ETV Bharat / state

தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள் உதவிகோரி மனு! - தென்னிந்திய மேடை நடன கலைஞர்கள்

சென்னை: தென் இந்திய மேடை நடனக் கலைஞர்கள் நிவாரண உதவிக்கோரி சென்னை மாவட்ட ஆட்சியருக்கு கோரிக்கை மனு அளித்தனர்.

மேடை நடன கலைஞர்கள்
மேடை நடன கலைஞர்கள்
author img

By

Published : Jun 19, 2020, 1:35 PM IST

தென் இந்திய மேடை நடனக்கலைஞர்கள் சார்பில், சென்னை மாவட்ட ஆட்சியர், தமிழ்நாடு முதலமைச்சர் ஆகியோருக்கு கோரிக்கை மனு வழங்கப்பட்டது.

அம்மனுவில், "நாங்கள் மேடைகளில் திரைப்படப் பாடல்கள், பக்திப் பாடல்கள், விழிப்புணர்வுப் பாடல்கள் உள்ளிட்ட பாடல்களுக்கு ஏற்றார்போல் நடனமாடி மக்களை மகிழ்வித்துவந்தோம். கோயில் திருவிழா மேடைகளிலும் நடனங்கள் ஆடிவந்தோம்.

அதன்மூலம் கிடைக்கும் வருமானத்தை வைத்து பிழைத்துவந்தோம். நாங்கள் இந்த மேடை நடனப் பணிகளை மட்டுமே நம்பி இதில் வரும் வருமானத்தில் குடும்பச் செலவு, மருத்துவச் செலவு, கல்விச் செலவு என அனைத்தையும் பார்த்துக்கொண்டிருந்தோம். எங்களுக்குத் தெரிந்தது இந்த நடனத்தொழில்தான்.

கரோனா தொற்று பரவலால் கடந்த மூன்று மாதங்களாக எங்களுக்கு வேலை இல்லாமல் போய்விட்டதால், மிகவும் பாதிப்பிற்கு உள்ளாகியுள்ளோம். மீண்டும் எப்போது பழைய நிலை திரும்பும் எனத் தெரியாமல் வாழ்வாதாரம் இல்லாமல் பாதிக்கப்பட்டுள்ளோம்.

எனவே எங்கள் நிலையைக் கருத்தில்கொண்டு நிவாரண உதவி வழங்கவும், கிராமிய கலை நலவாரியத்தில் எங்களைப் போன்ற மேடை நடனக் கலைஞர்களையும் இணைக்கவும் நடவடிக்கைகள் மேற்கொள்ள வேண்டும்" எனக் கோரிக்கைவைத்துள்ளனர்.

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.