ETV Bharat / state

போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை குறைத்தால் விற்பனை குறையும் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால் - காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

போதைப் பொருள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை குறைத்தால் போதைப் பொருள் விற்பனை குறைய வாய்ப்புள்ளதாக காவல் ஆணையர் சங்கர் ஜிவால் தெரிவித்துள்ளார்.

செய்தியாளரைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

author img

By

Published : Mar 19, 2022, 7:40 AM IST

சென்னையில் கடந்த ஒரு வாரத்தில் மட்டும் வெவ்வேறு இடங்களில் போதைப் பொருள் விற்பனை செய்து வந்த நான்கு மிகப்பெரிய போதைபொருள் கடத்தல் கும்பலை காவல் துறையினர் கைது செய்து, அவர்களிடமிருந்து பல கோடி ரூபாய் மதிப்பிலான போதை பொருள்களை பறிமுதல் செய்துள்ளனர்.

இது தொடர்பாக சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால், “சென்னையில் போதை பொருள்களை ஒழிக்க DAD (Drive against Drugs) என்ற ஆப்பரேஷன் மூலமாக போதை பொருள் கடத்தல் கும்பலை கைது செய்து வருகிறோம். குறிப்பாக அடித்தளம் வரை சென்று கடத்தல் கும்பலை ஒழித்து வருகிறோம்.

அதன்படி கடந்த ஜனவரி மாதம் முதல் தற்போது வரை 109 வழக்குகள் பதிவு செய்யப்பட்டு, 189 குற்றவாளிகள் கைது செய்யப்பட்டுள்ளனர். அவர்களிடமிருந்து 580 கிராம் கஞ்சா, 904 கிராம் மெத்தபெடைமைன், 10 கிலோ ஆசிஷ், எபிட்ரின் 10 கிலோ, நான்கு வாகனங்கள் ஆகியவை பறிமுதல் செய்யப்பட்டுள்ளன.

சட்டவிரோதமாக விற்பனை செய்யக்கூடிய 8 ஆயிரத்து 672 போதை மாத்திரைகளையும் பறிமுதல் செய்துள்ளோம். அதிகப்படியான போதை பொருள்கள் கூரியர் மூலமாக கொண்டு வரப்படுகிறது. அதை தடுக்க கூரியர் நிர்வாகிகளிடம் ஆலோசனை நடத்தியுள்ளோம்” என்றார்.

தொடர்ந்து பேசிய அவர், “ஆன்லைன் மூலமாக போதை மாத்திரைகள் விற்போரை கண்காணித்து, கைது செய்து வருகிறோம். குறிப்பாக சென்னையில் கஞ்சாவிலிருந்து புதுவிதமான போதை பொருள்களின் புழக்கம் சமீபகாலமாக அதிகரித்து இருப்பதால், அதை தடுக்க புதுவிதமான திட்டம் கொண்டு வரப்போகிறோம்.

அதாவது போதை பொருள்கள் பயன்படுத்துவோரின் எண்ணிக்கையை குறைத்தால் விற்பனை செய்பவரின் எண்ணிக்கை குறைந்துவிடும், அதற்காக விழிப்புணர்வு, கவுன்சிலிங் வழங்கி அவர்களை நல்வழிப்படுத்த சுகாதாரத்துறை, சமூக நலத்துறை ஆகியோருடன் இணைந்து இந்த திட்டம் தொடங்க இருக்கிறோம்.

மருந்தகங்களில் மருத்துவரின் பரிந்துரையில்லாமல் சட்டவிரோதமாக போதை மாத்திரைகள் விற்பனை செய்யும் நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்படும். ஆந்திராவிலிருந்து பெருமளவிலான போதை பொருள்கள் சென்னைக்கு கடத்தி வருவதால் அதை தடுக்க ஆந்திர காவல் துறைக்கு கடிதம் அனுப்பியுள்ளோம். அவர்களுடன் இணைந்து செயல்பட்டு வருகிறோம்.

செய்தியாளரைச் சந்தித்த காவல் ஆணையர் சங்கர் ஜிவால்

போதை பொருள் விற்பனை செய்வதால் இளைஞர்கள் மற்றும் சமூகம் பாதிக்கபடுவதால், அதை தடுக்க DAD ஆப்ரேஷன் தொடங்கப்பட்டு அதன்மீது மிகுந்த கவனம் செலுத்தி வருகிறோம். ஆந்திராவிலிருந்து சென்னைக்கு கொண்டு வரப்படும் கூரியர்களை மோப்ப நாய் உதவியுடன் தேடி வருவது போல, ஆந்திரா பார்டர்களிலும் மோப்ப நாய் கொண்டு பேருந்து மற்றும் காரை சோதனை நடத்த திட்டமிட்டுள்ளோம்” என தெரிவித்தார்.

மேலும், “இலங்கையிலிருந்து தமிழ்நாட்டிற்கு ஹெராய்ன் கடத்தி வரக்கூடிய முக்கிய கும்பலை கைது செய்ததால் ஹெராய்ன் கடத்தல் அழிக்கப்பட்டதாகவும், அதே போல முக்கிய கும்பலை தடுத்தால் சென்னையில் போதை பொருள்கள் நுழைய வாய்ப்பில்லை. பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்களுக்கு போதை பொருள்கள் தொடர்பாக விழிப்புணர்வு ஏற்படுத்தி வருகிறோம், தன்னார்வலர்களை நியமிக்கப்படவுள்ளனர்.

போதை பொருள் பயன்படுத்தும் மாணவர்களை எச்சரித்தால் வேறு தவறான பாதைக்கு செல்ல வாய்ப்பிருப்பதால் விழிப்புணர்வு மூலமாக திருத்த முயல்கிறோம். புதுவண்ணாரப்பேட்டையிலுள்ள காவல் குடியிருப்பில் கஞ்சா கும்பல் பிடிப்பட்டுள்ளது வெட்கப்பட வேண்டிய விஷயம். போதை பொருள்கள் விற்போர் குறித்த தகவல் அளிப்போரின் விவரங்களை பகிரும் நபர்கள் மீது கடும் நடவடிக்கை எடுக்கப்படும்.

பேருந்து நடத்துநரை பள்ளி மாணவர்கள் தாக்கும் சம்பவம் தொடர்பாக சம்மந்தப்பட்ட பேருந்து தடங்களில் காவலரை பாதுகாப்புக்காக அனுப்ப இருக்கிறோம். பள்ளிகள் மற்றும் பெற்றோர்கள் மூலமாக விழிப்புணர்வை ஏற்படுத்தி வருகிறோம்” என்றார்.

இதையும் படிங்க: 'கடத்தல் கும்பலைக் கடத்தல் செய்த கடத்தல் கும்பல்... அடடே': சினிமாவை மிஞ்சும் திருப்பங்களுடன் உண்மைச் சம்பவம்

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.