ETV Bharat / state

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளரின் வைரல் வீடியோ! - சென்னை

பாலியல் புகாரில் சிக்கிய தனியார் பள்ளி தாளாளர் வினோத் தன் மீது தவறு ஏதுமில்லை என கண்ணீர் மல்க இரு தினங்களுக்கு பேசிய வீடியோ இணையத்தில் வைரலாகி வருகிறது.

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்
பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்
author img

By

Published : Nov 24, 2022, 4:45 PM IST

சென்னை: திருநின்றவூர் அருகே உள்ள தனியார் பள்ளியில் மாணவி ஒருவருக்கு பாலியல் தொல்லை கொடுத்ததாக கூறப்பட்ட நிலையில் நேற்று மாணவ - மாணவிகள் தங்களது பெற்றோருடன் வகுப்புகளை புறக்கணித்து போராட்டம் நடத்தினர். பின்னர், தளாளர் மீது போக்சோ வழக்குப்பதிவு செய்த நிலையில் போராட்டத்தை கைவிட்டு மாணவ மாணவிகள் பெற்றோர்கள் என அனைவரும் கலைந்து வீடு திரும்பினர்.

இந்நிலையில், பாலியல் குற்றச்சாட்டுக்கு ஆளான தாளாளர் வினோத் பேசுவது போன்ற வீடியோ ஒன்று தற்போது இணையத்தில் அதிகம் பகிரப்பட்டு வருகிறது. அந்த வீடியோவில் தான் எந்த தவறும் செய்யவில்லை எனவும், இது மாணவ மாணவிகளுக்கு தெரியும் எனவும் கூறியுள்ளார்.

மேலும் ஒரு சில ஆசிரியர்கள், மாணவர்கள், மாணவியர்கள் பெயரை குறிப்பிட்டு புகழ்ந்து பேசியுள்ளார். தந்தை - தாய் என்னை மன்னித்து விட வேண்டும் என கண்ணீர் மல்க பேசி உள்ளார். தன் மீது தவறான குற்றச்சாட்டு வைத்து தன்னை சிதைத்து விட்டதாக கூறி பூச்சி மருந்தை வாயில் அடித்துக் கொண்டு வீடியோவை பதிவிட்டுள்ளார்.

பாலியல் புகாரில் சிக்கிய பள்ளி தாளாளர்

தற்போது இந்த காட்சிகள் சுற்றுவட்டார பகுதிகளில் பரவி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. வினோத் மீது போக்சோ சட்டம் வழக்குpபதிவு, கைது நடவடிக்கை எடுக்கப்பட்ட நிலையில் தற்போது அவர் பேசிய வீடியோ வைரல் ஆகி வருவது சந்தேகத்தை ஏற்படுத்தி உள்ளதாக பலரும் கூறி வருகின்றனர்.

இதையும் படிங்க: காங்கிரஸ் எம்.எல்.ஏ ரூபி மனோகரன் சஸ்பெண்ட்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.