ETV Bharat / state

தீபாவளி பண்டிகை; ஆரவாரமின்றி பொதுமக்களை வழியனுப்பிய கோயம்பேடு பேருந்து நிலையம்..

Special Bus for diwali 2023: தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு படையெடுத்த பொதுமக்கள் முன்பதிவு செய்ததாலும், போக்குவரத்து துறையின் சிறப்பு ஏற்பாடுகளாலும், பேருந்திற்காக காத்திருக்கும் சூழல் இல்லை என பொதுமக்கள் மகிழ்ச்சி தெரிவித்துள்ளனர்.

special bus for diwali 2023
தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 11, 2023, 10:39 PM IST

தீபாவளி பண்டிகையை கொண்டாட சொந்த ஊர்களுக்கு செல்ல பொதுமக்கள்

சென்னை: நாடு முழுவதும் நாளை (நவ.11) தீபாவளி பண்டிகை வெகுவிமரிசையாக கொண்டாடப்பட உள்ளது. இந்த நிலையில், சென்னையிலிருந்து பொதுமக்கள் தங்களது சொந்த ஊர்களுக்கு செல்லவதற்காக பேருந்து நிலையங்களில் பொதுமக்களின் கூட்டம் வழக்கத்தை விட சற்று அதிகரித்தே உள்ளது. இதனையடுத்து, பொதுமக்கள் போக்குவரத்து நெரிசலில் சிக்கிக்கொள்ளாமல் இருப்பதற்கு போக்குவரத்து துறை சார்பாக சென்னையில் 5 இடங்களில் தற்காலிக பேருந்து நிலையங்கள் அமைக்கப்பட்டுள்ளன.

மாதவரம், கே.கே.நகர், தாம்பரம், பூந்தமல்லி, கோயம்பேடு ஆகிய பகுதிகளிலிருந்து பேருந்துகள் இயக்க ஏற்பாடு செய்யப்பட்டுள்ளன. இதில், கடந்த 9ஆம் தேதி முதல் 11ஆம் தேதி வரை தலைநகரிலிருந்து செல்லவும், 13ஆம் தேதி முதல் 15ஆம் தேதிவரை பல்வேறு மாவட்டங்களிலிருந்து தலைநகருக்கு திரும்பவும் சிறப்பு பேருந்துகளை தமிழ்நாடு போக்குவரத்து துறை சார்பில் ஏற்பாடு செய்யபட்டுள்ளது. இந்த சிறப்பு பேருந்துகளில் பொதுமக்கள் சிரமமின்றி பயணிக்க முன்பதிவு மையங்களும் ஏற்பாடு செய்யபட்டுள்ளன.

குறிப்பாக, கோயம்பேடு பேருந்து நிலையத்தை பொருத்தவரையில், பொதுமக்களுக்கு உதவும் வகையில், குறைதீர் அறைகள் மற்றும் பேருந்து நிலையத்தில் உள்ளே நுழைந்தவுடனே, எந்தெந்த மாவட்டத்திற்கு பேருந்துகள் எந்த நடைமேடையில் உள்ளது என்ற அறிவிப்பு பலகைகள் வைக்கப்பட்டுள்ளது. மேலும், பயணிகளின் வசதிக்காக தகவல் மையமும் அமைக்கப்பட்டுள்ளது. பேருந்து குறித்து பயணிகளுக்கு ஏதும் சந்தேகம் ஏற்பட்டாலோ அல்லது அவர்கள் முன்பதிவு செய்து பேருந்து எங்கு நிற்கிறது என்ற தகவலை வழங்குவதற்காகவும் சிறப்பு ஏற்பாடு செய்யபட்டுள்ளது.

மேலும், முன்பதிவு என்பது முன்னரே அறிவித்ததால், இந்த முறை பேருந்திற்காக நீண்ட நேரம் காத்திருக்க வேண்டிய அவசியம் ஏற்படவில்லை என பொதுமக்கள் கருத்து தெரிவித்தனர். காவல்துறையின் கண்காணிப்பை பொருத்தவரை, தொடர்ந்து பேருந்து நிலையத்தில் ரோந்து பணியில் ஈடுபட்டு பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்து வருகின்றனர். தொடர்ந்து, கோயம்பேடு பேருந்து நிலையத்தில் நடைபெறும் அனைத்து நிகழ்வுகளும் சிசிடிவி கேமரா மூலம் கட்டுபாட்டு அறையில் கண்காணிக்கப்பட்டு வருகிறது.

கிளாம்பாக்கத்தில் பேருந்து நிலையம் தயாராகி வரக்கூடிய நிலையில், கோயம்பேடு பேருந்து நிலையத்திற்கு அநேகமாக இது தான் கடைசி தீபாவளி பண்டிகையாக இருக்கக்கூடும் என எதிர்பார்க்கப்படுகிறது. போக்குவரத்து மற்றும் காவல் துறையின் பாதுகாப்பு ஏற்பாடால், பொதுமக்கள் எந்தவித ஆரவாரம் இல்லாமல் அமைதியான முறையில் தலைநகர் சென்னையிலிருந்து தீபாவளி பண்டிகைக்காக பொதுமக்கள் அவர்களது சொந்த ஊர்களுக்கு சென்று வருகின்றனர்.

இதையும் படிங்க: தித்திக்கும் தீபாவளியை தீங்கில்லாமல் கொண்டாடுவது எப்படி? - தீயணைப்புத் துறை பயிற்சி மைய இயக்குனர் மீனாட்சி கூறும் அட்வைஸ்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.