ETV Bharat / state

ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் இறக்கவில்லை- மா. சுப்பிரமணியன்

ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் இறந்துள்ளதாக கிடைத்த தகவல் உண்மையில்லை, சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர் என மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தெரிவித்துள்ளார்.

25ஆவது மெகா தடுப்பூசி முகாம்
25ஆவது மெகா தடுப்பூசி முகாம்
author img

By

Published : Mar 19, 2022, 11:56 AM IST

சென்னை: தியாகராயநகரில் 25ஆவது மெகா தடுப்பூசி முகாமினை தமிழ்நாடு மக்கள் நல்வாழ்வுத்துறை அமைச்சர் மா. சுப்பிரமணியன் தொடங்கிவைத்தார். பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த அமைச்சர் மா. சுப்பிரமணியன், “25ஆவது வாரமாக மெகா தடுப்பூசி முகாம் நடத்தப்பட்டுவருகிறது. 12 முதல் 14 வயதுள்ள 21 லட்சம் நபர்கள் உள்ளனர். அவர்களில் 3 லட்சம் பேர் தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர்.

15 முதல் 18 வயதுள்ளவர்களில் 33 லட்சம் நபர்களில் 28 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். 18 வயதிற்கும் மேற்பட்ட 5 கோடியே 78 லட்சம் நபர்களில் 5 கோடி 32 லட்சம் நபர்கள் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொண்டுள்ளனர். இரண்டாம் தவணை தடுப்பூசி 5 கோடி 61 லட்சம் நபர்கள் செலுத்தியுள்ளனர்.

25ஆவது மெகா தடுப்பூசி முகாம்
25ஆவது மெகா தடுப்பூசி முகாம்

இரண்டு தவணை தடுப்பூசியை 1 கோடியே 34 லட்சம் நபர்கள் செலுத்திக் கொள்ளவில்லை. தமிழ்நாட்டில் 51 லட்ச பேர் முதல் தவணை தடுப்பூசி செலுத்திக் கொள்ளவில்லை. 76 லட்சம் தடுப்பூசி கையிருப்பில் உள்ளது. 3ஆயிரத்து 100 ஊராட்சிகள் 100 விழுக்காடு செலுத்திக் கொண்டுள்ளனர். அவர்களுக்கு முதலமைச்சர் பாராட்டு சான்றிதழ் வழங்கப்படும்.

இன்னும் 9 ஆயிரம் ஊராட்சி தலைவர்கள் முதலமைச்சரின் பாராட்டு சான்றிதழ் பெறும் வகையில் 100 விழுக்காடு தடுப்பூசியை செலுத்த நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். 121 நகராட்சிகளில் 25 நகராட்சிகள் 100 விழுக்காடு இலக்கை எட்டியுள்ளனர். சென்னை மாநகராட்சியில் 98 விழுக்காடு தடுப்பூசி செலுத்தியுள்ளனர்.

இரண்டு தவணை தடுப்பூசி 81 விழுக்காடு பேர் செலுத்தியுள்ளனர். சென்னை மாநகராட்சி தமிழ்நாட்டிற்கே முன்மாதிரியாக செயல்படுகிறது. அருகிலுள்ள கேரளாவில் 891 நபர்கள் பாதிக்கப்பட்டு 59 நபர்கள் நேற்று ஒரே நாளில் இறந்துள்ளனர். அது அச்சமளிக்கும் வகையில் உள்ளது. கேரளாவை ஒட்டியுள்ள மாவட்டங்களில் கண்காணிப்பை தீவிரப்படுத்த திட்டமிட்டுள்ளோம்.

இந்தியாவை சுற்றியுள்ள அண்டை நாடுகளிலும் கரோனா வேகமாக பரவி வருகிறது. கண்காணிப்பை தீவிரப்படுத்துமாறு மத்திய சுகாதாரத் துறை உத்தரவிட்டுள்ளது. எனவே அனைவரும் தடுப்பூசி செலுத்திக் கொள்வதே ஒரே தீர்வாக இருக்கும். ஐஐடி வளாகத்தில் ஆந்த்ராக்ஸ் நோயால் மான்கள் இறந்துள்ளதாக வந்துள்ள தகவல் உண்மையில்லை. சமூக வலைத்தளங்களில் தவறான தகவல்களை பரப்பி வருகின்றனர்.

கடந்த 4, 5 ஆண்டுகளாக ஐஐடி வளாகத்தில் மான்கள் இருந்து வருகிறது. அதற்கு நாய்கள் கடித்து மான்கள் இறந்துள்ளதாகவும் தெரிவிக்கப்படுகிறது" என்றார்.

பின்னர் பேசிய சுகாதாரத்துறை செயலாளர் ஜெ. ராதாகிருஷ்ணன், “மாதிரிகள் அனுப்பப்பட்டுள்ளன, ஆந்த்ராக்ஸ் நோய் குணப்படுத்தக் கூடிய ஒன்று, அதனால் பதற்றமடைய வேண்டாம். கால்நடை நோய் குறித்து ஆய்வு செய்ய குழு அமைக்கப்பட்டுள்ளது" எனத் தெரிவித்தார்.

இதையும் படிங்க: தாங்களே உருவாக்கிய குளம் - கிராம மக்கள் கொண்டாட்டம்

ETV Bharat Logo

Copyright © 2024 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.