ETV Bharat / state

பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை - காவல்துறையினர் விசாரணை - காவல்துறையினர் விசாரணை

சென்னை: பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் வந்து தகராறில் ஈடுபட்ட அடையாளம் தெரியாத நபர்களை காவல்துறையினர் தேடி வருகின்றனர்.

பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை
author img

By

Published : Jul 15, 2019, 1:46 PM IST

சென்னை பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கம் பகுதியில் இயங்கி வரும் பெட்ரோல் பங்க் ஒன்றில், நேற்றிரவு முன்று பேர் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்துள்ளார். அப்போது அங்கு பணியில் இருந்த ஊழியர் இளவரசன் என்பவர் ஆட்டோவிற்கு பெட்ரோல் நிரப்பாமல் செல்போனை பார்த்ததாக கூறப்படுகிறது. இதைப் பார்த்து ஆத்திரமடைந்த மூவரும் இளவரசனை தாக்கியுள்ளனர்.

பெட்ரோல் பங்க்கில் கத்தியுடன் ரகளை

இந்நிலையில் சத்தம் கேட்டு அருகில் நின்றிருந்த ஊழியர்கள், ஓடி வந்து மூன்று பேரையும் பிடிக்க முயற்சி செய்தனர். அதில் ஒருவர் மட்டும் தப்பிச் சென்றார். சிறிது நேரத்தில் ஊழியர்களிடம் இருந்து தப்பிச் சென்ற இளைஞர் தனது நண்பர்களுடன் வந்து பெட்ரோல் பங்க் அலுவலகத்தை அடித்து நொறுக்கி விட்டு, சிறைப்பிடித்து வைத்திருந்த தனது நண்பர்களுடன் தப்பிச் சென்றார்.

இதையடுத்து ஊழியர்கள் கொடுத்த புகாரின் பேரில் வழக்குப் பதிவு செய்த காவல்துறையினர், பெட்ரோல் பங்க்கில் இருந்த சிசிடிவி கேமராவில் பதிவான காட்சிகளை வைத்து தகராறில் ஈடுபட்டவர்களை தேடி வருகின்றனர்.

Intro:Body:சென்னையில் பெட்ரோல் பங்கில் கத்தியுடன் வந்த நபர்கள் அட்டகாசம்..

சென்னை பெருங்களத்தூர் அடுத்த ஆலப்பாக்கத்தில் உள்ள பெட்ரோல் பங்கில் நேற்றிரவு 10 மணியளவில் நெற்குன்றம் பகுதியை சேர்ந்த மணி என்பவர் 2 நண்பர்களுடன் ஆட்டோவில் பெட்ரோல் நிரப்ப வந்த போது அங்கு பணியில் இருந்த இளவரசன் என்பவர் பெட்ரோல் போடாமல் செல்போனை பார்த்துக் கொண்டிருந்ததால் ஆத்திரமடைந்த மணி இளவரசனிடம் தகராறில் ஈடுபட்டார். பின்னர் மணி இளவரசனை தாக்கிவிட்டதாக தெரிகிறது. இதனை பார்த்த சக ஊழியர்கள் மணியின் 2 நண்பர்களையும் ஆட்டோவையும் பிடித்து வைத்துக் கொண்டனர். மணி தப்பியோடிவிட்டான்.

தப்பிச்சென்ற மணி சிறிது நேரத்தில் 6 க்கும் மேற்பட்ட நபர்களுடன் 3 இருசக்கர வாகனங்களில் வந்து மீண்டும் பங்கில் பட்டாக் கத்தியுடன் அலுவலக கண்ணாடிகளை உடைத்து அராஜகத்தில் ஈடுபட்டனர். பட்டாக் கத்தியை பார்த்தவுடன் அனைவரும் சிதறி ஓடினர்.

பெட்ரோல் பங்கின் உரிமையாளர் ராஜீவ் காந்தியை கத்தியால் தாக்கியதில் கையில் காயம் ஏற்பட்டது. பின்னர் அவரை தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வருகிறார்.

பின்னர் அங்கு சிறை பிடித்து வைத்திருந்த 2 பேரையும் ஆட்டோவையும் எடுத்துக் கொண்டு தப்பிச்சென்றனர்.

பீர்க்கன்கரணை போலீசார் விசாரணையில் சம்பவத்தில் ஈடுபட்ட மணி, பிரவீன், விவேக், உதயா உள்ளிட்ட 9 க்கும் மேற்பட்டோரை தேடி வருகின்றனர்.
Conclusion:
ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.