ETV Bharat / state

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 6.5 கோடி சுருட்டிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி

author img

By

Published : Nov 26, 2022, 9:09 AM IST

தமிழ்நாடு அரசு தேர்வாணையத்தின் அறையில் அமர்ந்து, ஆசிரியர் வேலை வாங்கி தருவதாகக் கூறி 6.5 கோடி ஏமாற்றிய போலி ஐ.ஏ.எஸ் அதிகாரி மீது காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.

ஆசிரியர் வேலை வாங்கி தருவதாக கூறி 6.5 கோடி ஏமாற்றிய போலி ஐஏஎஸ் அதிகாரி

சென்னை: முகப்பேர் பகுதியைச் சேர்ந்தவர் வெங்கடேசன். இவர் தனியார் கார் விற்பனை செய்யும் நிறுவனத்தில் பணியாற்றி ஓய்வு பெற்றவர். பணி ஓய்வின்போது கிடைத்த ஓய்வூதிய தொகை சுமார் 48 லட்சம் ரூபாய் பணத்தில் பொள்ளாச்சி அருகே தனக்குச் சொந்தமாக நிலம் வாங்கி வைத்திருந்திருக்கிறார்.

இந்த நிலையில் தனியார் பள்ளியில் முதுகலை பட்டதாரி ஆசிரியராக பணியாற்றி வரும் தனது மனைவி லட்சுமி என்பவருக்கு அரசுப் பள்ளி ஆசிரியர் வேலை வழங்கக் கோரி தமிழ்நாடு முதலமைச்சர் தனிப்பிரிவில் கடந்தாண்டு ஜூன் மாதம் மனு ஒன்றை அளித்துள்ளார்.

குறிப்பாக லட்சுமி குடும்பத்தில் முதல் பெண் பட்டதாரி என்கிற அடிப்படையிலும் ஆசிரியர் தகுதித் தேர்வு தேர்ச்சி பெற்று வைத்திருப்பதாலும் அரசுப் பணி வழங்க வேண்டும் என இணைய வழியாக முதலமைச்சர் தனிப்பிரிவிற்கு வெங்கடேசன் மனு அளித்துள்ளார்.

இந்த நிலையில் இணைய வழி மனு அளித்திருந்த ஒரு வாரத்தில் போன் செய்த நபர் ஒருவர் தான் முதலமைச்சர் தனிப்பிரிவிலிருந்து செயலாளர் ஆனந்த பத்மநாபன் பேசுகிறேன் எனக் கூறியுள்ளார். மேலும் அவர் ஒரு ஐஏஎஸ் அதிகாரி எனவும் வேலை நிமித்தமாக தங்களைச் சந்திக்க வேண்டும் எனக் கூறியுள்ள ஆனந்த பத்மநாபன், வெங்கடேசனைத் தலைமைச் செயலகம் எதிரே உள்ள தலைமைச் செயலக வாகன நிறுத்தும் இடத்திற்கு வரச் சொல்லி இருக்கிறார்.

ஆனந்த பத்மநாபன் கூறிய நாளில் வெங்கடேசன் மற்றும் அவரது மனைவி சொன்ன இடத்திற்கு நேரில் சென்று காத்திருந்தனர். அரசு எம்பளம் பொருந்திய வெள்ளை நிற இன்னோவா காரில் வந்து இறங்கிய நபர் ஒருவர் இங்கு நின்று பேச முடியாது எனது செல்போன் எண்ணை எடுத்துக் கொள்ளுங்கள், எதுவாக இருந்தாலும் என்னை நேரடியாகத் தொடர்பு கொள்ளுங்கள் வேலை உங்களுக்கு உறுதியாகிவிட்டது எனக் கூறியுள்ளார்.

மேலும் வேலை கிடைக்க வேண்டும் என்றால் 30 லட்சம் ரூபாய் வரை செலவாகும் எனவும் தெரிவித்துள்ளார். மேலும் அரசுப் பணிநியமன ஆணை கையில் கிடைத்தவுடன் எனக்குப் பணம் கொடுத்தால் போதும் அதுவரை எனக்கு ஒரு ரூபாய் கூட வேண்டாம் என நம்பிக்கை அளிக்கும் வகையில் அதிகார தோரணையில் அந்த நபர் கூறியுள்ளார்.

