ETV Bharat / state

சம வேலை சம ஊதியம் - மீண்டும் போராட்டத்தில் குதிக்கும் இடைநிலை ஆசிரியர்கள் - சம வேலை சம ஊதியம்

சம வேலை சம ஊதியம் அளிக்க வேண்டும் என்பதை வலியுறுத்தி வருகிற செப்டம்பர் 5-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும்.

teachers protest announced
இடைநிலை ஆசிரியர்கள்
author img

By

Published : Jul 20, 2023, 3:10 PM IST

சென்னை: திமுக அரசின் தேர்தல் வாக்குறுதி எண்- 311இல், 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்குதல் குறித்து 3 நபர் ஊதியக்குழு அறிக்கையை பெற்று ஊதிய முரண்பாட்டை நிறைவேற்ற வலியுறுத்தி 3 கட்டமாக போராட்டம் நடத்தப்படும். செப்டம்பர் 5-ம் தேதி முதல் 27-ம் தேதி வரை கோரிக்கை அட்டை அணிந்து போராட்டம் நடத்தப்படும். அதன் பின்னர் கோரிக்கை நிறைவேறும் வரையில் சாகும்வரையில் காலவரையற்ற தொடர் உண்ணவிரதப் போராட்டம் நடத்தப்படும் என இடைநிலை ஆசிரியர்கள் அறிவித்துள்ளனர்.

இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் பொதுச்செயலாளர் ராபர்ட் வெளியிட்டுள்ள அறிவிப்பில், ''01.06.2009க்கு பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு கடைநிலை ஊழியர்கள் பெறும் அடிப்படை ஊதியம் நிர்ணயிக்கப்பட்டு 13 ஆண்டுகள் காலமாக வழங்கப்பட்டு வருகிறது.

அதாவது 01.06.2009க்கு முன் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு அடிப்படை ஊதியம் ரூ.8,370 என்றும் அதன் பின்னர் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு ரூ.5,200 என்றும் “ஒரே பணி” “ஒரே கல்வித்தகுதி” “ஒரே பதவி” என அனைத்தும் ஒரே மாதிரி இருந்த போதிலும் ஒரே விதமான ஊதியம் வழங்காமல் இந்திய அரசியல் அமைப்புச் சட்டம் வழங்கியுள்ள அடிப்படை உரிமை மற்றும் உச்ச நீதிமன்றத்தில் வழங்கப்பட்டுள்ள பல்வேறு தீர்ப்புகளில் சம வேலைக்கு சம ஊதியம் வழங்க வேண்டும் என்பதை புறம்தள்ளி இரண்டு விதமான ஊதியங்கள் நிர்ணயிக்கப்பட்டது. இதை களையக்கோரி கடந்த 10 ஆண்டுகளாக எங்களது இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர்கள் இயக்கத்தின் சார்பாக பல்வேறு போராட்டங்கள் நடைபெற்றது.

அதில் குறிப்பாக 2018ஆம் ஆண்டு மே மாதம் மற்றும் டிசம்பர் மாதம் நடைபெற்ற காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் நூற்றுக்கணக்கான ஆசிரியர்கள் மயக்கமடைந்து மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர். அப்போது எதிர்க்கட்சித் தலைவராக இருந்த ஸ்டாலின் நேரில் வந்திருந்து போராட்டத்திற்கு ஆதரவு தெரிவித்து உடனடியாக இப்பிரச்சனை களையப்பட வேண்டும் என அறிக்கை கொடுத்து எங்களுக்கு தோளோடு தோளாக நின்றார்.

கடந்த அரசு இந்த கோரிக்கையை செய்யவில்லை. அதனால் தற்போது நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் திமுக தேர்தல் அறிக்கை வரிசை எண்-311ல் 20,000 இடைநிலை ஆசிரியர்களுக்கு சம வேலைக்கு சம ஊதியம் வழங்கப்படும் என கோரிக்கையை இடம்பெறச் செய்தார். புதிய அரசு பதவி ஏற்று இரண்டு ஆண்டு முடிவடைந்த நிலையில், தேர்தல் அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ள இடைநிலை ஆசிரியர்கள் ஊதிய முரண்பாட்டை விரைந்து செய்ய வேண்டும் என கடந்த 2022 டிசம்பர் மாதம் ஆறு நாட்கள் காலவரையற்ற உண்ணாவிரதப் போராட்டம் நடைபெற்றது. போராட்டத்தின் போது 300-க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயங்கி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டனர்.

