ETV Bharat / state

அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் பதவி விலக வேண்டும்: எஸ்எப்ஐ வலியுறுத்தல்!

சென்னை: அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தரை பதவி விலக கூறி இந்திய மாணவர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம் நடத்தினர்.

ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர்

author img

By

Published : Nov 20, 2020, 1:51 PM IST

சென்னை அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் சூரப்பா மீது 280 கோடி ரூபாய் வரை ஊழல் செய்திருப்பதாக குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. இதனால், அவரை உடனடியாக துணை வேந்தர் பதவியிலிருந்து நீக்க வேண்டும் என இந்திய மாணவர் சங்கத்தினர் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய இந்திய மாணவர் சங்கத்தின் மாநிலச் செயலாளர் மாரியப்பன், “அண்ணா பல்கலைக்கழக துணை வேந்தர் மீது 750 கோடி ரூபாய் வரை ஊழல் குற்றச்சாட்டு சுமத்தப்பட்டுள்ளது. அவரை உடனடியாக பதவியிலிருந்து நீக்க வேண்டும்.

ஆர்ப்பாட்டம் நடத்திய இந்திய மாணவர் சங்கத்தினர்

அவர் பதவியில் நீடித்தால் ஆவணங்களை மறைப்பதற்கான வாய்ப்புகள் உள்ளது. ஆளுநர் அவரை பதவி நீக்கம் செய்ய வேண்டும். மறுமதிப்பீடு உள்ளிட்டவற்றில் நடைபெற்ற முறைகேடுகள் குறித்தும் விசாரணை அலுவலர்கள் விசாரணை செய்து, குறிப்பிட்ட காலத்திற்குள் அறிக்கை தாக்கல் செய்ய வேண்டும்” என்றார்.

இதையும் படிங்க: சூரப்பா மீதான புகார்கள் குறித்த விசாரணையை நாளை தொடங்கவுள்ள நீதிபதி கலையரசன்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.