சென்னை: தடைசெய்யப்பட்ட நெகிழிப் பொருள்களை உற்பத்திசெய்யும் ஆலைகள் குறித்து தகவல் அளித்தால் வெகுமதி வழங்கப்படும் எனத் தமிழ்நாடு மாசு கட்டுப்பாட்டு வாரியம் அறிவிப்பொன்றை வெளியிட்டுள்ளது.
அதில், “சட்டவிரோதமாக இயங்கும் ஆலைகள் குறித்து https://tnpcb.gov.in/contact.php என்ற இணைய முகவரியின் மூலம் புகாரளிக்கலாம். தகவல் தெரிவிப்பவர்களின் பங்களிப்புக்காக பாராட்டும், வெகுமதியும் வழங்கப்படும். ஆகையால் நெகிழிப் பொருள்கள் உற்பத்தி குறித்து தொலைபேசி, வாட்ஸ்அப், கடிதங்கள் மூலமாகவும் புகாரளிக்கலாம்.
இந்தப் புகாரை சமூக ஆர்வலர்கள், பொதுமக்கள் ஆகியோர் பயமின்றி அளிக்கலாம். ஏனெனில் புகார் அளிப்பவர்களின் ரகசியத்தன்மை வெளியிடப்படாது” எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது.
இதையும் படிங்க: சமத்துவ மயானம் உள்ள கிராமங்களுக்கு 10 லட்சம் பரிசுத் தொகை: அரசாணை வெளியீடு