அப்போது தமிழ்நாட்டின் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் 01.01.2023 இந்த புத்தாண்டில் முதல் அறிவிப்பாக அரசு ஊழியர்கள், ஆசிரியர்களுக்கு அகவிலைப்படி உயர்வும் அதனோடு சேர்த்து போராடும் இடைநிலை ஆசிரியர்களுக்கு மூன்று நபர் அடங்கிய குழு ஒன்றை அமைத்து ஊதிய முரண்பாடு குறித்து கருத்துகளைக் கேட்டு அரசுக்கு அனுப்ப ஆணையிட்டார்.

இதனையடுத்து குழு அமைத்து 7 மாதங்கள் ஆகியும், இதுவரை தொடக்க கல்வித்துறையில் உள்ள ஐந்து ஆசிரியர் சங்கங்களை மட்டுமே அழைத்து கருத்துகளைக் கேட்டுள்ளது. இன்னும் கருத்து கேட்க வேண்டிய இருபதுக்கும் மேற்பட்ட ஆசிரிய இயக்கங்கள் உள்ளன. போராட்டத்தை முடிவுக்கு கொண்டு வரும்போது கல்வித் துறை உயர் அதிகாரிகளால் மூன்று மாதத்தில் குழுவின் அறிக்கை அரசுக்கு அனுப்பப்படும் என்ற வாக்குறுதி கொடுக்கப்பட்டது. ஆனால், தற்போது பல மாதங்கள் ஆகியும் அறிக்கையை விரைந்து கொடுப்பதற்கான எந்த வித நடவடிக்கையும் தெரியவில்லை.

2009-இல் பணியில் சேர்ந்தவர்கள் வயது மூப்பின் காரணமாக நூற்றுக்கணக்கானோர் ஓய்வுபெற்று வருகிறார்கள். மேலும், பணிநியமனம் பெற்று 14 ஆண்டுகளாக கடைநிலை ஊழியர்கள் ஊதியத்துடன் பொருளாதார நெருக்கடியால் பணிபுரிந்து வருகிறோம். அதனால் இனியும் கால தாமதப்படுத்தாது மூன்று நபர்கள் குழுவின் அறிக்கையை அரசிடம் அளித்து ஊதிய முரண்பாட்டை விரைந்து கொடுக்க வலியுறுத்தும் விதமாக மாநில செயற்குழு கூட்டம் நடைபெற்றது.

அந்த கூட்டத்தில், முதல் கட்டமாக ஆகஸ்ட் முதல் வாரத்தில் சென்னையில் 2009-க்குப் பின் நியமிக்கப்பட்ட இடைநிலை ஆசிரியர்களுக்கு மாநிலத்தில் பணிபுரியும் சக ஆசிரியர்கள் ஊதியத்தை வழங்கக்கோரி போராட்ட ஆயத்த மாநாடு நடத்த தீர்மானிக்கப்பட்டுள்ளது.
இரண்டாம் கட்டமாக செப்டம்பர் 5ம் தேதி ஆசிரியர் தினம் முதல் செப்டம்பர்-27 வரை கோரிக்கை அட்டை அணிந்து பள்ளிக்கு செல்வது எனவும், அதன் பின்னரும் அரசு செவிமடுக்கவில்லை எனில் மாணவர் நலன் பாதிக்கப்படாமல் செப்டம்பர் மாதம் முதல் பருவ விடுமுறையில் ஆயிரக்கணக்கான ஆசிரியர்கள் கலந்து கொள்ளும் மாபெரும் காலவரையற்ற தொடர் உண்ணாவிரதப் போராட்டத்தினை நடத்துவது என்றும் கோரிக்கை முடியும் வரை போராட்டத்தை கைவிடுவதில்லை என தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது” என அதில் கூறியுள்ளார்.

இதையும் படிங்க: கோயில்களை தொன்மைக்கு ஏற்ப பிரித்து சீரமைக்க வேண்டும் - பொன் மாணிக்கவேல்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.