சென்னை: கூட்டுறவு சங்கம் தொடர்பாக அமைச்சர் ஐ.பெரியசாமி இன்று(ஏப்.5) வெளியிட்ட அறிக்கையில், 'விருதுநகர் மண்டலத்தில், ராஜபாளையம் வட்டம் க்யூ.837 முகவூர் கூட்டுறவு வேளாண்மை கூட்டுறவுக்கடன் சங்கத்தில் விற்பனையாளராகப்பணிபுரியும் கே.தங்கதுரை என்பவர் மீது சுமத்தப்பட்ட பாலியல் தொந்தரவு மற்றும் பணியாளர்களை மிரட்டிப்பணம் வசூலித்தது ஆகிய புகார்கள் நிரூபிக்கப்பட்டதன் அடிப்படையில், கடந்த 30.03.2022 அன்று நிரந்தரப் பணிநீக்கம் செய்யப்பட்டுள்ளார்.
கூட்டுறவு நியாய விலைக்கடைகளில் அரிசிக்கடத்தலில் ஈடுபடுதல், பணியாளர்களை மிரட்டிப்பணம் வசூலித்தல், பாலியல் ரீதியாக தொந்தரவு செய்தல் உள்ளிட்ட குற்றங்களில் ஈடுபடும் கூட்டுறவு சங்கப்பணியாளர்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்கப்படும். இதுதொடர்பாக புகார் அளிக்க விழைவோர் கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் அவர்களது தனி வாட்ஸ்-அப் புகார் எண்ணான 98840 00845இல் புகார் அளிக்கலாம்.
எனவே, மாநிலத்தில் உள்ள அனைத்து நியாயவிலைக் கடை பணியாளர்களும், எந்தவிதமான நிர்பந்தங்களுக்கும் அடிபணியாமல் அச்சமின்றி அர்ப்பணிப்பு உணர்வுடன் பணியாற்ற வேண்டும்' எனத் தெரிவித்துள்ளார்.
இதையும் படிங்க:மதுரை சித்திரைப் பெருவிழா கொடியேற்றத்துடன் தொடக்கம்!