தமிழ்நாடு முழுவதும் பொதுத்தேர்வு எழுதவுள்ள மாணவர்களுக்கு 45 லட்சம் முகக்கவசங்கள் வழங்குவதற்கு ஏற்பாடுகள் செய்யப்பட்டன. இதில் முதல் இரண்டு நாள் ஹால் டிக்கெட்டுகள் பெற வந்த மாணவர்களுக்கு முகக்கவசங்கள் வழங்கப்பட்டன. எனினும் பெரும்பாலான முகக்கவசங்கள் அப்படியே பள்ளிகளில் உள்ளன.
இந்த நிலையில் தேர்வு ரத்து செய்யப்பட்டதால், பள்ளிகளில் தேங்கியுள்ள முகக்கவசங்கள், மாணவர்களின் உடல் வெப்பநிலையை அளவிடுவதற்கு வழங்கப்பட்ட தெர்மல் ஸ்கேனர் கருவிகளை ஜூன் 12ஆம் தேதி மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என மாவட்ட அலுவலர்களுக்கு கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.
முகக்கவசங்களை திரும்ப ஒப்படைக்க பள்ளிக்கல்வித் துறை உத்தரவு! - Chennai news
சென்னை: மாணவர்களுக்கு வழங்கப்படாமல் உள்ள முகக்கவசங்கள், உடல் வெப்பநிலையை அளக்கும் கருவிகளை ஜூன் 12ஆம் தேதி மாலைக்குள் திரும்ப ஒப்படைக்க வேண்டும் என பள்ளிக்கல்வித் துறை உத்தரவிட்டுள்ளது.