ETV Bharat / state

வாகன தணிக்கையில் துப்பாக்கிகள் பறிமுதல்

சென்னை சி.எம்.பி.டி. சாலையில்  நடத்தப்பட்ட வாகன தணிக்கையில் இரண்டு துப்பாக்கிகளைக் காவல் துறையினர் பறிமுதல்செய்தனர்.

Gun seized  எதற்கும் துணிந்தவன் படம்  சூரியாவின் எதற்கும் துணிந்தவன் படப்பிடிப்பு  படப்பிடிப்பு  shooting  suriya upcoming movie  actor suriya  shooting gun seized by police in chennai  shooting gun seized  shooting gun seized by police  gun seized by police in chennai  shooting  suriya movie etharkum thuninthavan  etharkum thuninthavan movie shooting  வாகன தனிக்கை  சென்னை செய்திகள்  சூரியாவின் எதற்கும் துணிந்தவன்  துப்பாக்கிகள் பறிமுதல்  வாகன தைக்கையில் துப்பாக்கிகள் பறிமுதல்  டம்மி துப்பாக்கிகள்
துப்பாக்கிகள் பறிமுதல்
author img

By

Published : Aug 7, 2021, 1:43 PM IST

சென்னை: சி.எம்.பி.டி. 100 அடி சாலையில் உள்ள தனியார் உணவகம் அருகே காவல் துறையினர் வாகன தணிக்கையில் ஈடுபட்டுவந்தனர். அப்போது அந்த வழியாகச் சென்ற இருசக்கர வாகனத்தை நிறுத்தி, ஒருவர் வைத்திருந்த பையைச் சோதனை செய்தனர்.

அதில் இரண்டு துப்பாக்கிகள் இருப்பதைக் கண்ட காவல் துறையினர், உடனடியாக அந்த நபரை காவல் நிலையத்திற்கு அழைத்துச் சென்று விசாரணை மேற்கொண்டனர். விசாரணையில், அந்த நபர் பெரம்பூரைச் சேர்ந்த விக்டர் (27) என்பது தெரியவந்தது.

மேலும் இவர் பிரபல திரைப்பட இயக்குநரான பாண்டிராஜ் அலுவலகத்தில் உதவியாளராகப் பணியாற்றிவருவதும் தெரியவந்தது.

இதையடுத்து இயக்குநர் பாண்டிராஜ் சூர்யாவை வைத்து 'எதற்கும் துணிந்தவன்' என்ற படத்தை இயக்கிவருவதாகவும், அந்தப் படப்பிடிப்புக்காக இரண்டு டம்மி துப்பாக்கிகள் தேவைப்பட்டதால், விக்டர் துப்பாக்கியை வாங்கிக் கொண்டு, பேருந்து மூலமாக காரைக்குடிக்கு அனுப்பிவைப்பதற்காக கோயம்பேடு பேருந்து நிலையத்திற்குச் சென்றதாகவும் தெரியவந்தது.

ஆனால் அந்த இரண்டு துப்பாக்கிகளும் டம்மிதான் என்பதற்கான முறையான ஆவணங்கள் எதுவும் விக்டரிடம் இல்லாத காரணத்தால் சி.எம்.பி.டி. காவல் துறையினர், இது குறித்து தொடர் விசாரணையில் ஈடுபட்டுவருகின்றனர்.

இதையும் படிங்க: உளுந்தூர்பேட்டை அருகே தொடர் பைக் திருட்டில் ஈடுபட்டவர் கைது

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.