ETV Bharat / state

விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட 2.4 கிலோ தங்கம்! - today latest news

Smuggled gold seized from flight toilet: அபுதாபியில் இருந்து சென்னை வந்த விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து ரூ.1.5 கோடி மதிப்புடைய 2.4 கிலோ தங்கத்தை சென்னை விமான நிலையத்தில் சுங்கத் துறையினர் கைப்பற்றி, விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

smuggled gold seized from flight toilet
விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட 2.4 கிலோ தங்கம்
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Oct 24, 2023, 8:40 AM IST

சென்னை: ஐக்கிய அரபு நாடுகளின் தலைநகரான அபுதாபியில் இருந்து, இண்டிகோ ஏர்லைன்ஸ் பயணிகள் விமானம் சென்னை சர்வதேச விமான நிலையத்திற்கு வந்தது. அந்த விமானம் மீண்டும் உள்நாட்டு விமானமாக, காலை 10 மணிக்கு, சென்னையில் இருந்து ஹைதராபாத் புறப்பட்டுச் செல்ல இருந்தது.

இதற்கு முன்னதாக விமான ஊழியர்கள் அந்த விமானத்தை சுத்தப்படுத்தும் பணியில் ஈடுபட்டுள்ளனர். அப்போது இண்டிகோ ஏர்லைன்ஸ் விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் பார்சல் ஒன்று இருப்பதைக் கண்டுள்ளனர். இதனை அடுத்து விமான ஊழியர்கள், சென்னை விமான நிலைய மேலாளருக்குத் தகவல் கொடுத்துள்ளனர்.

இதனை அடுத்து விமான நிலைய வெடிகுண்டு நிபுணர்கள் விரைந்து வந்து, விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டிக்குள் இருந்த பார்சலை மெட்டல் டிடெக்டர் மூலம் பரிசோதித்துள்ளனர். அப்போது அதில் வெடிகுண்டு எதுவும் இல்லை என்று உறுதிப்படுத்தப்பட்டதை அடுத்து, அந்த பார்சலை வெளியில் எடுத்துப் பிரித்துப் பார்த்தபோது, அந்தப் பார்சலில் தங்கக் கட்டிகள் இருந்ததைக் கண்டுள்ளனர்.

இதனைத் தொடர்ந்து, விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட தங்கக் கட்டிகளை சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகளிடம் ஒப்படைத்தனர். தற்போது சென்னை விமான நிலைய சுங்க அதிகாரிகள், இது சம்பந்தமாக விசாரணை நடத்தி வருகின்றனர்.

இதன் முதற்கட்ட விசாரணையில், அபுதாபியில் இருந்து தங்கத்தைக் கடத்தி வந்த கடத்தல் ஆசாமி, கடத்தல் தங்கத்தை விமானத்தில் உள்ள கழிவறை தண்ணீர் தொட்டியில் மறைத்து வைத்துவிட்டு, கீழே இறங்கி வெளியில் சென்று விட்டார். அதே கடத்தல் கும்பலைச் சேர்ந்த மற்றொரு ஆசாமி, இந்த விமானத்தில் ஹைதராபாத் செல்வதற்கு உள்நாட்டுப் பயணிகள் விமான டிக்கெட் எடுத்து, இந்த விமானத்தில் பயணித்து, ஹைதராபாத் சென்றதும், இந்த தங்கக் கட்டியை எடுத்துவிட்டு வெளியில் செல்ல திட்டமிட்டு இருக்கிறார் என்று தெரிய வந்துள்ளதாக சுங்கத்துறை அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

மேலும், விமானத்தின் கழிவறை தண்ணீர் தொட்டியில் இருந்து கைப்பற்றப்பட்ட அந்த பார்சலில் சுமார் 2.4 கிலோ தங்கக் கட்டிகள் இருந்ததாகவும், அதன் சர்வதேச மதிப்பு ரூ.1.5 கோடி என்றும் தகவல்கள் வெளியாகியுள்ளது. இதை அடுத்து இந்த கடத்தல் கும்பலை, விமான நிலைய சுங்கத்துறை அதிகாரிகள் தேடி வருகின்றனர். அதோடு சென்னை விமான நிலைய சிசிடிவி கேமரா காட்சிகளையும் ஆய்வு செய்து வருகின்றனர் என்பது குறிப்பிடத்தக்கது.

இதையும் படிங்க: 3 நாளில் 8,000 சிறப்பு பேருந்துகள்.. 4 லட்சம் பேர் பயணம்.. 25ஆம் தேதி வரை சிறப்பு பேருந்து இயக்கம்: டிஎன்எஸ்டிசி!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.