சென்னை தலைமைச் செயலகத்தில் தமிழ்நாடு தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவை சந்தித்து ஆர்.எஸ். பாரதி கோரிக்கை மனுவை வழங்கினார்.
பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய அவர், "இன்னும் சில மாதங்களில் சட்டப்பேரவைத் தேர்தல் வர இருக்கிறது. எனவே தேர்தல் பணியை தொடங்குவதவதற்கு முன்பு அனைத்துக் கட்சி கூட்டத்தை கூட்ட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
கடந்த தேர்தலில் ஒவ்வொரு மாவட்டத்திலும் ஐந்தாயிரத்திற்கு மேற்பட்டவர்கள் இரண்டு இடங்களில் பெயர்கள் இடம்பெற்றிருந்தது. இதுபோன்ற போலி வாக்களர்களை நீக்க வேண்டும் என்று தலைமைத் தேர்தல் அலுவலர் சத்யபிரதா சாகுவிடம் வலியுறுத்தப்பட்டுள்ளது" என்றார்.
மேலும், "தமிழ்நாட்டில் கரோனாவில் உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை அதிகமாக இருக்கிறது. இந்தச் சூழலில் பிகாரில் சட்டப்பேரவைத் தேர்தல் விரைவில் நடைபெறவுள்ளது. பிகாரில் கடைப்பிடிக்கப்படும் நடைமுறைகளைப் பின்பற்றி முறையாகத் தேர்தல் நடத்தப்பட வேண்டும்" என்று வலியுறுத்தினார்.
இதையும் படிங்க: சென்னை தொழிலதிபரை கடத்தி ரூ. 2 கோடி சுருட்டிய கும்பல்