இன்று நிதியமைச்சர் ஓ. பன்னீர்செல்வம் சட்டப்பேரவையில் 2020-21ஆம் நிதியாண்டுக்கான நிதிநிலை அறிக்கையை தாக்கல் செய்தார். அதில், வருவாய் பற்றாக்குறை, நிதிப் பற்றாக்குறை குறித்து அவர் பேசினார். அந்த விவரம் பின்வருமாறு:
2019-20ஆம் ஆண்டிற்கான வரவு செலவு திட்ட மதிப்பீடுகளில், மதிப்பிடப்பட்ட தொகையான 14,314.76 கோடி ரூபாயை விட வருவாய் பற்றாக்குறை அதிகரித்து, 2019-20ஆம் ஆண்டு திருத்த மதிப்பீட்டில் வருவாய் பற்றாக்குறை 25,071.63 கோடி ரூபாயாக இருக்கும்.
மொத்த வருவாய் வரவினங்கள் 5,860.29 கோடி ரூபாயாக குறைந்து, மொத்த வருவாய் செலவினங்கள் 4,896.58 கோடி ரூபாயாக உயர்ந்ததே இதற்குக் காரணமாகும். வருவாய் மற்றும் செலவினங்களுக்கிடையே சமநிலையை பேணுவதன் மூலம் இந்த நிலையை அடைய முடியும் எனக் கணிக்கப்படுகிறது.
இதற்காக வருவாய் ஆதாரங்கள் மேம்படுத்தப்படும். 2020-21ஆம் ஆண்டிற்கான வரவு, செலவு திட்ட மதிப்பீடு 94,099.94 கோடி ரூபாயாகும். தற்போது நடைமுறையில் உள்ள திட்டங்களாலும், நடைமுறைப்படுத்தபடவுள்ள திட்டங்களாலும் 2021-22ஆம் அண்டுக்கான செலவினம் 1,01,627.93 கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது.
நடைமுறையில் உள்ள திட்டச் செலவினங்களில் மின்சாரம், போக்குவரத்து போன்ற பொதுத்துறை நிறுவனங்களின் பொறுப்புகளும் அடங்கும். அதிலும் குறிப்பாக மின்சார மானியமான 4,563 கோடி ரூபாய், இந்நிறுவனத்தின் கடன்களுக்கான வட்டி செலுத்தும் வகையில் ஆண்டு ஒன்றுக்கு 1,779 கோடி ரூபாய், 2021ஆம் ஆண்டிற்கு மட்டுமேயான 4,265.56 கோடி ரூபாய் கூடுதல் செலவினம் உள்பட 2021-22ஆம் ஆண்டு வரையிலான ஐந்தாண்டுகளுக்காக நட்டங்களை அரசு ஏற்றுக்கொண்ட வகையிலும் அரசின் நிதிச்சுமை அமைந்துள்ளது.
இதுபோன்ற எதிர்பாராத நிதிச்செலவினங்களும் இடைப்பட்ட கால நிதிநிலவர திட்டத்திற்கான மதிப்பீடுகளைத் தயாரித்து கணித்த பின் கணக்கில் எடுத்துக்கொள்ளப்பட்டன. இதனால் மானியங்கள் மற்றும் நிதி உதவிகள் உள்ளிட்ட செலவினங்களின் மதிப்பீடு 2022-23இல் 1,08,741.89 கோடி ரூபாயாக இருக்கும் என மதிப்பிடப்பட்டுள்ளது.
இவ்வாறு அவர் கூறினார்.
இதையும் படிங்க: தமிழ்நாடு பட்ஜெட் 2020: பல்வேறு துறைகளுக்கான முக்கிய அறிவிப்புகள்!