ETV Bharat / state

சென்னை டூ கோவை ரயில் பயணிகளுக்கு இன்ப அதிர்ச்சி! நேர விரயத்தை குறைக்க தெற்கு ரயில்வே சூப்பர் அறிவிப்பு!

Southern Railway: சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை ஜோலார்பேட்டை - சேலம் - கோவை ஆகிய வழித்தடங்களில் அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது.

Southern Railway
சென்னை டூ கோவை ரயில்களின் வேகத்தை அதிகரிக்க வாய்ப்பு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Nov 23, 2023, 9:35 PM IST

சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில்களின் வேகத்தை ஜோலார்பேட்டை - சேலம்- கோவை ஆகிய வழித்தடத்தில் அதிகரிக்கப்பட உள்ளதாக தெற்கு ரயில்வே நிர்வாகம் அறிவித்துள்ளது. இதுகுறித்து தெற்கு ரயில்வே சார்பில் வெளியிட்ட செய்திக்குறிப்பில், "தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ஜோலார்பேட்டை- சேலம்- கோவை வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் வரும் மார்ச் 2024 ஆம் ஆண்டுக்குள் மணிக்கு 130 கி.மீ வேகத்தில் இயக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

சென்னை எழும்பூர் - விழுப்புரம் - திருச்சி (336.04 கி.மீ) வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் 2025- 2026 ஆம் நிதியாண்டுக்குள் மணிக்கு 130 கி.மீ எனவும், திருச்சி - திண்டுக்கல் - மதுரை - திருநெல்வேலி - நாகர்கோவில் வழித்தடத்தில் இயக்கப்படும் ரயில்களின் வேகம் 2026 - 2027ஆம் நிதியாண்டுக்குள் மணிக்கு 130 கி.மீ வேகத்திற்கும் உயர்த்த திட்டமிடப்பட்டுள்ளது.

இதேபோல், கரூர் - திண்டுக்கல், ஆரல்வாய்மொழி - நான்குநேரி - மேலப்பாளையம், மயிலாடுதுறை - திருவாரூர், மதுரை - திருமங்கலம் இடையிலான வழித்தடங்களில் இயக்கப்படும் ரயில்கள் 2024 மார்ச் மாதத்துக்குள் மணிக்கு 110 கி.மீ வேகத்தில் இயக்கப்படும். 2024 பிப்ரவரி மாதத்துக்குள் 1,225 கி.மீ தொலைவுக்கான ரயில் தண்டவாளம் மறுசீரமைப்பு பணிகள் முடிக்க இலக்கு நிர்ணயிக்கப்பட்டுள்ளது.

ரயிலின் வேகத்தை அதிகரிக்கும் வகையில் தண்டவாளங்கள் மறுசீரமைப்பு மட்டுமின்றி பல்வேறு பணிகளும் மேற்கொள்ளப்படுகின்றன. குறிப்பாக பாலங்களை வலுப்படுத்தல், வளைவுகளில் எளிதாக திரும்புவதை உறுதி செய்தல், விபத்தை குறைக்கும் வகையில் தடுப்புச் சுவர்கள் அமைப்பது, தானியங்கி சிக்னல் அமைப்பை மேம்படுத்துவது உள்ளிட்ட சீரமைப்பு பணிகள் மற்றும் மேம்பாட்டு பணிகள் தற்போது மேற்கொள்ளப்படுகிறது" என தெற்கு ரயில்வே வெளியிட்டு உள்ள செய்திக் குறிப்பில் தெரிவிக்கபட்டுள்ளது.

சென்னை டூ கோவை: சென்னையில் இருந்து கோவைக்கு இயக்கப்படும் ரயில்களான சேரன் விரைவு ரயில், கோவை சூப்பர் ஃபாஸ்ட், நீலகிரி எக்ஸ்பிரஸ், வந்தே பாரத், சதாப்தி உள்ளிட்ட ரயில்கள் சராசரியாக 70-85 கி.மீ வேகத்திலும், குறிப்பிட்ட வழித்தடத்தில் 100 கி.மீ வேகத்திலும் பயணிக்கின்றன.

இனி வரும் காலங்களில் மேலே குறிப்பிட்டுள்ள வழித்தடத்தில் வேகம் அதிகரித்தால், பயண நேரம் வெகுவாக குறைய வாய்ப்புள்ளது. வந்தே பாரத் ரயிலின் வேகம் 110 கி.மீ இருந்து 130 கி.மீ வேகத்தில் பயணிக்க வாய்ப்புள்ளதாக இருக்கும் என ரயில்வே வட்டாரங்கள் தெரிவிக்கின்றன.

தெற்கு ரயில்வேக்கு உட்பட்ட ரயில்வே திட்டங்களுக்காக இந்த 2023-24 ஆம் நிதியாண்டில், ரூ.6,080 கோடி ஒதுக்கப்பட்டுள்ளது. இதில், சென்னை எழும்பூர், தாம்பரம் உள்ளிட்ட பல்வேறு ரயில் நிலையங்கள் உயர் தரத்தில் மேம்படுத்தப்பட்டு வருகின்றன. மேலும், பயண நேரத்தைக் குறைக்கும் வகையில் தண்டவாளத்தை மேம்படுத்தும் பணிகளும் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன.

இதையும் படிங்க: நெடுஞ்சாலை சென்டர் மீடியன் பாதைகளை மூடக்கோரிய வழக்கு - மனுதாரருக்கு அபராதம் விதித்து நீதிபதி உத்தரவு!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.