தென் கிழக்கு வங்கக்கடலில் உருவாகியுள்ள குறைந்த காற்றழுத்த தாழ்வு மண்டலம் காரணமாக சென்னை உள்ளிட்ட மாவட்டங்களில் கனமழை பெய்து வருகிறது.
சென்னையில் கடந்த 4 நாள்களாக மழை பெய்து வருவதால் பல்வேறு பகுதிகள் தீவு போல காட்சியளிக்கிறது. இதனால் மக்கள் அத்தியாவசிய தேவையான பால், மருந்து உள்ளிட்ட பொருள்கள் வாங்குவதற்குக் கூட வெளியே செல்ல முடியாத நிலை ஏற்பட்டுள்ளது.
இந்நிலையில் கொட்டும் மழையையும் பொருட்படுத்தாமல் நங்கநல்லூா் தெரு எண் 40ல் தூய்மை பணியாளர் ஒருவர் வீடு வீடாக சென்று குப்பைகளை பெற்றுள்ளார்.
அடை மழையையும் பொருட்படுத்தாமல் முழங்கால் அளவு நீரில் வீடு தேடி சென்று குப்பை பெற்றுக்கொண்ட தூய்மை பணியாளரை அப்பகுதி மக்கள் வெகுவாக பாராட்டினர்.
இதையும் படிங்க: சென்னையில் மாலை 6 மணிவரை விமான சேவைகள் நிறுத்தம்