ETV Bharat / state

10ஆம் வகுப்பு செய்முறைத் தேர்வு தேதி அறிவிப்பு.. தனித்தேர்வர்களும் பங்கேற்க அறிவுறுத்தல்..

பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரையில் நடைபெறும் என்றும், இதில் தனித்தேர்வர்களும் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என அரசுத் தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

che
che
author img

By

Published : Feb 21, 2023, 6:52 PM IST

சென்னை: அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராம வர்மா இன்று(பிப்.21) வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுதும் மாணவர்களுக்கான அறிவியல் பாட செய்முறைத் தேர்வு வரும் மார்ச் 20ஆம் தேதி முதல் 24ஆம் தேதி வரை நடைபெறும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

இதில், 2023ஆம் ஆண்டு பத்தாம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்களாக விண்ணப்பித்த மாணவர்களும் கலந்து கொண்டு கட்டாயம் தேர்வு எழுத வேண்டும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அதேபோல் ஏற்கனவே அறிவியல் பாட செய்முறைத் தேர்வெழுதி அதில் தேர்ச்சிபெறாத தனித்தேர்வர்களும் இந்த செய்முறைத் தேர்வில், தவறாமல் கலந்து கொண்டு தேர்வு எழுத வேண்டும் என குறிப்பிடப்பட்டுள்ளது. அறிவியல் பாட செய்முறைப் பயிற்சி வகுப்புகள் நடைபெற்ற பள்ளிகளிலேயே தனித்தேர்வர்கள் தேர்வு எழுத வேண்டும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

அறிவியல் பாட செய்முறைத் தேர்வு நடைபெறவுள்ள தேதி குறித்து, அறிவியல் செய்முறைப் பயிற்சி பெற்ற பள்ளியிலிருந்து அறிவிப்பு ஏதும் கிடைக்கப் பெறாதவர்கள், இந்த அறிவிப்பு மூலம் தெரிந்து கொண்டு, அந்தப் பள்ளியின் அலுவலரை சந்தித்து, அறிவியல் பாட செய்முறைத் தேர்வில் தவறாமல் கலந்து கொள்ள வேண்டும் என்றும் குறிப்பிடப்பட்டுள்ளது.

இதையும் படிங்க: சென்னை - அந்தமான் இடையே 4 நாட்களுக்கு விமான சேவை ரத்து!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.