தமிழ்நாடு சட்டப்பேரவையில் முன்னாள் அமைச்சர் ராமசாமி படையாட்சியர் உருவப் படத்தை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்தார். இந்நிகழ்ச்சியில் சபாநாயர் தனபால், துணை முதலமைச்சர் ஓ.பன்னீர்செல்வம், எதிர்க்கட்சித் தலைவர் மு.க. ஸ்டாலின், திமுக பொருளாளர் துரைமுருகன் உள்ளிட்டோர் பங்கேற்றனர்.
முதலமைச்சர் ஏற்கனவே அறிவித்ததன் பேரில் தற்போது ராமசாமியின் உருவப் படத்தை திறந்து வைத்துள்ளார். இப்படம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5ஆவது, 6ஆவது பாகத்துக்கு இடையே அமைக்கப்பட்டுள்ளது.
ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார், காமராசர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், ஜெயலலிதா திருவுருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.
Intro:Body:
தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாட்சியின் உருவப் படத்தை இன்று மாலை முதல்வர் திறக்க உள்ளார்.
தமிழக அரசியல் வரலாற்றில் முக்கியத்துவம் வாய்ந்தவர்கள் மட்டும் முதல்வராக இருந்த தலைவர்களின் உருவப்படங்கள் தமிழக சட்டப்பேரவையில் இடம்பெற்றுள்ளன.
சட்டபேரவையில் உள்ள காந்தியடிகள் படத்தை 1948 ஜூலை 24-ஆம் தேதி அப்போதைய கவர்னர் ஜெனரல் ராஜாஜி திறந்து வைத்தார்.
ராஜாஜியின் உருவப்படத்தை 1948ம் ஆண்டு ஆகஸ்ட் 23 ம்தேதி பிரதமர் நேரு திறந்து வைத்தார் .
திருவள்ளுவர் படத்தை 1964 ஆம் ஆண்டு மார்ச் 22 இல் அப்போதைய குடியரசுத் துணைத் தலைவராக இருந்த ஜாகீர் உசேன்திறந்து வைத்தார்.
முன்னாள் முதல்வர் அண்ணாவின் படத்தை 1969 ஆம் ஆண்டு மார்ச் 22ம் தேதி பிரதமர் இந்திரா காந்தி திறந்து வைத்தார்
காமராஜர் படத்தை 1977 ஆம் ஆண்டு ஆகஸ்ட் 18 இல் குடியரசுத் தலைவர் நீலம் சஞ்சிவ் ரெட்டி திறந்து வைத்தார்.
எம்ஜிஆர் உருவப்படத்தை 1992 ஆம் ஆண்டு ஜனவரி 31ஆம் தேதி முதல்வர் ஜெயலலிதா திறந்து வைத்தார்
முத்துராமலிங்கத் தேவர், பெரியார், அம்பேத்கார், காயிதேமில்லத் .,ஆகியோரின் உருவப்படங்களை ஒரே நேரத்தில் 1980ஆம் ஆண்டு ஆகஸ்டு 9 இல் அப்போதைய கேரள ஆளுநர் ஜோதி வெங்கடாசலம் திறந்து வைத்தார்.
சட்டப்பேரவையில் ஏற்கனவே 10 தலைவர்களின் உருவப்படங்கள் உள்ள நிலையில் 11வது படமாக மறைந்த முதல்வர் ஜெயலலிதாவின் திருவுருவப்படத்தை தமிழக முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமி, துணைமுதலமைச்சர் பன்னீர்செல்வம் 2018 ஆம் ஆண்டு பிப்ரவரி 12ம் தேதி திறந்து வைத்தனர் .
அதைத் தொடர்ந்து இன்று மாலை 5:30 மணிக்கு ராமசாமி படையாட்சியின் புகைப்படம் திறந்து வைக்கப்படவுள்ளது...
தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் திருவுருவப்படம் இன்று மாலை முதலமைச்சரால் திறந்து வைக்கப் பட உள்ளது.
வன்னியகுல சத்திரிய பொதுச் சொத்து பாதுகாப்பு மற்றும் பராமரிப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டதற்காக கடந்த ஆண்டு அக்டோபரில் அகில இந்திய வன்னியகுல சத்திரிய சங்கங்களின் பேரமைப்பு சார்பில் சென்னையில் முதலமைச்சருக்கும் துணை முதலமைச்சருக்கும் பாராட்டு விழா நடைப்பெற்றது. அந்த விழாவில் பேசிய முதலமைச்சர், தமிழக சட்டப்பேரவையில் ராமசாமி படையாச்சியாரின் முழு உருவ படம் திறந்துவைக்கப்படும் என அறிவித்திருந்தார். ஏற்கனவே ராமசாமி படையாச்சியாருக்கு தமிழக அரசு சார்பில் கடலூர் மாவட்டம் மஞ்சக்குப்பத்தில் ரூ.2.15 கோடி மதிப்பீட்டில், 0.69 ஹெக்டேர் நிலத்தில் அமைக்கப்படவுள்ள நினைவுமண்டபத்திற்கு முதலமைச்சரால் அடிக்கல் நாட்டப்பட்டுள்ளது. அதே போல் ராமசாமி படையாச்சியாரின் பிறந்த நாளான செப்டம்பர் 16 ஆம் தேதி அரசு விழாவாக கொண்டாடப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த நிலையில், ஏற்கனவே அறிவித்தப்படி ராமசாமி படையாச்சியாரின் திருவுருவ படம் சட்டப்பேரவையில் முதலமைச்சரால் திறந்துவைக்கப்படவுள்ளது. இந்த படம் சட்டப்பேரவையில் திமுக உறுப்பினர்கள் அமரும் 5 வது மர்றும் 6 வது பாகத்துக்கு இடையே அமைக்கப்படவுள்ளது குறிப்பிடத்தக்கது.
ஏற்கனவே திருவள்ளுவர், மகாத்மா காந்தி, அம்பேத்கர், பெரியார்,காமராசர், ராஜாஜி, அண்ணா, எம்.ஜி.ஆர், காயிதே மில்லத், முத்துராமலிங்க தேவர், ஜெயலலிதா திருவுருவ படங்கள் வைக்கப்பட்டுள்ளது.
Conclusion: