இது தொடர்பாக ரயில்வே காவல் துறையினர் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், 'தமிழ்நாட்டில் ரயில் நிலையங்கள் மற்றும் ரயில்களில் பயணிக்கும் போது பயணிகள் மற்றும் பொதுமக்களுக்குப் பாதிப்புகள் ஏற்படாதபடி ரயில்வே காவல் துறையினர் பல்வேறு நடவடிக்கைகள் எடுத்து வருகின்றன.
இதன்படி கடந்த 2015ஆம் ஆண்டு முதல் 2019ஆம் ஆண்டு வரை, ரயில்வே காவல் துறையினர் குற்றங்களில் ஈடுபட்டதாக 113 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு 109 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இதில் 15 வழக்குகளில் குற்றவாளிகளுக்குத் தண்டனை கிடைத்துள்ளது. 55 வழக்குகளில் விசாரணை முடிந்து குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. 19 வழக்குகளில் விசாரணை நடைபெற்றுவருகிறது.
மேலும், தமிழ்நாடு ரயில்வே காவல்துறையினர் டி.ஜி.பி. சைலேந்திரபாபு உத்தரவின்படி, அனைத்து ரயில்களிலும் உள்ள பெண்கள் பெட்டிகளில், ரயில்வே பெண் காவலர்கள் சாதாரண உடையில் பயணியைப் போல், பயணம் செய்ய ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது. பயணிகள் 1512 என்ற தொலைபேசி எண்ணில் 24 மணி நேரமும் புகார் அளிக்கலாம் என்றும், தகவல்களை 9962500500 என்ற வாட்ஸ் அப் எண்ணுக்கு அனுப்பி வைக்கலாம்' என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: ஏசி வெடித்ததில் ரயில்வே பாதுகாப்புப் படை வீரர் உயிரிழப்பு!