சென்னை: தமிழ்க்கடவுள் முருகனுக்கு முக்கிய தினமாக திகழும் தைப்பூச திருநாளான இன்று, தமிழ்நாடு முழுவதும் உள்ள முருகன் கோயில்களில் சிறப்பு பூஜைகள் செய்து, முருகனுக்கு திருக்கல்யாண உற்சவம் நடைபெற்று திருத்தேர்களில் கோயிலை சுற்றிலும் உலா வரும்.
இந்நாளில் காவடி, பால்குடம் எடுத்து பாதயாத்திரையாக வந்து முருக கடவுளை வழிப்பட்டால் நினைத்தது நடக்கும் என்ற நம்பிக்கை ஆதிகாலம் தொட்டே இருந்து வருவதால், இந்நாளில் பக்தர்கள் பலரும் விரதமிருந்து காவடி எடுத்தும், பால்குடம் எடுத்தும் பாதயாத்திரையாக நடந்து வந்து வேண்டுதலை நிறைவேற்றுவர்.
பலரும் தைப்பூச திருநாளுக்கு முந்தைய தினமே பாதயாத்திரையாக நடந்து வந்து கோயிலில் காத்திருந்து அதிகாலையில் நடக்கும் திருக்கல்யாண உற்சவத்தையும் திருத்தேர் உலாவையும் காண்பர். ஆனால் இந்த வருடம் தைப்பூசத் திருவிழா கரோனா வைரஸ் பாதிப்பு பரவல் காரணமாக பக்தர்களின்றி நடைபெற்றது.
இந்நிலையில், தைப்பூச விழா தொடர்பாக நாம் தமிழர் கட்சி வெளியிட்டுள்ள அறிக்கையில், “தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்! தமிழ் இறைவன்! எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி!" என்று நாம் தமிழர் கட்சியின் தமிழர் மெய்யியல் மீட்புக்கான பாசறையான வீரத்தமிழர் முன்னணி தெரிவித்துள்ளது.
-
தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
— சீமான் (@SeemanOfficial) January 18, 2022 " class="align-text-top noRightClick twitterSection" data="
தமிழ் இறைவன்!
எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! pic.twitter.com/J55freb3Vp
">தலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
— சீமான் (@SeemanOfficial) January 18, 2022
தமிழ் இறைவன்!
எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! pic.twitter.com/J55freb3Vpதலைநிலக் குறிஞ்சி தந்த தலைவன்!
— சீமான் (@SeemanOfficial) January 18, 2022
தமிழ் இறைவன்!
எங்கள் முப்பாட்டன் முருகன் பெரும்புகழ் போற்றி! போற்றி! pic.twitter.com/J55freb3Vp
தலைநிலம் குறிஞ்சி தந்த தலைவன், தமிழர் இறை, நமது இன மூதாதை! முருகன் பெரும்புகழைப் போற்றிக் கொண்டாடும் திருமுருகன் திருநாளையொட்டி(தைப்பூசம்) என்று ஆண்டு தோறும் கொண்டாடி வருகிறது. இந்த ஆண்டும் நாம் தமிழர் கட்சியின் சார்பாக கொண்டாடப்பட்டு வருகிறது.
தை மாதத்தில் வரும் தைப்பூசம் முருகனுக்கு உகந்த நாளாகும். இந்த நாளில் தமிழ்நாடு முழுவதும் தைப்பூச திருவிழா சிறப்பாக கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு தைப்பூசத் திருவிழாவை பொது விடுமுறை நாளாக அறிவிக்கவும், இனிவரும் ஆண்டுகளிலும் தைப்பூசத் திருவிழா நாளை பொது விடுமுறை பட்டியலில் சேர்க்கவும் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி (ஜன.5) உத்தரவிட்டு அறிவிப்பு வெளியிட்டு இருந்தார்.
மேலும் தைப்பூச விழாவிற்கு அரசு பொது விடுமுறை நாளாக அறிவிக்க வேண்டும் என்று நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தொடர்ந்து குரல் கொடுத்தது என்பது குறிப்பிடத்தக்கது" என அதில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: தைப்பூசம்: பழனி முருகன் கோயில் கிரிவலப்பாதையில் குவிந்த பக்தர்கள்!