ETV Bharat / state

கொளத்தூரில் அரசு புறநகர் மருத்துவமனையைத் திறந்து வைத்த முதலமைச்சர் ஸ்டாலின்

author img

By

Published : Aug 13, 2021, 10:50 PM IST

கொளத்தூர் சட்டப்பேரவைத் தொகுதிக்குட்பட்ட பெரியார் நகரில் மேம்படுத்தப்பட்ட அரசு புறநகர் மருத்துவமனையை, முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் திறந்து வைத்தார்.

Stalin opened Hospital in Kolathur  tn cm Stalin opened Hospital in Kolathur  கொளத்தூரில் அரசு புறநகர் மருத்துவமனை  மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்  கொளத்தூரில் அரசு புறநகர் மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்  chennai news  chennai latest news  கொளத்தூர் சட்டப்பேரவை தொகுதி  மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்  முதலமைச்சர் ஸ்டாலின்  ஸ்டாலின்  mkstalin  சென்னை செய்திகள்
மருத்துவமனையை திறந்து வைத்தார் ஸ்டாலின்

சென்னை: தமிழ்நாட்டில் கரோனா மூன்றாம் அலை பாதிப்பை எதிர்கொள்ளும் விதமாக சென்னையில் கே.கே.நகர், தண்டையார்பேட்டை, அண்ணா நகர், பெரியார் நகரில் மருத்துவமனைகள் கூடுதல் மருத்துவக் கட்டமைப்பு வசதிகளுடன் தரம் உயர்த்தப்பட்டு வருகின்றன.

அந்தவகையில் 100 படுக்கைகளுடன் இயங்கி வந்த பெரியார் நகர் அரசு மருத்துவமனை, தற்போது 300 படுக்கையுடைய மருத்துவமனையாக மேம்படுத்தப்பட்டுள்ளது. இதையடுத்து சிடி ஸ்கேன், கூடுதல் ஆக்ஸிஜன் படுக்கை வசதியும் ஏற்படுத்தப்பட்டுள்ளது. இம்மருத்துவமனையை 15.52 கோடி செலவில், 83 நாட்களில் மேம்படுத்தப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

திறந்து வைப்பு

மருத்துவமனையைத் திறந்து வைப்பதற்காக வருகை தந்த முதலமைச்சருக்கு, கொளத்தூர் எவர்வின் பள்ளி மாணவிகள் நடனமாடி வரவேற்பளித்தனர். பின்னர் ரிப்பன் வெட்டி மருத்துவமனையைத் திறந்து வைத்த முதலமைச்சர், ஒவ்வொரு தளங்களாக சென்று பார்வையிட்டார்.

இந்த நிகழ்ச்சியில் பொதுப்பணித்துறை அமைச்சர் எ.வ. வேலு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன், அறநிலையத்துறை அமைச்சர் சேகர்பாபு, மருத்துவம் மற்றும் மக்கள் நல்வாழ்வுத்துறைச் செயலாளர் ராதாகிருஷ்ணன் உள்ளிட்ட முக்கிய அலுவலர்கள் கலந்து கொண்டனர்.

இதையும் படிங்க: 'PM தோனி - CM விஜய்' - மதுரையை கலக்கும் சுவரொட்டிகள்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.