சென்னை: போக்குவரத்து சேவைக்காக 2015 ஆம் ஆண்டு மெட்ரோ ரயில் திட்டம் தொடங்கப்பட்டது. முதல் கட்டமாக சென்னை முழுவதும் மெட்ரோ ரயில் சேவை திட்டம் சிறப்பாக செயல்பட்டு வருகிறது. மேலும் இதை அடுத்த கட்டத்திற்கு கொண்டு செல்வதற்காக இரண்டாம் கட்ட பணிகளை மெட்ரோ நிர்வாகம் தொடங்கியுள்ளது.
அதில் மெட்ரோ ரயில் நிலையங்களில் புதிய சுரங்கப்பாதைகள் 25மீ முதல் 30மீ நிலத்தடியில் இருக்கும். இந்த இடங்களில் ரயில் இயக்கங்கள் பாதிக்கப்படாமல் இருக்க நிகழ்நேர கண்காணிப்பு உள்ளிட்ட நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.
சில ஆண்டுகளில், ரயில்களில் பயணிக்கும் பயணிகள் மெட்ரோ ரயில் கட்டம் ஒன்றில் இருந்து இரண்டாம் கட்டத்திற்கு செல்ல 6 மீ முதல் 10மீ கீழே செல்ல வேண்டியது இருக்கும். இதன் ஒரு பகுதியாக கீழ்ப்பாக்கம், நந்தனம் மற்றும் ஆயிரம் விளக்குகள் போன்ற சில பகுதிகளில், இரண்டாம் கட்ட சுரங்கப்பாதைகள் முதல் கட்டத்தின் கீழ் கட்டப்படும் என்று சென்னை மெட்ரோ ரயில் லிமிடெட் (சிஎம்ஆர்எல்) அதிகாரிகள் தெரிவித்தனர்.
“இரண்டாம் கட்ட சுரங்கப்பாதையில் சுரங்கப்பாதை அமைக்கும் போது கட்டம் ஒன்று ரயில்கள் செயல்படும் என்பதால் இது மிகவும் சவாலானதாக இருக்கும். கட்டம் ஒன்றில் ரயில் செயல்பாடுகள் பாதிக்கப்படாமல் இருக்க பல்வேறு நடவடிக்கைகளை எடுக்க வேண்டும்” என்று அதிகாரி ஒருவர் தெரிவித்தார்.
முதல் கட்ட திட்டத்தில் கீழ்ப்பாக்கம், ஆயிரம் விளக்கு மற்றும் நந்தனம் நிலையங்களில், சுரங்கப்பாதை் நிலத்தடியில் கிட்டத்தட்ட 18 மீ முதல் 20 மீ ஆழத்தில் கட்டப்பட்டுள்ளன. இரண்டாம் கட்ட திட்டத்தில், இந்த மூன்று நிலையங்களிலும் 25 மீ முதல் 30 மீ வரை ஆழமான சுரங்கமாக இருக்கும் என்று கூறப்படுகிறது.
இதையும் படிங்க: காசி தமிழ் சங்கமம் நிகழ்ச்சி: ராமேஸ்வரம்-வாரணாசி ரயிலில் கூடுதல் பெட்டிகள் இணைப்பு