மேலும் அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகம் (டி.என்.பி.எஸ்.சி) அமைந்துள்ள நான்காவது தளத்தில் தனது அலுவலகம் இருப்பதாகவும் அங்கு வந்து தன்னை பார்க்க வேண்டும் எனவும் தெரிவித்துச் சென்றுள்ளார். முதலமைச்சர் தனிப்பிரிவில் மனு கொடுத்த ஒரே வாரத்தில் வெங்கடேசன் வீட்டிற்கு அரசுப் பணிநியமன ஆணை பதிவு தபாலில் வந்துள்ளது.

இதனைக் கண்டு மகிழ்ச்சி அடைந்த வெங்கடேசன் பணி ஆணையில் குறிப்பிடப்பட்டிருந்த அரும்பாக்கம் பகுதியில் உள்ள அரசுப் பள்ளியில் தனது மனைவி லட்சுமிக்குப் பணி ஒதுக்கீடு செய்திருப்பது தொடர்பாகப் பள்ளி தலைமை ஆசிரியரிடம் சென்று விசாரித்துள்ளார்.

பள்ளி தலைமை ஆசிரியரும் பணி நியமன ஆணையை வாங்கி பார்த்து விட்டு அரசிடமிருந்து தங்களுக்கு இது போன்ற உத்தரவு எதுவும் வரவில்லை எனவும் அவ்வாறு உத்தரவு எழுத்துப்பூர்வமாகக் கிடைக்கும் பட்சத்தில் லட்சுமியைத் தொடர்பு கொள்வதாகத் தலைமை ஆசிரியர் தெரிவித்துள்ளார்.

இதனால் அரசுப் பணிநியமன ஆணை உண்மை என நம்பிய வெங்கடேசன் நேராகத் தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணைய அலுவலகத்திற்குச் சென்று அங்கு நான்காவது மாடியில் இருந்த அனந்த பத்மநாபனைச் சந்தித்து பொள்ளாச்சியில் தான் வாங்கிய நிலத்தை விற்று 20 லட்சம் ரூபாய் பணம் எடுத்து வந்திருப்பதாகக் கூறி அலுவலகத்திலேயே ரொக்கமாக 20 லட்சம் ரூபாயையும் அனந்தபத்மநாபனிடம் கொடுத்துள்ளார்.

மேலும் அந்த நபர் பதிவு தபாலில் வந்த அசல் ஆணையை வாங்கிக் கொண்டு நகல் ஒன்றைக் கொடுத்துள்ளார். அசல் பணி நியமன ஆணை கொடுக்க வேண்டும் என்றால் இன்னும் சிலருக்குப் பணம் கொடுக்க வேண்டி இருக்கிறது. எனவே மேலும் 10 லட்சம் ரூபாய் செலவாகும் எனத் தெரிவித்துள்ளார். அதனையும் நம்பிய வெங்கடேசன் மேலும் ஐந்து லட்சம் ரூபாய் பணம் கொடுத்துள்ளார். அதேபோல ஆனந்த பத்மநாபன் என்கிற நபர் நடத்திய இந்த நாடகத்தை முழுவதுமாக நம்பிய வெங்கடேசன் தனது உறவினர்களுக்கும் இவரைச் சிபாரிசு செய்துள்ளார்.

இதற்கிடையில் ஆனந்த பத்மநாபன் வெங்கடேசன், உறவினர்கள், நண்பர்கள் என சுமார் 20-க்கும் மேற்பட்ட நபர்களைத் தொடர்பு கொண்டு பல்வேறு அரசுத் துறையில் பணி நியமன ஆணை வாங்கி தருவதாகக் கூறி சுமார் 6 கோடி ரூபாய் வரை பணத்தை வசூல் செய்து செய்துள்ளார்.

இந்த நிலையில் லட்சுமிக்கு ஆசிரியர் பணி நீண்ட நாட்களாகியும் ஒதுக்கப்படாததால் வெங்கடேசன் இது தொடர்பாக ஆனந்த பத்மநாபனிடம் கேட்டுள்ளார். அப்போது ஆசிரியர் பணி வேண்டாம் அதை விட உயர்ந்த பணி, அரசுப் பணி தேர்வாணையத்தில் முக்கிய பொறுப்பு வாங்கி தருவதாகவும் அதற்கு ஏற்கனவே கொடுத்த 30 லட்ச ரூபாய் போதும் எனவும் தெரிவித்துள்ளார்.

