ETV Bharat / state

தமிழகத்தில் 330 கோயில்களுக்குச் சொந்தமான 3 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்பு! - Minister for Hindu Religious and Charitable

Encroached temple lands recovered: தமிழகத்தில் கடந்த 28 மாதங்களில் 653 திருக்கோயில்களுக்குச் சொந்தமான 5 ஆயிரம் ஏக்கர் ஆக்கிரமிப்பு நிலங்கள் மீட்கப்பட்டுள்ளன என்று இந்து சமயம் அறநிலையத் துறை சார்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

hindu religious
இந்து சமயம் அறநிலையத் துறை சார்பில் புத்தகம் வெளியீடு
author img

By ETV Bharat Tamil Nadu Team

Published : Sep 8, 2023, 5:04 PM IST

சென்னை: இந்து சமயம் அறநிலையத்துறை சார்பில் வெளியிட்டுள்ள செய்திக் குறிப்பில், "திருக்கோயிலுக்கு சொந்தமான சொத்துகள் ஆக்கிரமிப்பில் இருப்பதை அகற்றிட வேண்டும் என்று உத்தரவிட்டதற்கிணங்க, மீட்பு நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டன.

07.05.2021 முதல் 31.03.2022 வரை முதற்கட்டமாக 167 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.2,566.94 கோடி மதிப்பிலான சொத்துகள் மீட்கப்பட்டு, அதுகுறித்த முதல் புத்தகத்தை முதலமைச்சர் ஸ்டாலின் வெளியிட்டார். அதனைத்தொடர்ந்து இன்று வெளியிடப்பட்டுள்ள இரண்டாவது புத்தகத்தில் 01.04.2022 முதல் 31.03.2023 வரையிலான காலத்தில் ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட 330 திருக்கோயில்களுக்குச் சொந்தமான ரூ.1,692.29 கோடி மதிப்பிலான 3386.06 ஏக்கர் நிலம், மனை, கட்டடம் மற்றும் திருக்குளம் விவரங்கள் வெளியிடப்பட்டுள்ளன.

  • மாண்புமிகு முதலமைச்சர் திரு.@mkstalin அவர்களின் வழிகாட்டுதலின்படி, சென்னை - @tnhrcedept ஆணையர் அலுவலகத்தில் இன்று (08.09.2023) ஆக்கிரமிப்பிலிருந்து மீட்கப்பட்ட திருக்கோயில்களின் சொத்துகள் விவரம் அடங்கிய இரண்டாவது புத்தகத்தை வெளியிட்டோம். (1/2) pic.twitter.com/gZf6lHZ1IF

    — P.K. Sekar Babu (@PKSekarbabu) September 8, 2023 " class="align-text-top noRightClick twitterSection" data=" ">

அதேபோல், கடந்த 12 ஆண்டுகளாக திருக்கோயில்களுக்கு வரப்பெற்ற பல மாற்று பொன்னினங்களில் பயன்பாடற்ற பொன்னினங்களை ஓய்வுப் பெற்ற நீதிபதிகளின் முன்னிலையில் கணக்கெடுத்து ஒன்றிய அரசின் தங்க உருக்காலையில் உருக்கி, அந்தந்த திருக்கோயில்களின் பெயரில் தங்க முதலீடு பத்திரத்தில் முதலீடு செய்யப்பட்டு அதன் வட்டித்தொகை திருக்கோயிலின் மேம்பாட்டிற்கு பயன்படுத்தப்பட்டு வருகிறது.

அதன்படி திருச்செந்தூர், அருள்மிகு சுப்பிரமணிய சுவாமி திருக்கோயிலுக்கு வட்டித்தொகையாக ஆண்டிற்கு ரூ.2.25 கோடியும், இருக்கன்குடி, பெரியபாளையம், திருவேற்காடு மற்றும் மாங்காடு திருக்கோயில்களுக்கு வட்டித்தொகையாக ஆண்டிற்கு ரூ.2.06 கோடியும் கிடைக்கப்பெறுகிறது.

இப்படி திருக்கோயிலுக்கு வருமானங்களை பெருக்குகின்ற வகையில் எத்தகைய தடை வந்தாலும் உடைத்தெறிந்து இந்து சமயம் அறநிலையத்துறை செயலாற்றி வருகிறது. ஆன்மீகத்தை வைத்து தமிழக மண்ணில் அரசியல் செய்யலாம் என்று நினைத்த சிலருக்கு அது கை கூடவில்லை.

இந்து சமயம் அறநிலையத்துறையின் வரலாற்றில் இல்லாத அளவிற்கு 2 ஆண்டுகளில் அதிக எண்ணிக்கையிலான திருக்கோயில்களுக்கு குடமுழுக்கு நடைபெற்றுள்ளது. வரும் 10ம் தேதி நடைபெறும் மேற்கு மாம்பலம், அருள்மிகு காசி விஸ்வநாதர் திருக்கோயில் குடமுழுக்கு 1,000வது குடமுழுக்காகும்” என தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக, தமிழ்நாட்டில் ரூ.4250 கோடி மதிப்பில் கோயில் நிலங்கள் மீட்கப்பட்டுள்ளதாக இந்து சமய அறநிலையத்துறை அமைச்சர் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. மேலும், அண்ணாமலையார் கோயில் மற்றும் அம்மணி மடத்திற்கு சொந்தமான கோயில் நிலங்களும் மீட்கப்பட்டன.

இதையும் படிங்க:‘சனாதனம் குறித்த புரிதல் உதயநிதி ஸ்டாலினுக்கு இல்லை’ - கிருஷ்ணசாமி விமர்சனம்!

ETV Bharat Logo

Copyright © 2025 Ushodaya Enterprises Pvt. Ltd., All Rights Reserved.