ETV Bharat / state

இனி பள்ளி காலை வணக்க நிகழ்வில் சமூகநீதி பாடல்; விழுதுகள் தொடக்கத்தை அடுத்து அன்பில் மகேஷ் அறிவிப்பு - சமூகநீதிக் கொள்கை

Anbil Mahesh: இனிவரும் காலங்களில் சமூகநீதி பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் எனவும், இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்து பள்ளிகளுக்கும் அனுப்பப்படும் என அமைச்சர் அன்பில் மகேஸ் பொய்யாமொழி தெரிவித்துள்ளார்.

அமைச்சர் உதயநிதியின் வேண்டுகோளை ஏற்ற அன்பில் மகேஷ்

author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Jan 10, 2024, 9:18 AM IST

சென்னை: அரசுப்பள்ளி முன்னாள் மாணவர்களை ஒருங்கிணைத்து, விழுதுகள் தொடக்க விழா சென்னை நந்தம்பாக்கம் வர்த்தக மையத்தில் நடைபெற்றது. இவ்விழாவில் பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, முதலமைச்சர் மு.க.ஸ்டாலினின் வாழ்த்துச் செய்தியை வாசித்தார்.

அந்த வாழ்த்தில் "தமிழ்நாடு முன்னேறிய மாநிலமாக திகழ்வதற்கு முக்கியக் காரணம், கல்வி. அத்தகைய கல்வியை அனைவருக்குமாக மாற்றிய பெருமை அரசுப் பள்ளிகளையே சாரும். இங்கே படித்து, பல துறைகளில் சாதனை படைத்த அனைவரையும் மனதார வாழ்த்துகிறேன்.

இந்த முன்னாள் மாணவர்களுக்கான மாநாடு, பள்ளிக் கல்வித்துறை வரலாற்றில் முக்கியமான ஒரு தருணம். நாம் அனைவரும் தான் அரசுப் பள்ளிகளில் படித்த மாணவர்களுக்கு ஊக்கமாகவும், உறுதுணையாக இருப்பதோடு, அந்த பள்ளிக்கும், ஊருக்கும் இணைப்புப் பாலமாக இருக்க வேண்டும். நம் பள்ளி நம் பெருமை என்கிற முழக்கத்திற்கு நீங்களே சொந்தம், நீங்களே விழுதுகள், நீங்களே விழுதுகளாக நின்று பள்ளியை பெருமைப்படுத்த வேண்டும்.

விழுதுகளான ஒவ்வொருவரும் அரசுப் பள்ளிகளை பேணிக் காப்பதையும், முன்னேற்றுவதையும் பொறுப்பாக எடுப்போம். அடுத்த தலைமுறைக்கு வழிகாட்டியாக இருப்போம்” என்று தெரிவித்திருந்தார். அதைத் தொடர்ந்து பேசிய பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ், “பெற்ற தாய்க்கு நிகரான பள்ளிக்கு சேயாக இருந்து கடமையை ஆற்ற வேண்டும் என்று இங்கே பலர் வந்திருக்கின்றனர்.

முன்னாள் மாணவர்கள், தான் படித்த பள்ளிக்கு உதவுவதை ஒரு உதவியாக இல்லாமல், கடமையாக நினைத்து செயலாற்ற வேண்டும். 7 லட்சம் முன்னாள் மாணவர்கள் நம்மோடு இங்கே இணைந்திருக்கின்றனர் என்பதே இந்த விழுதுகள் அமைப்பின் முதலாவது பெரிய வெற்றியாக பார்க்கிறேன்.

ஒவ்வொரு மாவட்டத்திற்கும் நேரடியாகச் சென்று பள்ளிகளில் ஆய்வுகளை மேற்கொண்டுள்ளேன். அங்கே சென்ற போதெல்லாம், முன்னாள் மாணவர் அமைப்பின் சார்பாக ஒவ்வொரு பள்ளிக்கும் செய்யப்பட்ட உதவிகளை பார்க்கும்போது நெகிழ்ச்சியாக இருக்கும். அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் யோசனையை ஏற்று, பள்ளி மேலாண்மைக் குழுவில் முன்னாள் மாணவர்களையும் உறுப்பினராக விரைவில் சேர்ப்போம்” என்றார்.

அதைத் தொடர்ந்து, சமூக விடுதலையை அடிப்படையாகக் கொண்ட சமத்துவம் பேசும் 10 பாடல்கள் அடங்கிய இசைத் தொகுப்பை இளைஞர் நலன் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத்துறை அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் வெளியிட்டு பேசும்போது, “அரசுப் பள்ளியின் ஆலமரத்து விழுதுகளே, முன்னாள் மாணவர்கள். இந்திய நாட்டுக்காக வழிகாட்டும்படி மாநில அரசு பல திட்டங்களை கொண்டு வருவது போல, இந்த விழுதுகள் ஒரு முன்னோடித் திட்டம்.

அரசுப் பள்ளி மேம்பாட்டில் அரசுக்கு மட்டுமல்ல, சமூகத்திற்கும் பங்கு உண்டு. இதற்கு முன்பும் பல ஊர்களில் முன்னாள் மாணவர்களே தானாக முன் வந்து உதவுகின்றனர். அதை முறையாக செய்வதற்கே இத்திட்டம் கொண்டு வரப்பட்டுள்ளது. பள்ளிக் காலமே நம் மனதில் பசுமையாக இருக்கிற காலம். நமக்கு முதல் பாராட்டு, திட்டு, நட்பு என முதல் நினைவுகள் எல்லாமே பள்ளிகள் தந்தவையே. பள்ளிக் கல்வித்துறை அமைச்சருக்கும் எனக்குமான நட்பு கூட பள்ளி தந்ததே.

முன்னாள் மாணவர்கள் அமைப்பு என்பது, தனியார் பள்ளி கல்லூரிகளில்தான் இருக்கும், அரசுப் பள்ளிகளிலும் இதற்கான அமைப்பை முன்னெடுத்திருப்பது பெரிய நம்பிக்கையை அளிக்கிறது. அரசுப் பள்ளி மாணவர்கள், உலக அளவில் பல முன்னணி நிறுவனங்களில் பணியாற்றுகின்றனர்.

இஸ்ரோ விஞ்ஞானிகள் எல்லாம் அரசுப் பள்ளி மாணவர்கள்தான். சந்திராயன் மயில்சாமி, சிவன், நிகர்ஷாஜி, வீரமுத்துவேல் முதலானவர்களைப் பாராட்டி ரூ.25 லட்சம் பரிசளித்தோம். தனக்கு கிடைத்த பாராட்டு பணத்தை விஞ்ஞானி வீரமுத்துவேல், தான் படித்த கல்வி நிறுவனத்துக்கே கொடுத்தார்.

இன்று நிறைய இடங்களில் முன்னாள் மாணவர்கள் ஸ்மார்ட் வகுப்பறை, கட்டடம் கட்டித் தந்தனர் என படிக்கும்போது பெருமையாக உள்ளது. அனைவரும் ஓரணியில் இணைந்து வாருங்கள், விழுதுகள் மூலம் நம் பள்ளிகளை வலிமைபடுத்துவோம். இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு, வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்” என வேண்டுகோள் விடுத்தார்.

  • அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வைத் தொடங்கி வைத்த மாண்புமிகு அமைச்சர் @Udhaystalin அவர்கள் @tnschoolsedu சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை வெளியிட்டார்.

    தொடர்ந்து உரையாற்றிய மாண்புமிகு… pic.twitter.com/4Ps4DkMgnk

    — Anbil Mahesh (@Anbil_Mahesh) January 9, 2024 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதனைத் தொடர்ந்து பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஸ் தனது எக்ஸ் பக்கத்தில், “அரசுப் பள்ளி முன்னாள் மாணவர்களை ஒன்றிணைக்கும் "விழுதுகள்" நிகழ்வைத் தொடங்கி வைத்த அமைச்சர் உதயநிதி ஸ்டாலின், பள்ளிக்கல்வித்துறை சார்பில் உருவாக்கப்பட்ட "சமூகநீதி" உள்ளிட்ட பொருண்மைகள் சார்ந்த 10 பாடல்கள் அடங்கிய குறுந்தகட்டை (CD) வெளியிட்டார்.

தொடர்ந்து உரையாற்றிய அமைச்சர் உதயநிதி, "இந்த 10 பாடல்கள் தொகுப்பில் சமூகநீதியை வலியுறுத்தும் பாடலை அசெம்பிளி நேரத்தில் பாடிவிட்டு வகுப்புக்குச் செல்ல வழிவகை செய்யுமாறு கேட்டுக் கொள்கிறேன்" என்றார்.

சமூகநீதிக் கொள்கையை எப்போதும் அழுத்தமாக வலியுறுத்தும் அமைச்சர் உதயநிதி ஸ்டாலின் கேட்டுக் கொண்டதற்கிணங்க, இனிவரும் காலங்களில் "சமூகநீதி" பாடல் அரசுப் பள்ளிகளின் காலை வணக்க நிகழ்வில் பாடப்படும் என அன்போடு தெரிவித்துக் கொள்கின்றோம். இதற்கான செயல்முறைகள் குறித்த சுற்றறிக்கை விரைவில் அனைத்துப் பள்ளிகளுக்கும் அனுப்பப்படும்‌” என தெரிவித்துள்ளார்.

இதையும் படிங்க: 2வது நாளாக தொடரும் போராட்டம்.. மாநிலம் முழுவதும் 113.16 சதவீத பேருந்துகள் இயக்கம்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.