ETV Bharat / state

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ் - தொடக்கக் கல்வித் துறை

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு இடைநிலை ஆசிரியர்கள் ஆறு நாட்களாக உண்ணாவிரதப் போராட்டம் நடத்திவந்த நிலையில், ஆசிரியர்களின் கோரிக்கைகளை பரிசீலித்து நிறைவேற்றக்குழு அமைத்து முதலமைச்சர் உத்தரவிட்டதால் ஆசிரியர்கள் போராட்டத்தை வாபஸ் பெற்றனர்.

சம வேலைக்கு சம ஊதியும் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

author img

By

Published : Jan 1, 2023, 9:27 PM IST

சம வேலைக்கு சம ஊதியம் கேட்டு போராடிய இடைநிலை ஆசிரியர்களின் போராட்டம் வாபஸ்

சென்னை: தொடக்கக் கல்வித் துறையில் 2009 மே 31ஆம் தேதிக்கு முன்னர் உள்ள இடைநிலை ஆசிரியர்களுக்கு ஒரு ஊதியமும் , ஜூன் ஒன்றாம் தேதிக்கு பின்னர் சேர்ந்த ஆசிரியர்களுக்கும் ஊதியத்திலும் மாறுபாடு உள்ளது. எனவே, ஒரே கல்வி தகுதியுடன் பணி புரியும் இடைநிலை ஆசிரியர் அனைவருக்கும் சம வேலைக்கு சம ஊதியம் என்ற அடிப்படையில் ஊதியம் வழங்க வேண்டும் என்பதை வலியுறுத்தி கடந்த 27ஆம் தேதி முதல் பள்ளிக்கல்வித்துறை இயக்குநர் அலுவலகத்தில் இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்கத்தினர் தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டம் நடத்தி வந்தனர்.

இந்தப் போராட்டத்தில் ஏராளமான ஆசிரியர்கள் கலந்து கொண்டனர். போராட்டத்தின்பொழுது தங்களின் கோரிக்கை எப்போது நிறைவேற்றப்படும் என்பதை அறிவிக்க வேண்டும் என வலியுறுத்தி வந்தனர். இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சம வேலைக்கு சம ஊதியம் என்ற கோரிக்கை வலியுறுத்திப் போராட்டம் நடத்தும் ஆசிரியர்கள் பிரச்னையைத் தீர்க்க குழு அமைத்து அறிவித்தார்.

அதனைத் தொடர்ந்து இன்று மாலை செய்தியாளர்களிடம் பேசிய இடைநிலை பதிவு மூப்பு ஆசிரியர் சங்க பொதுச் செயலாளர் ராபர்ட், 'கடந்த ஆறு நாட்களாக நடைபெற்ற உண்ணாவிரதப் போராட்டத்தில் 200க்கும் மேற்பட்ட ஆசிரியர்கள் மயக்கம் அடைந்தனர். மேலும் அவர்கள் தங்களின் கோரிக்கைகளை நிறைவேற்றும் வரை தொடர்ந்து உண்ணாவிரதப் போராட்டத்திலும் பங்கேற்றனர்.

இந்நிலையில் தமிழ்நாடு முதலமைச்சர் சம வேலைக்கு சம ஊதியம் என்ற ஒற்றை கோரிக்கையுடன் போராடும் இடைநிலை ஆசிரியர்களின் கோரிக்கையை பரிசீலித்து நிறைவேற்றுவதற்காக குழு அமைத்து அறிவித்துள்ளார். எங்களின் கோரிக்கையை ஏற்று குழு அமைத்து உத்தரவிட்ட முதலமைச்சருக்கும், பள்ளிக்கல்வித்துறை அமைச்சர் மற்றும் பள்ளிக்கல்வித்துறை செயலாளர், தொடக்க கல்வித்துறை இயக்குநர் ஆகியோருக்கும் நன்றி தெரிவித்துக் கொள்கிறோம்.

எங்களின் கோரிக்கை விரைவில் நிறைவேறும் என்ற நம்பிக்கையுடன் போராட்டத்தை வாபஸ் பெறுகிறோம். எங்களின் கோரிக்கை குறித்து தொடர்ந்து அரசுடன் பேசி நிறைவேற்றுவோம். கோரிக்கை நிறைவேறியவுடன் நன்றி தெரிவிக்க உள்ளோம். மேலும் நாளை முதல் நடைபெற உள்ள எண்ணும் எழுத்தும் பயிற்சியில் அனைவரும் கலந்து கொள்ள உள்ளோம்” எனத் தெரிவித்தார்.

போராட்டத்தில் ஈடுபட்ட ஆசிரியைகள் நந்தினி மற்றும் சுமதி கூறும்போது, ”எங்களின் போராட்டத்தை புரிந்து கொண்டு கோரிக்கையை நிறைவேற்றுவதாக கூறிய முதலமைச்சருக்கு நன்றி. நாளை முதல் தொடர்ந்து நாங்கள் எங்கள் பணிகளை மேற்கொள்வோம்” எனத் தெரிவித்தனர்.

இதையும் படிங்க: பொங்கல் பரிசு - திமுகவின் நிலைப்பாட்டுக்கு பிரேமலதா விஜயகாந்த் கண்டனம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.