங்கிய பரிசோதனை சிந்துவுக்கு மேற்கொள்ளப்பட்டது. ஸ்டான்லி மற்றும் சென்னை பல் மருத்துவமனையில் இருந்து சில மருத்துவர்கள் வர உள்ளனர். அவர்களும், சிந்துவை பரிசோதித்து, சிகிச்சை நடைமுறைகள் குறித்து முடிவெடுக்க உள்ளனர். முதற்கட்டமாக சிந்துவை நடக்க வைக்கவும், அதன்பின் அவரை சாப்பிட வைப்பதற்கான முயற்சி எடுக்கப்படும்" என்றனர்.

இதையும் படிங்க: 'அப்படிப்போடு' - பழங்குடியின மக்களுடன் பாரம்பரிய நடனமாடிய முதலமைச்சர் மு.க.ஸ்டாலின்!

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.