ETV Bharat / state

கரோனா பரிசோதனை மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை கோரி வழக்கு!

சென்னை: கரோனா பரிசோதனைக்கான மாதிரிகள் எடுக்க லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை விதித்து உத்தரவிடக் கோரி சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.

stay petition filed for lab technician take corona test in all govt hospital’s

author img

By

Published : Apr 25, 2020, 10:44 AM IST

தமிழ்நாடு அரசு மருத்துவ லேப் டெக்னீசியன்கள் சங்கத்தின் பொதுச் செயலாளர் கோபிநாதன் உயர் நீதிமன்றத்தில் தாக்கல் செய்துள்ள மனுவில், "கரோனா பரிசோதனைக்கு தொண்டை மற்றும் மூக்கிலிருந்து மாதிரிகளை எடுக்கும்போது காது, மூக்கு, தொண்டைக்கு சிகிச்சை அளிக்கும் இ.என்.டி. மருத்துவர்களையும் மருத்துவ மேற்படிப்பு பயிற்சி மருத்துவர்களையும் மட்டுமே பயன்படுத்த வேண்டும் என உலக சுகாதார நிறுவனமும் மத்திய அரசும் விதிமுறைகளை வகுத்துள்ளன. மாதிரிகளைப் பரிசோதனை செய்து, முடிவுகளை வழங்குவது மட்டுமே லேப் டெக்னீசியனின் பணியாகும்.

ஆனால், அரசு மருத்துவமனைகளில் உலக சுகாதார நிறுவனத்தின் விதிமுறைகளைப் பின்பற்றாமல் லேப் டெக்னீசியன் மூலமாகவே மாதிரிகளை எடுக்க வற்புறுத்தப்படுகின்றனர். 12ஆம் வகுப்புக்குப் பிறகு டிப்ளமோ மட்டுமே முடித்துள்ள அவர்கள், உடலியல், உடற்கூறியல் படித்தவர்கள் மட்டுமே செய்யக்கூடிய பணிகளைச் செய்யக்கூடாது என விதிகள் உள்ளன. ஆனால் இந்த விதிமுறைகளை மீறும் வகையில் மருத்துவமனையில் உள்ள உயர் அலுவலர்கள் லேப் டெக்னீசியன்களை கட்டாயப்படுத்தப்படுகின்றனர்.

கரோனா சிகிச்சை வார்டுகளில் மருத்துவர்கள், செவிலியர் மட்டுமே உரிய பாதுகாப்பு உடைகளுடன் செல்ல வேண்டும் என அறிவுறுத்தப்பட்ட நிலையில், அங்கும் லேப் டெக்னீசியன்கள் சென்று பணிபுரியும்படி கட்டாயப்படுத்தப்படுகிறார்கள். அவர்களுக்கு பாதுகாப்பு உபகரணங்கள் வழங்குவதில்லை.

உலக சுகாதார நிறுவன விதிமுறைகளைஒ பின்பற்றும்படி, மத்திய, மாநில அரசுகளுக்கும் அரசு மருத்துவக் கல்லூரி மருத்துமனை முதல்வர்களுக்கும் ஏப்ரல் 1ஆம் தேதி மனு கொடுத்தும் இதுவரை எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை. மாதிரிகள் எடுக்க வகுக்கப்பட்ட விதிமுறைகளைப் பின்பற்ற வேண்டுமென மத்தியம், மாநில அரசுகளுக்கு உத்தரவிட வேண்டும். மேலும் லேப் டெக்னீசியன்களை பயன்படுத்த தடை விதிக்க வேண்டும்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது. இந்த மனு விரைவில் விசாரணைக்கு வரவுள்ளது.

For All Latest Updates

TAGGED:

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.