இதை நம்பிய வெங்கடேசன் மீண்டும் காத்திருக்கத் தொடங்கியுள்ளார். இந்த முறை முகப்பேரில் உள்ள வெங்கடேஸ்வரன் வீட்டிற்கு உளவுத்துறை போலீசார் எனக் கூறி இரண்டு நபர்கள் வந்து தனது மனைவி லட்சுமியின் அனைத்து விவரங்களையும் சேகரித்ததாகவும், எதற்கு எனக் கேட்டபோது அரசுப் பணி தேர்வாணையத்தில் முக்கிய பொறுப்பு லட்சுமிக்கு கிடைக்க இருப்பதால் அவர் தொடர்பான தகவல்களைச் சேகரிப்பதாகத் தெரிவித்துச் சென்றனர்.

சில நாட்கள் கழித்து சிபிசிஐடி போலீசார் எனக் கூறி இரண்டு நபர்கள் சாதாரண உடையில் வந்து லட்சுமி குறித்து இதே போன்று விசாரணை செய்து விட்டுச் சென்றுள்ளனர். இதனால் மீண்டும் நம்பிக்கை அடைந்த வெங்கடேசன் விரைவில் தனது மனைவிக்கு அரசின் உயர்பதவி கிடைக்கப் போகிறது என்ற மகிழ்ச்சியில் இருந்தார்.

ஆனால் பல மாதங்கள் கடந்தும் தனது மனைவி லட்சுமி உட்படப் பணம் பெற்ற யாருக்கும் பணி நியமன ஆணை முறையாகக் கிடைக்காததால் சந்தேகம் அடைந்த வெங்கடேசன் ஆனந்த் பத்மநாபனின் தொடர்பு கொள்ள முயற்சித்த போது அவரது போன் சுவிட்ச் ஆப் செய்யப்பட்டுள்ளது.

எனவே தனது மனைவிக்கு காவல்துறை உயர் அதிகாரி ஒருவர் சிபாரிசு செய்துள்ளதாக அனந்த பத்மநாபன் அளித்த உத்தரவில் குறிப்பிடப்பட்டுள்ள செல்போன் எண்ணை தொடர்பு கொண்ட பொழுது ஓய்வு பெற்ற காவல் துறை அதிகாரி பேசியுள்ளார். தான் அவ்வாறு யாருக்கும் சிபாரிசு செய்யவில்லை எனவும், இது முற்றிலும் போலியான குற்றச்சாட்டு எனவும் தெரிவித்தார்.

இதனால் பதட்டம் அடைந்த வெங்கடேசன் ஜேஜே நகர் காவல் நிலையத்தில் நடந்த அனைத்தையும் கூறி புகார் ஒன்றை அளித்துள்ளார். ஆனால் அங்கு உரிய முறையில் விசாரணை நடத்தப்படவில்லை எனக் கூறப்படுகிறது. இதனால் ஏமாற்றமடைந்த வெங்கடேசன் மோசடிக்கு ஆளானதை எண்ணி வருத்தம் அடைந்துள்ளார்.

மேலும் தன்னை நம்பி ஆனந்த் பத்மநாபனிடம் தனது உறவினர்களும், நண்பர்களும் கொடுத்த பணமும் திரும்பி வராத நிலையில் வெங்கடேசனைப் பணம் கொடுத்தவர்கள் மிரட்டுவதாகத் தெரிவித்துள்ளார்.

அரசு எம்பளம் பொருந்திய சொகுசு கார், அரசு அலுவலகத்துக்குள்ளேயே 20 லட்சம் ரூபாய் லஞ்சம் வாங்கியது, விசாரணை செய்வதாகப் போலி போலீசாரை அனுப்பியது, ஓய்வு பெற்ற போலீஸ் அதிகாரியிடம் செல்போன் எண்ணை பயன்படுத்தியது போன்ற பல்வேறு நாடகமாடிய நபர் யார் என்பது குறித்து உரிய விசாரணை நடத்தி தனது பணத்தை மீட்டுக் கொடுக்குமாறு வெங்கடேசன் சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் புகார் அளித்துள்ளார். புகாரின் பேரில் போலீசார் விசாரணையைத் தொடங்கியுள்ளனர்.

இதையும் படிங்க: காப்பாற்றுங்கள் என வீடியோ வெளியிட்ட பெண் - காவல்துறை நடவடிக்கை என்ன?

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.