ETV Bharat / state

10,11,12ஆம் வகுப்பு பொதுத்தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்!

author img

By

Published : Mar 8, 2022, 3:38 PM IST

10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், மார்ச் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும், சிறப்பு அனுமதி திட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

10,11,12 ம் வகுப்பு பொதுத் தேர்வு எழுத தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

சென்னை: 10,11,12ஆம் வகுப்புகளுக்கான பொதுத் தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், மார்ச் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும், சிறப்பு அனுமதி திட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் என அரசு தேர்வுத்துறை அறிவித்துள்ளது.

தனித்தேர்வர்கள் விண்ணப்பிக்கலாம்

இது குறித்து அரசுத் தேர்வுத்துறை இயக்குனர் சேதுராமவர்மா வெளியிட்டுள்ள அறிவிப்பில், '10ஆம் வகுப்பு, 11ஆம் வகுப்பு, 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வினை எழுத விரும்பும் தனித்தேர்வர்கள், மார்ச் 9ஆம் தேதி முதல் 16ஆம் தேதி வரையிலும், சிறப்பு அனுமதி திட்டத்தில் மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையிலும் விண்ணப்பிக்கலாம் .

ஏற்கெனவே நேரடித் தனித்தேர்வராக 11ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதி தேர்ச்சிபெற்ற, தேர்ச்சி பெறாத, வருகை புரியாத தேர்வர்கள் அனைவரும், தற்போது 12ஆம் வகுப்பு பொதுத்தேர்வெழுதுவதற்கும், 11ஆம் வகுப்பில் தேர்ச்சி பெறாத பாடங்களை மீண்டும் எழுதுவதற்கும் சேர்த்து விண்ணப்பிக்கலாம்.

விவரங்கள் அறிய அரசின் இணையதளம்

மேலும், தேர்வர்கள் தனித்தேர்வர்களாகத் தேர்வு எழுதுவதற்கு கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுத்துறை சேவை மையங்களுக்கு நேரில் சென்று இணையதளம் மூலம் தங்களது விண்ணப்பத்தினை பதிவு செய்து கொள்ளலாம். தக்கல் (சிறப்பு அனுமதி) முறையில் மார்ச் 18ஆம் தேதி முதல் 21ஆம் தேதி வரையில் விண்ணப்பம் செய்யாதவர்கள் விண்ணப்பிக்கலாம்.

கல்வி மாவட்ட வாரியாக அமைக்கப்பட்டுள்ள அரசுத்தேர்வுத்துறை சேவை மையங்களின் விவரங்கள் மற்றும் ஆன்லைனில் விண்ணப்பங்களைப் பதிவு செய்தல் குறித்த தனித்தேர்வர்களுக்கான தகுதி மற்றும் அறிவுரைகள் ஆகியவற்றை https://www.dge.tn.gov.in/என்ற இணையதளத்தில் விண்ணப்பதாரர்கள் அறிந்து கொள்ளலாம்.

பொதுவான அறிவுரைகள்:- தனித்தேர்வர்கள், மே-2022 பொதுத்தேர்வெழுதுவதற்கு விண்ணப்பிக்க, சேவை மையங்களுக்கு வரும்பொழுது கட்டாயம் முகக்கவசம் அணிந்து வரவேண்டும். போதிய சமூக இடைவெளியைக் கடைபிடிக்க வேண்டும்' எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க:மகளிர் தினத்தில் அம்மனாக மாறிய அமைச்சர்!

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.