இதுகுறித்து அவர் " குமரி கடல் பகுதிகளில் நிலவி வரும் வளிமண்டல மேலடுக்குச் சுழற்சி காரணமாக தமிழ்நாடு, புதுச்சேரியில் அடுத்த 48 மணி நேரத்திற்கு கடலோர மாவட்டங்களில் லேசான மழை பெய்ய வாய்ப்புள்ளது. குறிப்பாக ராமநாதபுரம், நெல்லை, தூத்துக்குடி, கன்னியாகுமரி உள்ளிட்ட மாவட்டங்களில் மிதமான மழைக்கு வாய்ப்பு உள்ளது.
சென்னையைப் பொறுத்தவரை வானம் மேகமூட்டத்துடன் காணப்படும். ஒரு சில பகுதிகளில் லேசான மழைக்கு வாய்ப்புள்ளது. மணிக்கு 40 முதல் 50 கிலோ மீட்டர் வேகத்தில் சூறைக்காற்று வீசும் என்பதால், மீனவர்கள் அடுத்த இரண்டு நாட்களுக்கு குமரிக் கடல் பகுதிகளுக்கு மீன் பிடிக்கச் செல்ல வேண்டாம். கடந்த 24 மணி நேரத்தில் அதிகபட்சமாக நெல்லை மாவட்டம் பாபநாசத்தில் 5 சென்டி மீட்டர் மழைப் பதிவாகி உள்ளது" என்றார்.
இதையும் படிங்க: தொடர் மழையால் ஹைவேவிஸில் கடும் மண் சரிவு; தொடர்பில்லாமல் தவிக்கும் மலைவாழ் மக்கள்!