திருவள்ளூர் மாவட்டம் ஆவடி மாநகராட்சியில் அண்மையில் தூய்மை குறித்த பல்வேறு முயற்சிகள் மேற்கொள்ளப்பட்டுவருகின்றது. அந்த வகையில் குப்பைகளை உரமாக்குதல், மழைநீர் சேகரிப்பு, நகரை தூய்மையாக வைத்துக்கொள்ளுதல் போன்ற ஜந்து விதமான தலைப்புகளில் மாநகராட்சி ஆணையர் ரவிசந்திரன் தலைமையில் மாபெரும் கோலப்போட்டி நடைபெற்றது.
இதில், ஆவடியின் பல்வேறு பகுதிகளைச் சார்ந்த 600க்கும் மேற்பட்ட பெண்கள் கலந்து கொண்டு குப்பைகளை உரமாக்குதல், மாடித்தோட்டம் அமைத்தல், மழைநீர் சேகரிப்பு உள்ளிட்ட தலைப்பை முன்னிறுத்தி கண்கவரும் வகையிலான வண்ணமிகு கோலங்களை வரைந்தனர். இதனை அமைச்சர் பாண்டியராஜன், மாநகராட்சி அலுவலர்கள் உள்ளிட்டோர் பார்வையிட்டனர்.
இதில், முதல் பரிசாக இரண்டு கிராம் தங்க நாணயம், இரண்டாம் பரிசாக ஒரு கிராம் தங்கம், மூன்றாம் பரிசாக 10 பெண்களுக்கு தலா 5 கிராம் வெள்ளி நாணயங்களும் வழங்கப்பட்டன.
இதையும் படிங்க: டிஎன்பிஎஸ்சி தேர்வுகளில் மாற்றம்; தமிழ்நாடு அரசுப் பணியாளர் தேர்வாணையம் அறிவிப்பு